பிக் பாஸின் புதிய அப்டேட்..வைல்ட் கார்ட் என்ட்ரியாக வருவது யார் தெரியுமா?

wild card entry in bigg boss season 4

by Logeswari, Oct 8, 2020, 11:47 AM IST

பிக் பாஸ் சீசன் 4 கடந்த ஞாயிற்று கிழமை மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கியது. 3 நாட்களின் எபிசோடுகள் வெளியாகி மக்கள் இடையே பெரும் வரவேற்பை அடைந்துள்ளது. அடுத்த கட்ட சண்டை காட்சிகளுக்காக மக்கள் மிகவும் ஆர்வமாக காத்துகொண்டு இருக்கின்றனர்.

இந்நிலையில் முதல் நாமினேஷனுக்கு சனம் ஷெட்டி, கேபிரியலா, சம்யுக்தா மற்றும் ரேகா ஆகியவர்களை சக போட்டியாளர்கள் கலந்து பேசி தேர்வு செய்தனர். இன்றைய ப்ரோமோவில் அனிதா சம்பத் வாழ்க்கையில் நிகழ்ந்த சோகங்களை மனம் உருகி வெளிப்படுத்துகிறார். பிறகு 'எனது பெயரை கெடுத்துக்க விரும்பவில்லை' என்று அழுது கொண்டு மற்ற போட்டியாளர்களிடம் கூறுகிறார். இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சி அழுகை,சோகம் ஆகியவை கலந்து தான் இருக்கும் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.ஒவ்வொரு சீசனிலும் வைல்ட் கார்ட் என்ட்ரி என்பது கட்டாயமாக இருக்கும்.கடந்த சீசனில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வனிதா வந்து சில பல சர்ச்சைகளை கிளப்பினார். அதே போல் இந்த சீசனிலும் வைல்ட் கார்ட் என்ட்ரி உறுதியாக இருக்கும் என்று தெரியவந்தது. இதனையடுத்து வைல்ட் கார்ட் என்ட்ரி என்ற பட்டத்தோடு 17வது போட்டியாளராக பிக் பாஸ் வீட்டில் கால் எடுத்து வைக்க போவது தொகுப்பாளர் அர்ச்சனா என்று தகவல்கள் தீயாக பரவிவருகிறது.

More Bigg boss News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை