இன்னும் பத்து வருஷம் கழிச்சு கேட்டாலும் அனிதா அந்த சம்பவத்தை மறக்க மாட்டாங்க - பிக்பாஸ் மூன்றாம் நாள் காட்சிகள்..

Advertisement

பிக்பாஸ் 4 நாள் 2

முந்தின நாளே இன்னும் முடியல. முந்தாநாள் நியூஸ் வாசிச்ச அனிதா நேத்து யூட்யூப் வாய்ஸ் ஓவர் ஆர்ட்டிஸ்ட்டா பர்பாமன்ஸ் கொடுத்தாங்க. ஒரு சின்ன தடை கூட இல்லாம என்ன ஒரு ப்ளோ. அதுவும் அட்டகாசமான ஸ்கிரிப்ட் கூடவே லைட்டா ஹவுஸ்மேட்டை கலாய்ச்சு செஞ்சது செம்ம. பிக்பாஸ் பொறுத்தவரைக்கும் உங்க திறமைகள் தான் உங்களுக்குத் தொடர்ந்து அந்த நாளின் எபிசோட்ல வர வாய்ப்பு கொடுக்கும்.

ஏன்னா மொத்தம் 16 பேர் இருக்கற இடத்துல நீங்க ஹைலைட்டா தெரியுனும்னா உங்க திறமை தான் உங்களை காப்பாத்தும். அந்த வகையில் அனிதா செம்ம ப்ளானோட வந்துருக்காங்க. கமல் சார், இல்ல பிக்பாஸே இதை வச்சு கண்டண்ட் தேத்துவாங்கனு நினைக்கிறேன். சோ அனிதா ரொம்ப ஸ்ட்ராங்கான கண்டஸ்டண்ட். இந்த ஆஜித்தும் எல்லாரையும் கூப்பிட்டு வச்சு தினம் ரெண்டு பாட்டு பாடலாம்.

அப்புறம் கேப்ரியல்லாவோட கதை.. வேல்முருகனோட கதையைக் கேட்டதுக்கு அப்புறம் மத்த யாரோடதும் கஷ்டமாகவே இருக்காது. தான் ஒல்லியா இருந்தது தான் எனக்கு வாய்ப்பு கிடைக்காம போச்சுனு ஒரு காரணம் சொன்னாங்க. ஓக்கே ரகம்.லிவிங் ஏரியால பிக்பாஸ் கொடுத்த அனுப்பின இன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் எதையோ படிச்சுட்டு இருந்தாரு. ஆனா அந்த குரல் கேக்காம, அங்க கேமரா போகாம, ரேகாவும், அனிதாவும் கிசுகிசுனு பேசிட்டு இருந்ததைக் காட்டும் போதே, இது ஏதோ பஞ்சாயத்துடானு பல்பு எரிஞ்சுது.

கிசுகிசு குரல் கொஞ்சம் சத்தமா வரவும், அங்க இருந்த சுரேஷ், ஷ்ஷ்ஷ், கொஞ்ச நேரம் பேசாதீங்க, ஆரி சொல்றது எதுவும் கேக்கலேன்னு சொல்ல, சார், அவங்க பேசறது கேக்கலேன்னா, நீங்க அங்க தான் போய் கேக்கனும் கவுண்ட்டர் கொடுத்தது அனிதா. அப்பவாவது சுரேஷ் கம்னு இருந்திருக்கலாம். விதி யாரை விட்டது. அதுக்கப்புறம் அனிதா பேச்சை நிறுத்தவே இல்லை. இன்னும் நிறையப் பேசி, சொன்னதையே சொல்லி சுரேஷை வெறுப்பேத்திட்டு இருந்தாங்க.

பெண்கள் பொறுத்தவரைக்கும் எதையும் மறக்கவும் மாட்டாங்க, மன்னிக்கவும் மாட்டாங்க. இன்னும் 10 வருசம் கழிச்சு அனிதாவும், சுரேஷும் மீட் பண்ணினாங்கன்னா கூட, அன்னிக்கு நியூஸ் ரீடர்ஸ்க்கு எச்சி தெறிக்கும்னு சொன்னீங்க இல்லனு அனிதா கேப்பாங்க. அதுதான் பெண்கள். புவர் பெலோ சுரேஷுக்கு இது தெரியாம போச்சு. எச்சி தெறிக்கிற பிரச்சினையில் அனிதாவே கூப்பிட்டுக் கைகொடுத்து, சாரி சொல்லி சமாதானம் ஆனாலும், நாம எந்த தப்பும் செய்யலையே, எதற்குச் சாரி சொல்லனும்னு அனிதாவுக்கு பல்பு எரிஞ்சுருக்கும்னு நினைக்கிறேன். அதோட விளைவு தான் இது. மொத்தத்துல சுரேஷுக்கு கட்டம் சரியில்ல. அவர் டென்சன் ஆகி ரியாக்ட் செய்யறது வேற அனிதாவுக்கு பிடிச்சுருக்கு. ஜாலியா வச்சு செய்யறாங்க. பார்ப்போம். அனிதாக்குள்ள ஒரு ஜெனிலியா இருக்கறதா அருண் சொல்லிருந்தாரு, இல்ல 2 வொய்.விஜயாவும், 3 சி ஆர் சரஸ்வதியும் இருக்காங்க.

லைட் எல்லாம் அணைக்கும் போது ஷிவானியும், ரம்யாவும் வெளிய ஓடி வந்து கைதட்டிட்டு இருந்தாங்க. பச்ச மண்ணுங்க சார்.

நாள் 3

தினசரி வழக்கமா பாட்டு போடறதுக்கு முன்னாடி எந்திரிச்சு வொர்க் அவுட் பண்ணிட்டு இருக்காங்க. முக்கியமா பெண்கள். பாட்டு போட்ட உடனே குடுகுடுனு ஓடி வந்து லீட் எடுத்து ஆடினது அனிதா தான். அதுவும் நல்லாவே ஸ்டெப்ஸ் போட்டு ஆடினாங்க. ஷிவானி வழக்கம் போல தனியா ஆடிட்டு இருந்தாங்க.

ரேகாவை கதை சொல்லக்கூப்பிட, அவங்க க்ஷ்டமில்லாம சொல்லி முடிச்சாங்க. விஜய் டிவில இருக்கற ஹெல்பர் கூட இந்த கதையை ரிஜக்ட் பண்ணிருவான். உள்ள வந்த ஷிவானி எனக்கு ஒரே போரா இருக்கு, இந்த கதை எற்கனவே என்கிட்ட சொல்லிட்டாங்க. ரிபீட் மோட்ல இருக்குனு சொல்ல, ஹா ஹா ஹாசினி மாதிரி சிரிச்சுட்டு இருந்தாங்க ரம்யா...அடுத்து சம்யுக்தா, ஆரி, ரியோ மூணு பேரும் கதை சொன்னாங்க. வராத அழுகையை வரவைக்க எவ்வளவோ முயற்சி செஞ்சும் அழுகை வராமலே போய்டுசசு.

மறுபடியும் கிச்சன். அப்புறம் சொல்ல மறந்துட்டேனே, சனம் கேரளா ஸ்டைல் புடவை கட்டிட்டு அழகா இருந்தாங்க. திருத்தமான, பாந்தமான முகமா இருந்தாலும் அவங்களுக்குள்ள ஒரு காந்திமதி இருக்கிறதா தோணிட்டே இருக்கு.

மறுபடியும் சுரேஷ் மட்டும் கிச்சன்ல தனியா இருக்க, கிச்சன் அடுப்பை க்ளோசப்ல காமிச்சாரு பிக்பாஸ். கேப்டன் ரம்யாவை கூப்பிட்ட சுரேஷ் கம்ப்ளையிண்ட் செய்ய , உடனே அனிதா, ரேகா, சனம் எல்லாரையும் உள்ள கூப்பிட்டு கேக்க, ஒரே களேபரம். சனம் ஏதோ சொல்ல வர, ஒரு நிமிஷம்மா, ஒரு நிமிஷம்னு யாரையும் பேச விடாம பேசிட்டு இருந்தவரு, ஒரு ப்ளோல சனம் ஷெட்டியை பார்த்து, நீங்கக் கூட அடல்ட் தான், நீங்க என்ன கிழவியானு கேக்க, உங்களுக்கு நான் தான் கிடைச்சேனானு சனம் ஜெர்க் ஆனாங்க. அனிதாவுக்கு அப்புறம் அடுத்த எதிரியை சம்பாதிச்சுட்டாரு சுரேஷ்....

நாளை பார்ப்போம்.

Advertisement
மேலும் செய்திகள்
hindi-bigg-boss-14-new-strategy
எல்லை மீறும் இந்தி பிக் பாஸ்.. ராக்கி மற்றும் அபிநவ்வின் புதிய நெருக்கம்.. திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்..
aari-updates-in-bigg-boss
பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கு அடித்த ஆஃபர்.. 105 நாளில் 1 கோடி சம்பளம்.. வாயைப்பிளக்கும் ரசிகர்கள்..
biggboss-season-4-winner-updates
பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார் தெரியுமா?? இணையதளத்தில் கசிந்த தகவல்..
suresh-chakravarthy-reason-for-not-coming-in-bigg-boss
மொட்டை தாத்தாவை தெரிந்தே ஒதுக்கியதா விஜய் டிவி?? சலசலக்கும் நெட்டிசன்கள்..
what-happened-in-promo3-biggboss
மீண்டும் பிக் பாஸில் அழுகை குரல்.. நடிகை ரேகாவின் உருக்கமான பதிவு.. வெளியான மூன்றாவது ப்ரோமோ..
what-happened-in-bigg-boss-on-98thday
டிக்கட் டூ பினாலே வின்னர் சோமு.. ஆரி சேவ் என அறிவித்த கமல்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
bigg-boss-4-day-93-review
தொடரும் டிக்கட் டூ பைனல் டாஸ்க் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது?நாள் 93
what-happened-in-biggboss4-on-92th-day
கடைசி வார நாமினேஷன்.. டிக்கெட் டூ பைனல் டாஸ்க்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
what-happend-in-biggboss-on-91th-day
ஆண்டவர் வருகை.. ஆஜித் வெளியேற்றம்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
bigg-boss-4-day-90-review
ஆண்டவர் வருகை ,பாலா -ஆரி மோதல் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது ?நாள் 90
/body>