அனிதா பிரச்சனை பெரும் பிரச்சனை.. சண்டை பிடிக்க காரணம் தேடும் சனம் ஷெட்டி.. பிக் பாஸ் வீட்டின் நான்காம் நாள்!

what happened in Bigg boss house at 4th day

by Logeswari, Oct 9, 2020, 16:54 PM IST

நேற்று பிள்ளையார் சுழிப் போட்டு சண்டையில் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக அரங்கேறியது.

ஆரம்பத்தில் இருந்தே அனிதா அவர்களுக்கும் நம் 'மொட்டை சுரேஷுக்கும்' ஒத்துப்போக வில்லை.யார் மேல் தப்பு?யார் சண்டை இழுப்பது என்று பார்வையாளர்களுக்கே குழப்பமாக உள்ளது.வெளியில் மக்கள் எப்படி அனிதாவை வனிதா விஜயகுமாருடன் ஒப்பிட்டு பேசுகிறார்களோ பிக் பாஸ் போட்டியாளரான சோமு ஷேகர் அனிதாவிடம் நீங்கள் செய்வது எல்லாம் வனிதா போல் இருக்கிறது என்று விளையாட்டுதனமாக கூறினார். ஆனால் அனிதா சோமு கூறியதிலிருந்து அழுது கொண்டு 'நான் தப்பு செய்யவில்லை' என்று புலம்ப ஆரம்பித்துவிட்டார்.நமது விஜய் டிவியின் செல்ல குட்டியான ரியோ நேற்று தான் வாயை திறந்து பேசினார்.

அனிதாவிடம் சோமு உங்களை பார்த்து ஒரு தடவை தான் சொன்னார்.ஆனால் நீங்கள் மறுபடியும் சொல்லி மக்களின் மனதில் பதியவைப்பது போல் பேசுகிறீர்கள் என்று 100% சரியாக நெற்றியில் அடித்தது போல் பளிச்சுனு கூறினார்.தினமும் சமையல் செய்யும் ஆட்களில் இருந்து தான் ஏதாவது சண்டை பிறக்கிறது.ஒரு பக்கம் மற்ற ஹவுஸ் மெட்ஸ் தங்களின் வாழ்க்கையில் நடந்த துயர சம்பவத்தை பகிர்ந்து கொண்டு இருந்தனர்.பிக் பாஸ் நிகழ்ச்சி சுமாராக தான் செல்கிறது எப்பொழுது கவர்ச்சி நாயகியான ஷிவானி,மற்றும் ரம்யா பாண்டியனின் கதை களம் தொடங்கும் என்று அனைவரும் ஆவலாய் காத்து கொண்டு இருக்கின்றனர்.More Bigg boss News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை