மொட்டை சுரேஷை வெச்சி செய்யும் போட்டியாளர்கள்.. பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா ரகளை ஆரம்பம்.

Archana Teases Mottai Suresh in Bigg Boss 4

by Chandru, Oct 15, 2020, 13:27 PM IST

உலகநாயகன் கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் 4ம் சீசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். வைல்டு கார்டு என்ட்ரியில் நிகழ்ச்சி தொகுப்பாளர் அர்ச்சனா என்ட்ரி தந்திருக்கிறார்.

தினமும் பிக்பாஸ்4 புரோமா காலையில் வெளியாகிறது. இன்று வெளியாகி இருக்கும் புரோமோவில் மொட்டை சுரேஷை அத்தனை போட்டி யாளர்களும் ஒன்றுகூடி கும்மாளமடித்து வெச்சி செய்திருக்கின்றனர். வந்ததும் வராததுமாக சுரேஷை பங்கம் பண்ணுகிறார் அர்ச்சனா. எத்தனை பேருக்கு இவர் செய்யற சமையல் பிடிக்கும் என்று அர்ச்சனா கேட்க எனக்கு பிடிக்கும் ஆனா கைய தூக்க மனசு வரல என்று ரியோ வாய்ஸ் கேட்கிறது. உடனே கொல்லென்று கூட்டமாக அவ்வளவு பேரும் சிரிக்க, இவ்வளவு நாள்ல நீங்க ஆங்கரா இருந்திருக்கலாமே சார்.. என்ற அர்ச்சனா மீண்டும் சுரேஷை கலாய்க்க நான் முன்பு ஆங்கராக இருந்தவன்தான் என்று கடுப்பாக முணுமுணுக்கிறார் சுரேஷ்.உடனே, உங்களுக்கு திருஷ்டி சுத்தி போடணும்ன்னு மீண்டும் சுரேஷுக்கு அர்ச்சனா திருஷ்டி சுற்றிபோட கோபமாக அறைக்குள் விரைகிறார் சுரேஷ்.

மொட்டை சுரேஷ் இத்தனை நாள் மற்றவர்கள் மீது காட்டி வந்த வெறுப்புக்கெல்லாம் அர்ச்சனா பதிலடி கொடுக்கும் புரோமா பரபரப்பாகி வருகிறது.

More Bigg boss News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை