ஆலுமா டோலுமா பாடலுக்கு கும்பலாக சேர்ந்து ஆடுவதுடன் ஆரம்பித்தது நாள். டைனிங் டேபிளில் பாலா, ஆஜித், சுரேஷ் குழுவாக உணவருந்திக் கொண்டிருந்தனர். சாப்பிட்டு முடிச்சட்டு உங்கிட்ட ஜோசியம் கேக்கனும்பானு சுரேஷ் சொல்ல, எதுவும் தெரியாம திருதிருனு முழிச்சான் ஆஜித். போனதடவை ரேகா தான் வெளிய போவாங்கனு ஆஜித் தான் சொல்லிருந்தானாம். அதனால இந்த முறை யாருனு கேக்கவும், நீங்க தான்னு பட்டுனு சொல்லிட்டான் ஆஜித். பாலா பக்கத்துல உக்காந்து நான் தான்னு சொல்ல, அதை மறுத்து பேசறாரு சுரேஷ். ஆஜித் தன் பேரை சொன்னதுக்கு சந்தோஷமா எந்திரிச்சு போனாரு.
அடுத்து எல்லாரும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த வார பெஸ்ட் பர்பாமர் தேர்வு செய்யும் நேரம். லக்சரி பட்ஜெட் டாஸ்க் விளையாடினா மாதிரி ரெண்டு டீமா பிரிஞ்சு உக்காந்துட்டு இருந்தாங்க. இந்த வார பர்பாமரை தேர்ந்தெடுக்க சொல்லவும், ரெண்டு டீம்லேர்ந்து ஆளுக்கு ஒருத்தரா தேர்ந்தெடுக்கலாம்னு ஐடியா கொடுத்தாங்க அர்ச்சனா. அந்த ஐடியாவை மறுபேச்சில்லாம ஒத்துகிட்டாங்க.
சுரேஷ் டீம்ல அர்ச்சனா, சுரேஷ் பேரு அடிபட்டாலும், சுரேஷ்-சனம் பிரச்சினையால அவர் பேரை வேணாம்னு சொல்லிடறாங்க. அப்ப அர்ச்சனா பேர் மட்டும் இருக்கு. இந்த டீம்ல சனம், பாலா பேர் வருது. சனம் பேரை முடிவு செய்யற நேரத்துல பாலா, எனக்கு கொடுங்கய்யானு கேட்டு வாங்கிக்கறான். சோ இந்த வார பெஸ்ட் பர்பாமர் அர்ச்சனா, பாலாஜி.
அடுத்து இந்த வாரம் முழுவதும் சிறந்த பங்கெப்பாளராக, சனம் ஆரி, ஷிவானி மூணு பேர் நாமினேட் ஆனாங்க. அதுல சனம்க்கு 9 ஓட்டுக்கள் விழுந்ததால, அவங்களே இந்த வார ஓவர் ஆல் பேஸ்ட் பர்பாமர். சனம்க்கு சுரேஷ், பாலாஜி ரெண்டு பேருமே ஓட்டு போட்டது குறிப்பிடத்தக்கது.
அடுத்து இந்த வாரத்திற்கான வொர்ஸ்ட் பார்பாமர்களை தேர்ந்தெடுக்கும் நேரம். இந்த தடவை அர்ச்சனா எந்த ஐடியாவும் சொல்லாததால, எல்லாரும் ரெண்டு பேரை நாமினேட் செய்யனும்னு முடிவுக்கு வந்தாங்க. இந்த ஐடியா ரியோவோடதுனு நினைக்கிறேன். ஆனா இப்படி ஓபன் நாமினேஷன் தான் எப்பவுமே பிரச்சினைக்குரியது. இங்க தான் மந்தை மனநிலை அல்லது கும்பல் மனப்பான்மை எல்லாருக்கும் வந்துருது. முதல்ல யார் பேர் வருதோ அவங்க தான் பலியாடுனு கற்பூரம் அடிச்சு சத்தியம் செய்யலாம்.
நேத்தும் அப்படியே நடந்தது. முதல்ல வந்தது ஆரி, ஆஜித்தோட பெயர்கள் தான். நாடா காடா டாஸ்க்ல, பிக்பாஸ் முடிவை முழுசா ஏத்துக்காம இருந்தது, அரக்கனா மாறினதுக்கு அப்புறமும் தன்னோட அதிருப்தியை தொடர்ந்து வெளிப்படுத்திகிட்டே இருந்ததுனு இந்த காரணம் தான் மெஜாரிட்டியா வந்தது.
ரியோ ஆரம்பிச்சு வச்சதை அத்தனை பேரும் அடிபிறழாம சொல்லிட்டு போனாங்க. வீட்ல இருக்கற மொத்த பேரும் ஒருத்தர் பேரை சொல்றது ரொம்பவும் தவறான அணுகுமுறை. எல்லாருமே தவறுகள் செய்யும் போது, அதுல ஒருத்தரோட தவறு மட்டும் பூதாகரமா ஆக்கப்படுவது தான் இங்க பிரச்சினை. அதே மாதிரி மொத்த ஹவுஸ்மேட்ஸும் ஆரி, ஆஜித்தை மட்டும் உன்னிப்பா கவனிச்சு பார்த்தா மாதிரி சுத்தமா பொருந்தல. இதனால தவறு செஞ்ச மற்ற ஹவுஸ்மேட்ஸ் ஈசியா தப்பிச்சு போய்டறாங்க. அதில்லாம அவங்களோட தவறுகள் சுட்டிக்காட்டப்பட்றது கூட கிடையாது. இது ஒரு மோசமான முன்னுதாரணமா இருக்கு. ஒரு பொய்யை 10 தடவை சொன்னா உண்மையாகிடும்னு சொல்றா மாதிரி, குற்றம் சொல்லப்படறவங்களே அதை உண்மைனு நம்பற அளவுக்கு இருக்கு இவங்க செய்யறது.
ஆஜித்துக்கு, அவர் யார் கூடவும் பேசவும் பழகவே இல்லைங்கறது காரணம். ஆரிக்கு டாஸ்க்கை அளவுகோலா வச்சவங்க, ஆஜித்துக்கு அதை கணக்குல எடுத்துக்காதது முரண்.
கடைசியா பேச வந்த ஆரி, ஷிவானி பேரை சொன்ன போது, அந்த காரணத்தை ஷிவானி மறுத்து பேசினது அட்டகாச ஆச்சரியம்.
ரெண்டு பேரையும் ஓய்வெடுக்கும் அறைக்கு கூட்டிட்டு போனாங்க. அங்க ஆஜித்துக்கு ரம்யா கொடுத்த அட்வைஸ் முக்கியமானது. நாம இங்க ஆரம்பத்துல இருந்து சொல்லிட்டு இருக்கறா மாதிரி, ஆஜித்தோட தனித்தன்மை பாட்டு பாடறது. அதை ஏன் செய்ய மாட்டேங்கறானு தான் தெரியல. நேத்து ரம்யாவும் அதை தான் எடுத்து சொல்றாங்க. இனிமேலாவது ஆஜித் புரிஞ்சு நடந்துகிட்டா சரி.
ஓய்வெடுக்கும் அறைக்கு வெளிய ஆரி, அனிதா, பாலாஜி, ஆஜித் நாலு பேரும் பேசறாங்க. குரூப்பிஸம் இருக்கறதால தகுதியான நபர்கள் நாமினேஷனுக்கு வந்து வெளிய போறாங்க. தகுதியில்லாத நபர்கள் காப்பாற்றப்பட்டு, தொடர்ந்து வீட்ல இருக்காங்க. ஆக்சுவலா அந்த இடத்துல அனிதா சொல்ல வந்தது இதுவா தான் இருக்கனும். அதை ஏம்மா இப்ப சுத்தி சுத்தி சொல்லி குழப்பற.. ஷப்பா.... முடில. குரூப்பிசம் பத்தி அனிதா பேசினதை பாலாஜியும் ஆமோதிக்க, அப்ப ஏன் இவ்வளவு நாளா எங்கேயும் நீ அதை பேசலைனு பாலாஜியை மடக்கினாங்க அனிதா. அதை எதிர்பார்க்காத பாலாஜி கொஞ்சம் தடுமாறித் தான் போனான். அனிதாவுக்கும் அப்பப்போ மூளை வேலை செய்யுது போல.
அடுத்ததா இன்னொமொரு டாஸ்க். ஹவுஸ்மேட்ஸ் எல்லாரும் சேர்ந்து தங்களை 1-16 வரிசைபடுத்திக்கனும். 16 இந்த வார எவிக்சன், 1ம் நம்பர் டைட்டில் வின்னர்.
ஆக்டிவிட்டி ஏரியால எல்லாரும் உக்காந்திருக்க முதல்ல 16க்கு சுரேஷ் செலக்ட் ஆகிட்டாரு. இப்பவே கிளம்பலாம்னு பிக்பாஸ் சொன்னா உடனே மூட்டையை கட்டிருவார் போலருக்கு. இந்த வாரம் சேவ் ஆனா அவரோட ஸ்ட்ராட்டஜியை பார்க்க ஆவலா இருக்கேன்.
அதுக்கப்புறம் இந்த டாஸ்க் நொண்டியடிச்சுது. யாரை எந்த வரிசைல, எப்படி கூப்பிடறதுனு எல்லாரும் குழம்பி நிக்கும் போது சம்மு ஒரு அட்டகாசமான ஐடியா கொடுத்தாங்க. அதன் படி ஹவுஸ்மேட்ஸை 1-8, 9-16 ரெண்டா பிரிச்சு தேர்ந்தெடுக்கலாம்னு சொன்னதை ஏகமனதா எல்லாரும் ஏத்துகிட்டாங்க.
அழகா, அம்சமா ஐடியா கொடுக்கறதை எல்லாம் பெண்கள் தான் செய்யறாங்க. அர்ச்சனா கூட இப்ப சம்முவும் சேர்ந்துட்டாங்க.
16 - சுரேஷ்.
அர்ச்சனா தான் நாமினேட் செஞ்சது. யார் கை தூக்கறாங்கனு பார்க்கறதுக்குள்ள நான் போறேன்னு கிளம்பிட்டாரு. இதுவும் ஒரு எட்ராட்டஜியா இருக்குமோனு சந்தேகம் வராம இல்ல. இந்த வாரம் முதல் ஆளா சேவ் ஆகப் போறாப்புல. அடுத்த வாரம் இருக்கு இவங்களுக்கு.....
15 - சனம்.
வோட்டிங் அடிப்படையில சனம்15வது இடம்.
14 - சம்யுக்தா
சம்யுக்தா கொடுத்த ஐடியால கடைசில அவங்களையே தூக்கி அடிச்சுட்டாங்க.
13 - வேல்ஸ்
ரொம்ப டிப்ளமேட்டிக்கா இருக்காருனு காரணம் சொன்னது பாலாஜி. நேத்து பாலாஜியோட உடல்மொழி ரொம்பவும் கீழ்தரமா இருந்தது.
12 - சோம்
என்ன காரணம்னு சொல்லி தெரியனுமா? நியாயமா பார்த்தா அனிதா சொன்ன தகுதியே இல்லாதவங்க பட்டியல்ல சோம் தான் முதல்ல வரனும்.
11-அர்ச்சனா
அர்ச்சனா பேர் சொன்ன உடனே துள்ளிக்குதிச்சு எந்திரிச்ச பாலாஜி,நேத்து பட்டிமன்ற பஞ்சாயத்தை மனசுல வச்சு காரணம் சொன்னாரு. அர்ச்சனா தேங்க் யூ சொல்லி ஆஃப் பண்ணி உக்கார வச்சுட்டாங்க.
10-ஆரி.
ஆரிலாம் பைனல் கண்டஸ்டண்ட்னு நினைச்சிருந்தா இவங்க 10 வது இடம் கொடுக்கறாங்க.
9- அனிதா
முதல்ல இந்த வாரம் தாண்டனும், அதுக்குள்ள இவங்க வேறனு அனிதா மைண்ட் வாய்ஸ்ல பேசினது கேட்டுச்சா
8 - ரமேஷ்
பிரபலம்ங்கறதை தாண்டி ரமேஷ் இன்னும் எதுவுமே செய்யலை. பார்ப்போம்.
7 - நிஷா
இங்கேயும் பாலாஜி முத ஆளா எந்திரிச்சான். ரியோ கிட்ட கோபத்தை வெளியகாட்டுனு சொல்லிட்டு, எங்கிட்ட கோபத்தை கட்டுப்படுத்துனு சொல்லி டபுள்கேம் விளையாடறாங்கனு பிராது வச்சாரு.
6 - ஆஜித்
ஆஜித் முகம்லாம் தெரிய கொஞ்சம் லேட்டாகும். வெயிட் செய்வோம்.
5 - ரியோ
இந்த இடத்துக்கு வந்ததுல ரியோவுக்கு மூஞ்சியே இல்லை.
4 - கேப்பி
டாப் 5 ல இருக்க தகுதியான பொண்ணு தான்.
3 - பாலா
ஸ்ட்ராங் கண்டஸ்டண்ட். இந்த வாரம் எலிமினேஷன்ல எப்படி ஓட்டு வாங்கறாருனு பார்க்கனும்.
2 - ஷிவானி
மிங்கிள் ஆகலேன்னு சொல்லி சொல்லியே 2 வது இடத்தை கொடுத்திருக்காங்க.
1 - ரம்யா
விட்டா இப்பவே டைட்டிலை தூக்கி கொடுத்துருவாங்க போலருக்கு. பொறுங்கடா.....
இந்த வரிசையை எல்லாரும் ஏத்துகிட்டாலும், மக்கள் மனசுல கண்டிப்பா இந்த வரிசை மாறும்.
இந்த டாஸ்க் முடிஞ்சு பெட்ரூம்ல பாலாஜியை திட்டிட்டு இருந்தாரு சுரேஷ். வேல்முருகனை பார்த்து டிப்ளமேட்டிக்னா என்னானு தெரியுமா? கேட்டதும், கேட்ட விதமும் ரொம்பவும் திமிரா இருந்ததை சுட்டிக்காட்டினார்.
வெளிய வந்து வேல்முருகன் கிட்டேயும் அதை சொன்னாரு. அடுத்து பாலாவும் வேல்ஸ்கிட்ட வந்து சமாதானபடுத்தி மன்னிப்பு கேட்டாரு.
ரமேஷ் பர்த்டே கேக் வந்தது. எல்லாரும் ஜாலியா பர்த்டே கொண்டாடிட்டு படுக்கப் போனாங்க.
இன்னிக்கு ஆண்டவர் தினம். அவருக்கு கண்டண்ட் இருக்குமானு வெயிட் செஞ்சு பார்க்கனும்.