ரைசா என்னிடம் பணம் கேட்டு மிரட்டுகிறார் - டாக்டர் பைரவி பரபரப்பு புகார்..!

Advertisement

நடிகை ரைசாவின் முகத்தில் இருக்கும் வீக்கம் குறித்து சோசியல் மீடியாவில் பல தகவல்கள் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து ரைசாவும் அவரது தரப்பில் இருந்து நடந்ததை இன்ஸ்ட்டாவில் பகிர்ந்து இருந்தார். நடிகை ரைசா ஒரு மாடல் அழகியாக விளங்கி விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார்.

அதன் பின்னர் ஹரிஷ் கல்யாணுடன் சேர்ந்து பியார் பிரேமா காதல் திரைப்படத்தில் நடித்ததை அடுத்து பல படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவரது முகத்தில் கொப்பளம் இருப்பது போன்ற புகைப்படத்தை இணையதளத்தில் பகிர்ந்து டாக்டர் பைரவி, தான் கேட்காத தோல் சிகிச்சையை செய்ததால் தன் முகம் இப்படி வீங்கிவிட்டதாக கூறியிருந்தார். அது மட்டும் இல்லாமல் அவரை சந்திக்க முற்பட்டபொழுது வெளியூருக்கு பைரவி சென்றுவிட்டதாக அவரது உதவியாளர் கூறியுள்ளார்.

இது குறித்து தோல் சிகிச்சை டாக்டரான பைரவி சில உண்மையான தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, இந்த சிகிச்சையை ரைசா ஏற்கனவே என்னிடம் ஒரு முறை செய்திருக்கிறார். dermal fillers சிகிச்சை எடுத்துக்கொண்டால் ஒரு வாரம் முகம் வீக்கமாக தான் இருக்கும். ரைசா வீங்கிய முகத்தை ஆதாரமாக வைத்து கொண்டு என்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக டாக்டர் பைரவி குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு ரைசா தனது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இப்பொழுது என்னால் பதிலளிக்க முடியாது என்று கூறி மறுத்துள்ளார்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>