மொட்டை சுரேஷுக்கு இவ்வளவு பெரிய மனசா.. சனம், சுரேஷிடம் மன்னிப்பு கேட்ட தருணம்.. பிக் பாஸின் 21வது நாள்..

what happened in big boss season 4 yesterday

by Mahadevan CM, Oct 25, 2020, 16:18 PM IST

ஆண்டவர் வருகை. வழக்கம் போல வித்தியாசமான காஸ்ட்யூம். எந்த வித அறிவுரைகளும் இல்லாமல் நேரடியாக நிகழ்ச்சிக்கு சென்றார். இதுவரைக்கும் வந்த சீசன்ல இந்த சீசன் பிக்பாஸ்ல தான் அதிகமான சர்ச்சைகளை பார்க்கறதா சொன்னார். எங்களுக்கு அப்படி ஒன்னும் தெரியலையே கமல் சார்.

வெள்ளிக்கிழமை நிகழ்வுகள்

"சத்தியமா நீ எனக்கு தேவையே இல்லை" பாட்டு போட்ட உடனே வேல்ஸ் தான் முதல் வரிசைக்கு ஆட ஓடி வந்தார். இன்னிக்கும் நல்ல கூட்டம். கேப்டன் ரியோ தன் வேலையை சரியா செஞ்சுருக்கார். இந்த வார கேப்டன்சி டாஸ்க்ல நான் கலந்துக்க போறதில்லைனு சனம் சொல்லிட்டு இருந்ததை அதிர்ச்சியா கேட்டுட்டு இருந்தாங்க ரம்யாவும், பாலாஜியும். அதுக்கான காரணம் பின்னாடி தெரிய வந்தது. முதல் வாரத்துல இருந்து ஆக்டிவா இருந்த சனம்க்கு 15வது இடம் கிடைச்சது. ஆனா இப்ப வரைக்கும் ஆக்டிவா இல்லைனு சொல்லப்படறவங்களுக்கு என்னை விட முன்னாடி இடம் கிடைச்சதுனு சொன்னாங்க. அது நியாயமான விஷயம் கூட. அவங்க வேல்முருகனை நேரடி உதாரணமா காட்டினாலும், சனம் சொல்ல வந்தது அவரை மட்டும் இல்லைங்கறது உண்மை.

யார் கூடவும் பழகவே இல்லைனு சொன்ன ஷிவானி, ஆஜித் எல்லாருக்கும் நல்ல இடம் கிடைச்சது. ஆனா சனம் மேல இந்த மாதிரி புகார்கள் கிடையாது. தனிப்பட்ட முறையில வீட்ல இருக்கற சிலரோட பிரச்சினையே தவிர வீட்ல பொதுவா அவங்க மேல புகார்கள் இல்லை. இருந்தாலும் அவங்களுக்கு உரிய இடம் கிடைக்கல. இந்த சீசன்ல சுரேஷ் மாதிரி இந்த வாய்ப்பை ரொம்ப சீரீஸா எடுத்துகிட்டு விளையாடறவங்கள்ல சனமும் ஒருத்தர். சோ அப்படியிருக்கும் போது அவரோட ஆதங்கம் நியாயமானதே. ஆனா அதுக்காக கேப்டன்சி டாஸ்க் செய்ய மாட்டேன்னு சொல்றது அட்டன்ஷன் சீக்கிங்னு தான் தோணுது. ரம்யா, சம்மு, கேப்பி, சனம் ரமேஷ் எல்லாரும் குரூப்பா உக்காந்து பேசறாங்க. சனமோட காமெடி டயலாக்ஸ் சிலதை சொல்லி, சீரியஸா இருக்கறதை விட நகைச்சுவையா இருக்கறது நல்லாருக்குனு ரம்யா சொல்றாங்க.

அங்கேயே ஆரி, சுரேஷோட பிகேவியரை பத்தி ஹவுஸ்மேட்ஸ் கிட்ட சொல்றாரு. நாம இங்க ஏற்கனவே சொல்லிருந்தா மாதிரி, பாயிண்ட்டா பேசறவங்க கிட்ட சுரேஷ் நின்னு பேசமாட்டாருனு கண்டுபிடிச்சு சொல்லிட்டு இருந்தாரு. இதையே இப்ப தான் கண்டுபிடிக்கறிங்களா மொமண்ட். உள்ள இளைஞர்கள் ஒன்னா இருந்தாங்க. கேப்பியை தங்கச்சினு சொல்லிட்டு இருந்தான் பாலாஜி. எலேய் இப்பவே அப்படி சொன்னா இன்னும் 80 நாளை எப்படிய்யா ஓட்டறது. கேப்பிக்கும் அது பிடிக்கல. ப்ரெண்டுனு சொல்லுனு பிறாண்டிட்டு இருந்தாங்க. இதுல ஷிவானியை வேற கோர்த்து விட ட்ரை பண்ணிட்டு இருந்தாங்க.கூட ஆஜித் வேற....

சம்பந்தமே இல்லாம டைனிங் டேபிள் வந்த பாலாஜி, என்ன இனிமே யாருமவன் இவன்னு கூப்பிட வேண்டாம்னு ஒரு பொதுவான வார்னிங் கொடுத்துட்டு போனான். அப்ப மைக் மாட்டவே இல்லை. ஆனாலும் பிக்பாஸ் ஒன்னுமே சொல்லலை. வேல்ஸும், நிஷாவும் உக்காந்து பாலாஜி சொன்னதை பத்தி பேசறாங்க. பாலாஜி தன்னை தான் சொன்னதா நிஷா நினைச்சுக்கறாங்க.

அகம் வழியே அகம்

இந்த வாரம் டாஸ்க் பத்தி ஹவுஸ்மேட்ஸ் கிட்ட ஜாலியா பேசிட்டே வந்தாரு. ரியோ கிட்ட பேசும் போது ஒரு நாள் கூத்துக்கு மீசையை எடுத்ததை ரியோ செஞ்சது செம்ம. தாடி மீசையை எடுக்க மாட்டேன்னு சொன்ன ரமேஷுக்கு குட்டு வைக்கவும் தவறவில்லை. இந்த வாரம் எப்படி இருந்தது? கேள்விக்கு எல்லா ஹவுஸ்மேட்ஸும் பதில் சொன்னாங்க. ஆரி முழ நீளத்துக்கு பேசி கமல் சாருக்கே டஃப் கொடுத்தாரு. இந்த சீசன்ல ஆரிக்கு கூட்டாளிங்கன்னா அது அனிதாவும், சனமும் தான். இவங்க பேசுப் போதெல்லாம் எப்படா முடிப்பாங்கனு அனிச்சையா தோணுது. அட்வைஸ் பண்றதா நீங்க ஆரம்பிச்சு வச்சது இன்னும் முடியயாம போய்ட்டு இருக்கு சார்னு கமலுக்கே விபூதி அடிச்சாரு ஆரி.

இன்னிக்கும் அந்த ட்ரெஸ்ல சம்மு செம்ன அழகா இருந்தாங்க... பெஸ்ட் பர்பாமர், வொர்ஸ்ட் பர்பாமர் ரெண்டுக்கும் ஒரே ஆளே நாமினேட் ஆனது பத்தி பேசினாங்க. அனிதா வழக்கம் போல வழா வழா கொழா கொழா. பேச்சு வாக்குல டிப்ளமசினு சொல்ல, உடனடியா இடை மறிச்ச கமல் சார், வேல்முருகன் கோச்சுக்க போறாருங்கனு டைமிங்ல அடிச்சது செம்ம. பட்டிமன்ற நடுவர் மாதிரியே பேசறிங்களேனு கலாய்ச்சு விட்டாரு. அடுத்து சனம் சுரேஷ் பிரச்சினை. ரெண்டு பேரும் மாத்தி மாத்தி சாரி கேட்டாங்க. ரெண்டு பேருமே தான் செஞ்சது தப்புனு உணர்ந்து பேசினாங்க.

பொதுவா இது போன்ற பஞ்சாயத்து வந்துதுன்னா கமல் தான் ரெண்டு பக்கம் நியாயம் கேட்டு தீர்ப்பு சொல்லுவாரு. ஆனா இங்க ரெண்டு பேருமே குத்தத்தை ஒத்துகிட்டாங்க. இதையும் கமல் சொல்லி காட்டினது சிறப்பு. அடுத்து அர்ச்சனா. சுரேஷை கூப்ட்டு வச்சு சாரி கேக்க வச்சதுக்கு கொஞ்சமா குட்டினாரு. அதே மாதிரி பஞ்சாயத்து தலைவி மோட்லேயே இருக்கறதையும் சுட்டி காட்டியும் அர்ச்சனாவுக்கு புரியல. அந்த டைம்ல கமல் சார் சொன்ன உதாரணம் அட்டகாசம். விருமாண்டி முதல் நாள் ஷூட்டிங்க்ல சாகேத் ராம் தெரிஞ்சதா சொன்னது, அர்ச்சனாவுக்கு புரியல. அர்ச்சனா இன்னும் தன்னை ஒரு ஆங்கராவே நினைச்சுட்டு இருக்காங்கனு நேரடியாவே சொன்னாரு. ஆனா கமல் சார் போனதுக்கு அப்புறம், யார் இங்க அடிச்சுட்டு இருந்தா எனக்கென்னனு இருந்திருக்கனும்னு நிஷா கிட்ட புலம்பினது, அக்மார்க் அரைவேக்காட்டுத்தனம். நேத்து தான் புத்திசாலினு எழுதினேன். வாட் இஸ் திஸ்ரா?????

பாலாஜி - சுரேஷ் நட்பை பத்தி பேசினது சூப்பரா இருந்தது. பாலாஜியோட சொல் தான் சுரேஷ் அழுகைக்கு காரணம்னு சொன்னாரு. பாலாஜிக்கும் சுரேஷுக்கும் அட்டகாச கெமிஸ்ட்ரி நட்பு இருக்கு. அடுத்து எலிமினேஷன்ல இருக்கறவங்களை தனியா உக்கார சொல்லிட்டு, மீதி பேர் கிட்ட யார் வெளிய போகனும், யார் உள்ள இருக்கனும்னு போர்ட்ல மார்க் பண்ணச் சொன்னாரு. சுரேஷ் வீட்ல இருக்கனும்னு நிறைய டிக் விழுந்தது. இந்த வாரம் ஏகப்பட்ட எதிரியை சம்பாதிச்ச பாலாவுக்கு ராங் டிக் விழுந்தது. ரியோ, நிஷா, அர்ச்சனா, சோம் பாலாவுக்கு எதிரா டிக் போட்டாங்க.

சனம் பாலாவுக்கு ஆதரவா நின்னது செம்ம டர்னிங் பாயிண்ட். சுரேஷ், சனம், பாலா கூட்டணி ஏற்பட்டா செம்ம ஸ்ட்ராங்கா இருக்கும். வெயிட் பண்ணுவோம். கடைசில பாலா சேவ் ஆனதோட இன்றைய எபிசோட் முடியுது. இன்னிக்கு எவிக்சன் பத்தின செய்திகள் வருது. அது உண்மையா பொய்யானு வெயிட் செஞ்சு பார்ப்போம்.

More Bigg boss News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை