துபாயில் பிரசவம் பார்த்த மருத்துவரின் மாஸ்க்கை பிறந்த குழந்தை கழட்டியதை அழகாக புகைப்படம் எடுத்து இணையதளத்தில் பகிர்ந்துள்ளார்.
கொரோனாவின் தாக்கம் குறையாமல் நாடு முழுவதும் தள்ளாடி வருகிறது. தினமும் ஆயிரத்துக்கு மேலான உயிர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடி வருகின்றனர் ஆய்வாளர்கள். இது குறித்து துபாயில் நெகிழ்ச்சி ஊட்டும் விதமாக ஒரு நிகழ்ச்சி நடந்துள்ளது. துபாயில் பிரசவம் பார்க்கும் மருத்துவரில் நம்பர் 1ஆக திகழ்பவர் சமீர் செயிப். இந்நிலையில் இவர் பிரசவம் பார்த்த பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை கையில் எடுத்து சமீர் கொஞ்சிய பொழுது எதிர் பாராத விதமாக அப்பச்சிளம் குழந்தை மருத்துவர் அணிந்து இருந்த மாஸ்க்கை பிடித்து இழுத்துள்ளது.
இதனை அங்கு இருந்த சக மருத்துவர்கள் அழகாக புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த புகைப்படம் நாடு முழுவதும் உள்ள மக்களின் மனதில் நெகிழ்ச்சியை கிளப்பியுள்ளது. கொரோனா பெருந்தொற்றால் அனைவரும் மாஸ்க் அணிவது கட்டாயமாகிவிட்டது. இந்த புகைப்படத்தில் இருந்து நாம் மாஸ்குக்கு டாட்டா காட்ட வேண்டிய நாள் கூடிய விரைவில் நம்மை வந்து சேரும் என்று பலர் தங்களது விமர்சனங்களை கூறிவருகின்றனர்.