பிக் பாஸின் மூன்றாவது நாளான நேற்று எமோஷனல்,நக்கல்,நய்யாண்டி, கொஞ்சம் நடனம் ஆகியவை கலந்து பார்வையாளரின் கண்களுக்கு ஒரு 60% விருந்து அளித்தது என்று கூறலாம்.
எல்லா பிக் பாஸ் சீசனின் தொடக்கத்தில் ஜாலியாகவும்,சிரிப்பாகவும் தான் இருக்கும் ஆனால் இந்த சீசன் தொடக்கத்திலே எமோஷனல் அழுகை என்று சற்று சுமாராக தான் செல்கிறது. மக்கள் அனைவரும் எப்பொழுது சண்டை சூடுபிடித்து அடுத்த கட்டத்துக்கு போகும் என்று ஆவலுடன் காத்துகொண்டு இருக்கின்றனர். அனிதா சுரேஷ் சக்கரவர்த்தியை தேவை இல்லாமல் சண்டைக்கு தூண்டி வம்புக்கு இழுக்கிறார் போல் தோன்றுகிறது. அனிதா தன்னை சின்ன வனிதாவாக நினைத்து களம் இறங்கிட்டார் என்று மக்கள் விமர்சனத்தில் கூறுகின்றனர். ஒருபக்கம் ஹவுஸ் மெட்ஸ் அனைவரும் தங்களது வாழ்க்கை கதையை சொல்லி சோகத்தில் ஆழ்த்துகின்றனர்.
மிடில் கிளஸில் வாழும் இளஞர்கள் எவ்வாறு தன் வாழ்க்கையில் முன்னேற கஷ்டப்படுகிறார்கள் என்று ஆரியின் வாழ்க்கையில் நாம் கற்றுக்கொள்ளலாம். அவரின் கதை இந்த கால இளஞர்களின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக இருக்கும். சோகமாக செல்லும் பிக் பாஸ் விறுவிறுப்பான கதை களத்துக்குள் நுழையும் வரை பொறுமையாக காத்துகொண்டு இருக்க வேண்டிய சூழலில் இருக்கிறோம்.