பிக்பாஸ் 4 அனிதாவுடன் மோதும் மொட்டை சுரேஷ்.. அழுதபடி முறையிட்ட போட்டியாளர்..

BigBoss4 Mottai Suresh Fight with anitha

by Chandru, Oct 8, 2020, 17:47 PM IST

கமல்ஹாசன் விஜய் டிவியில் நடத்தும் பிக்பாஸ்4 கடந்த 4ம் தேதி தொடங்கியது. மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.இன்று இரவு ஒளிபரப்பாகவுள்ள நிகழ்ச்சியில் மொட்டை சுரேஷுக்கும் ,அனிதாவுக்கும் இடையே நடக்கும் மோதலில் என்ன நடக்கப்போகிறது என்பது பற்றிய புரோமோ டிவிட்டர் பக்கத்தில் வெளியாகி இருக்கிறது.

என் டீமிலிருந்து சுரேஷ் போவதை நான் விரும்பவில்லை என்று நடிகை ரேகா,கூற மொட்டை சுரேஷை கட்டிப்பிடித்துக்கொண்டு சனம் கூறும்போது, இவர் டீமல் இல்லன்னா நானும் இருக்க மாட்டேன் என்றபடி இருவரும் அனிதா அருகே வருகின்றனர். திடீரென்று அங்கு அமர்ந்திருக்கும் அனிதாவைப் பார்த்து, எனக்கு இந்த மேடத்தோடுதான் ப்ராப்ளம் என்று சுரேஷ் கூற அதைக் கேட்டு அதிர்ச்சி அடையும் அனிதா எழுந்து சென்று அறந்தாங்கி நிஷாவிடம் அழுதபடி முறையிடுகிறார், இவர்களுக்குள் என்ன மோதல் நடந்தது என்பது இன்று இரவு தெரியும்.

ஏற்கனவே வெளியான பிக்பாஸ் புரோமோவில் அடுத்தவாரம் எலிமினேஷனில் வெளியேறப் போகும் ஒரு போட்டியாளருக்கு 4 பேர் பெயரை அறிவித்துள்ளனர். அவர்களை பாலாஜி முருகதாஸ் தேர்வு செய்திருக்கிறார். ரேகா, சனம் செட்டி, சம்யுக்தா, கேப்ரில்லா ஆகிய 4 பேர்களின் பெயரை எலிமினேஷனுக்கு பாலாஜி பரிந்துரைக்க அதை பிக்பாஸ் உறுதி செய்கிறார்.

4 பேரையும் எதற்காக எலிமினேஷனுக்கு பாலாஜி தேர்வு செய்தார் என்பதற்கான காரணங்கள் ஏற்கக்கூடியதாக இருக்கிறதா என்பதை ஆடியன்ஸ் தான் தீர்மானிக்க வேண்டும். புரோமோ வெளியானதிலிருந்தே சனம் செட்டி அல்லது ரேகா இவர்களில் ஒருவர் வெளியேறுவார்கள் என்ற தர்க்கம் நடந்து வருகிறது. இவர்களின் தர்கத்துக்கு சீக்கிரமே விடை கிடைத்துவிடும்.

More Bigg boss News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அதிகம் படித்தவை