நீர்மூழ்கிக் கப்பலில் உயிரிழந்த வீரர்களின் கடைசி நிகழ்வு வீடியோ வெளியீடு

by Ari, Apr 29, 2021, 06:33 AM IST

இந்தோனேசியாவில் 53 கப்பற்படை வீரர்கள் மரணம் அடைந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்பு அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்தோனேசியா நாட்டின் கடற்படைக்கு சொந்தமான, கே.ஆர்.ஐ. நங்கலா-402 நீர்மூழ்கிக்கப்பல் கடந்த 21 ஆம் தேதி பாலித்தீவின் வட பகுதியில் 53 வீரர்களுடன் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டு அறையின் ரேடார் தொடர்பில் இருந்து திடீரென நீர்மூழ்கி கப்பல் மாயமானது.

அதனைத் தொடர்ந்து, இந்தோனேசிய கடற்படை நீர்மூழ்கி கப்பல் மாயமானதாக அறிவித்து தேடுதல் பணி நடைபெற்றது. 6 போர்க்கப்பல்கள் உள்பட 20 கப்பல்கள், 4 விமானங்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டர் ஆகியவை மூலம் தேடுதல் வேட்டையில் நடத்தப்பட்டது. இதனிடையேஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் மீட்பு பணியில் இறங்கின.

காணாமல் போன நீர்மூழ்கிக்கப்பல், மூழ்கியதாக கருதப்படுகிற இடத்தில் இருந்து, கப்பலின் சில பொருட்களை மீட்புக்குழுவினர் கண்டெடுத்ததை தொடர்ந்து, நீர்மூழ்கி கப்பல் கடலில் மூழ்கி விட்டதாகவும், அதில் இருந்த 53 வீரர்கள் உயிரிழந்துவிட்டதாகவும் இந்தோனேசிய கடற்படை அறிவித்தது.

53 கப்பற்படை வீரர்கள் உயிரிழந்த நிலையில், அவர்கள் கடைசியாக பாடிய பாடல், சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. குழுவாக அமர்ந்து, டில் வீ மீட் அகெய்ன் எனும் பாடலை, உயிரிழந்த வீரர்கள், உற்சாகத்துடன் பாடி உள்ளனர். இந்தக் காட்சிகளை பலரும் தற்போது உருக்கத்துடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

You'r reading நீர்மூழ்கிக் கப்பலில் உயிரிழந்த வீரர்களின் கடைசி நிகழ்வு வீடியோ வெளியீடு Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை