பிக்பாஸ் 4: நடிகையை வாரிய மொட்டை... அழுமூஞ்சி சின்ன பொண்ணு அட்வைஸ்..

BigBoss 4 Mottai suresh teasing rekha

by Chandru, Oct 11, 2020, 13:37 PM IST

பிக்பாஸ் 4 விஜய் டிவியில் கொஞ்சம் கொஞ்சமாக பிக்கப் ஆகி வாய் சண்டை வரை வளர்ந்திருக்கிறது. தினமும் காலையில் வெளிவரும் ஷோவின் புரோமோவில் பல துளிகள் இடம் பெறுகிறது. கண்ணீர், காட்டம், நக்கல் நய்யாண்டி என அதில் உணர்ச்சிகள் சுழன்றடிக்கிறது.

இன்று இரவு (அக் 11) ஒளிபரப்பாகும் ஷோவுக்கான புரோமோவிலிலும் மேற் சொன்ன அத்தனை உணர்வுகளும் அடங்கி உள்ளன. இரண்டு மூன்று நாளாக சண்டை போட்டுக் கொண்டிருந்த போட்டியாளர்கள் இன்று கமல்ஹாசன் முன்னிலையில் ஒருவரைருவர் சமரசம் செய்து இதய சின்னத்தை பதிக்கின்றனர். அதில் ஹார்ட் பிரேக் சின்னமும் சிலருக்கு பதிக்கப்படுகிறது.

நடிகை ரேகாவை பற்றி கமலி டம் புகார் செய்யும் மொட்டை சுரேஷ், முகம் புல்லா மேக்கப் போட்டுகிட்டு இவங்க முகத்துல என்ன உணர்ச்சி காட்றாங்கன்னே பாக்க முடியலேஎன நடிகை ரேகாவை நய்யாண்டி செய்கிறார். அதேபோல் சனத்தை சீண்டும் பாலாஜி முருகதாஸ், சண்டையை ஊதிப்பெருக்கும் சனம் இனி அப்படி செய்யக்கூடாது என்றும் அதேபோல் மொட்டை சுரேஷுக்கு இனிமே இப்படி இருக்காதீங்க என்று அழுமூஞ்சி சின்னப் பொண்ணு அனிதாவும் அட்வைஸ் செய்கின்றனர்.

சனம் ஷெட்டியை சீண்டும் வகையில் கையில் வைத்திருக்கும் இதய முத்திரையை சாக்காக வைத்து, இது இந்த பக்கமும் இல்ல அந்த பக்கமும் இல்ல நமுத்துபோயிருக்கு என்று குத்திக்காட்டும் மொட்டை, மேக்கப் அப்பிக் கொள்வதாக தன்னை நக்கலடித்த மொட்டை சுரேஷ் பற்றி ரேகா ஏதோ சொல்ல வர புரோமோ முடிகிறது. இதையெல்லாம் கமல் சத்தம் காட்டாமல் வேடிக்கை பார்க்கிறார். புரோ மோவில் வேடிக்கை பார்க்கும் கமல் ஷோவில் யாருக்கு ரிவீட் அடிக்கப்போகிறார் என்பது இன்று மாலை தெரியும்.

More Bigg boss News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை