இட்லி எல்லாம் ஒரு சாப்பாடா? கிண்டலடித்தவருக்கு சசி தரூர் எப்படி பதிலடி கொடுத்தார் தெரியுமா?

British citizen calls idli boring in viral post shashi tharoor is offended

by Nishanth, Oct 9, 2020, 16:35 PM IST

உலகத்திலேயே இட்லி மாதிரி மோசமான உணவு வேறு எதுவும் கிடையாது என்று கிண்டலடித்த இங்கிலாந்தைச் சேர்ந்தவருக்குத் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார் காங்கிரஸ் எம்பி சசி தரூர்.தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா உட்படத் தென் மாநில மக்களுக்குத் தவிர்க்க முடியாத ஒரு உணவு என்றால் அது இட்லி தான். சிலருக்குத் தினமும் இட்லி சாப்பிட்டால் கூட போரடிக்காது.

சாம்பாரிலும், தேங்காய் சட்னியிலும், இட்லிப் பொடியிலும் தொட்டுச் சாப்பிடுவது ஒரு தனி சுகம் தான்.தென் மாநில மக்களின் சிற்றுண்டிகளில் இந்த இட்லி இரண்டறக் கலந்து விட்டது என்றே கூறவேண்டும். காலை, மாலை, இரவு என ஒரு நாளைக்கு மூன்று நேரம் சாப்பிட்டால் கூட போரடிக்காது. உடலுக்கும் எந்த தீங்கையும் ஏற்படுத்தாது.இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

ஆனால் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவர் இட்லி தான் உலகத்திலேயே மிகவும் மோசமான உணவு என்று கூறியது தான் தாமதம், டிவிட்டரில் அவருக்கெதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன. எட்வர்ட் ஆண்டர்சன் என்பவர் கடந்த 6ம் தேதி டிவிட்டரில், இட்லி தான் உலகத்திலேயே மிகவும் போரடிக்கும் உணவு என்று குறிப்பிட்டிருந்தார். எட்வர்டின் இந்த டுவிட்டை சசி தரூரின் மகன் தனது பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். இதைப்பார்த்த சசிதரூர் உடனடியாக அதற்குப் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியிருப்பது, 'சரிதான் மகனே, இந்த உலகத்தில் சவால்களைச் சந்திக்கும் பலர் இருக்கின்றனர்.

நல்ல கலாச்சாரம் கிடைப்பது பெரும் சிரமமாகும். இட்லியைப் பாராட்டுவதற்கான குணமும், கிரிக்கெட், கேரளாவின் பாரம்பரிய கலையான ஓட்டம் துள்ளல் ஆகியவற்றை ரசிப்பதற்கும் ஒரு திறமை வேண்டும். அது எல்லோருக்கும் கிடைக்கும் என்று கூற முடியாது. அந்த பாவம் மனிதனை நினைக்கும்போது எனக்குப் பரிதாபமாக இருக்கிறது.
வாழ்க்கை என்றால் என்ன என்பது குறித்து அவருக்கு எதுவும் தெரியாது. ஒருவேளை இட்லியை எப்படிச் சாப்பிட வேண்டும் என்று அவருக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம். சூடான இட்லியைக் கடுகில் வறுத்த தேங்காய் சட்னியும், சிவந்த மிளகாய், வெங்காயம் சேர்த்த சட்னியும், நெய்யையும் சேர்த்துச் சாப்பிட்டுப் பார்க்க வேண்டும். அப்போது தான் அந்த இட்லியின் ருசி தெரியும். இட்லி மாவை இரவிலேயே புளிக்க வைத்து மறுநாள் பயன்படுத்தினால் உலகத்திலேயே அதுதான் சொர்க்கம்.... இப்படிப் போகிறது சசிதரூரின் டுவிட்.

சசிதரூரின் டுவீட்டை பார்த்த உடன் உடனடியாக அதற்கு எட்வர்டு பதில் கொடுத்தார். 'எனக்குச் சாம்பார், சட்னி உட்படத் தென்னிந்தியாவின் பல உணவு வகைகள் பிடிக்கும். தோசை, ஆப்பம் ஆகியவை மிகவும் பிடிக்கும். ஆனால் இட்லி, புட்டு ஆகியவற்றை என்னால் சகிக்கவே முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். சசி தரூரை தொடர்ந்து ஏராளமானோர் தங்களது இட்லி அனுபவங்களை டிவிட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.

More India News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அதிகம் படித்தவை