தமிழகத்தின் முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்...!

by Balaji, Oct 8, 2020, 11:30 AM IST

108 என்ற எண் பட்டி தொட்டிகளில் உள்ள மக்களிடம் கூட மனதில் பதிந்து இருக்கிறது மருத்துவ உதவிக்கான ஏற்பாடுகளைச் செய்யும். ஆபத்தான நிலையில் இருக்கும் ஒரு நோயாளியைச் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லும்போது இந்த ஆம்புலன்சை ஒட்டி செல்பவர்களின் செயல்பாடு பிரமிக்கத்தக்கது.இந்த ஆபத்தான அதேசமயம் அதி உன்னதமான வேலையில் பெண்கள் ஈடுபடுவது என்பது சாதாரணமான ஒன்றல்ல ஆனால் அதிலும் களமிறங்கி தமிழகத்தின் முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை சேர்ந்த வீரலட்சுமி (30)

இரண்டு குழந்தைக்குத் தாயான வீரலட்சுமி தனது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். இவரது கணவர் கால் டாக்ஸி ஓட்டுநராக உள்ளார். கடந்த 3 வருடங்களாகத் தனது கணவருக்கு உதவியாகக் கால் டாக்ஸி ஓட்டி வந்துள்ளார்.கொரோனா தொற்று காலத்தில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர் பணிக்கு ஆட்கள் தேவை என்பதை அறிந்து வீரலட்சுமி விண்ணப்பித்து இருக்கிறார்.

கடந்த மாதம் இவருக்கு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பணி நியமனம் வழங்கப்பட்டது. தற்போது இவர் திருவள்ளூர் மாவட்டத்தில் பணிபுரிகிறார். ஆம்புலன்ஸ் டிரைவர் என்பதே கொஞ்சம் ரிஸ்க்கான வேலை. அதிலும் இவருக்கு ஒதுக்கப்பட்ட பணி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் உள்படப் பல நூறு நோயாளிகளை ஏற்றிச் செல்வது தான்.108 இல் பெண் டிரைவரா என்று பலரும் வியந்து பாராட்டிய நேரத்தில் தமிழகத்தில் முதல் 108 பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தாம் தான் என்பது இவருக்கு தெரிய வந்திருக்கிறது.

ஆம்புலன்ஸ் வண்டிகளை அதிவேகமாக ஓட்டுவதில் எனக்கு எந்த பயமும் கிடையாது. என்னைப்போலவே எல்லா பெண்களும் மக்களுக்குச் சேவை செய்யும் விதத்தில் பல்வேறு வேலைகளில் சேர வேண்டும் என்பதே எனது ஆசை என்கிறார் தைரியலட்சுமியான இந்த வீரலட்சுமி !ஒவ்வொரு பெண்களும் ஒவ்வொரு விசயத்திலும் சாதித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். வீரலட்சுமியின் பெயரும் அந்த லிஸ்டில் உண்டு.

Get your business listed on our directory >>


READ MORE ABOUT :

More Tamilnadu News