என்ன நினைச்சிட்டு இருக்கான் அந்த ஆளு சனமின் ஆவேச பேச்சு.. மொட்டை தாத்தாவின் ஆனவச் சிரிப்பு.. அனல் பறக்கும் 2வது ப்ரோமோ..

what happened in bigg boss second promo

by Logeswari, Oct 21, 2020, 16:20 PM IST

பிக் பாஸ் சீசன் 4 இல் முதல் வாரத்தை விட இரண்டாவது வாரம் சுவாரசியம் அதிகமாக காணப்படுகிறது. பிக் பாஸின் அறிவிப்பின்படி வீட்டில் ஒரு வித்யாசமான போட்டி நடக்கிறது. அதில் அரக்க குடும்பம் ஒரு பக்கம் அரச குடும்ப ஒரு பக்கம் என்று இரண்டு அணிகளும் மோதிக்கொள்கின்றனர். இந்நிலையில் இரு அணிக்கும் தவிர்க்கமுடியாத பிரச்சனைகள் உருவாகிறது. மொட்டை சுரேஷ் செய்யும் வேலையை இப்பொழுது பிக் பாஸ் செய்து வருகிறார்.வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்களிடையே கொளுத்தி போட்டு இன்பமாக குளிர் காய்ந்து வருகிறார் பிக் பாஸ்..

தனியார் தொலைக்காட்சியில் வெளியான முதல் ப்ரோமோவில் போட்டியாளர்கள் முகத்தில் எலுமிச்சை சாறை பிழிந்து ஆரியை சீண்டினார்கள். ஆனால் இரண்டாவது ப்ரோமோவில் ஒரு பிரளயமே வெடிக்கிறது. மொட்டை சுரேஷ் எதோ ஒரு பொருளை வைத்து சனமை தாக்க உடனே சனம் கோவத்தில் பொங்கி எழுந்து ஆவேசமாய் 'என்ன நினைச்சிட்டு இருக்கான் அந்த ஆளு'.. 'வாடா வெளியே' என்று மொட்டை தாத்தாவை மரியாதை குறைவாய் திட்டுகிறார். அதற்கு தாத்தா படுக்கையில் படுத்து கொண்டு வில்லத்தனமான ஒரு சிரிப்பை மிகவும் சத்தமாக சிரிக்கிறார். அவரது சிரிப்பின் அர்த்தம் "நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான்" என்கிற பாடலை மறைமுகமாக சொல்வது போல் காட்சியளித்தது.

வெளியான மூன்றாவது ப்ரோமோவில் ஒன்னும் நடக்காத குழந்தை போல் பிக் பாஸிடம் புலம்பி அழுகிறார்.அவர் அழுகையை பார்க்கும் பொழுது நமக்கும் கண்ணு கலங்குகின்றது.. இதை வைத்து பார்க்கும் போது இன்று பிக் பாஸில் ஏதோ ஒரு பெரிய கலவரம் வெடிக்க போகிறது மட்டும் தெள்ளத் தெளிவாக தெரிகிறது..

More Bigg boss News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அதிகம் படித்தவை