பிக் பாஸ் வீட்டின் தல தீபாவளி கொண்டாட்டம் ஆரம்பம்.. வெற்றிகரமாக 37வது நாள்..

Advertisement

"தீபாவளி தீபாவளி" பாடலோடு விடிந்தது நாள். சோம் & ரியோ நல்லா ஆடினாங்க. மத்தவங்க எல்லாம் கடமை மோட்.

டான்ஸ் முடிச்ச உடனே எல்லாரும் ஒருத்தர் கையை ஒருத்தர் பிடிச்சுட்டு சுத்தி நின்னாங்க. புது கேப்டனுடைய புதிய முயற்சி. குடமார்னிங் சொல்றதுக்கு பதில் காலை வணக்கம் சொல்லலாம்னு கலைஞ்சு போனாங்க. அதுல பாலாஜி நின்னா மாதிரி தெரியல.

இதை பத்தி சொல்லும் போது அன்சீன்ல நடந்த ஒரு விஷயத்தை பத்தி சொல்லனும். முந்தின நாள் நைட் லைலாம் ஆஃப் செஞ்சதுக்கு அப்புறம் ஒரு மீட்டிங் நடக்குது. அங்க தான் காலைல டான்ஸ் முடிஞ்ச உடனே எல்லாரும் சுத்தி நிக்கறதை பத்தி அனவுன்ஸ் பண்றாரு. அப்ப சாம் வந்து, டான்ஸ்க்கு அப்புறம் என்னால எந்த ஆக்டிவிட்டியும் செய்ய முடியாது. அதனால நான் வரலைனு சொல்றாங்க. அப்ப அவங்களை கன்வின்ஸ் பண்றது யாருன்னா, நம்ம அனிதா... இதுலேர்ந்து என்னா தெரியுதுன்னா......

ரைட்டு... காலங்கார்த்தால கிச்சனை காமிச்சாங்க. ஆக்சுவலா இந்த வீட்டு கிச்சனை அர்ச்சனா வருவதஎகு முன், வந்த பின் அப்படினு ரெண்டா பிரிக்கலாம். சுரேஷ் கிச்சன் டீம்ல இருந்த முதல் வாரம் முழுவதும் மொத்த பேரும் கிச்சன்ல தான் உக்காந்துருப்பாங்க. ஒரே கசமுசாவா இருக்கும். அர்ச்சனா வந்ததுக்கு அப்புறம் அவங்களும் நிஷாவும், வீட்ல வேலை செய்யறா மாதிரி, பிரமாதமா கொண்டு போனாங்க. என்ன தான் அப்பப்போ "நான் உங்களுக்கு வடிச்சுக் கொட்டறேன்னு" சொன்னாலும், அர்ச்சனா தான் இந்த சீசனோட கிச்சன் குயின். அப்படினு யோசிக்க வச்சது சாட்சாத் வேற யாரும் இல்ல, அனிதாவும், சனமும் தான்.

காலை டிபனுக்கு பொங்கல் செய்யலாம்னு முடிவு செஞ்சு தொட்டுக்க சாம்பார் வைக்கலாம்னு வரும் போது துவரம் பருப்பை காணோம். அதை பத்தி ரியோ கிட்ட கேக்க "அப்படின்னா என்னாங்கய்யா" னு அப்பாவியா ரியோ பதில் சொல்ல அங்க ஆரம்பிச்சது. சாப்பிடத் தெரியும் இது தெரியாதானு அனிதா சொன்னது தேவையில்லாத வார்த்தை. , ரியோ அப்பவே சூடானாலும் அமைதியா பதில் சொல்றாரு.

அந்த பக்கம் சோம் உக்காந்து அனிதாவை கிண்டல் பண்ணிட்டே இருக்கான். ஜாலியா போய்ட்டு இருந்தா மாதிரி தான் தெரிஞ்சுது. வெங்காய சட்னி செய்யலாமானு கேட்டுட்டு, இத்தனை பேருக்கு எப்படிய்யா செய்யறதுனு அவங்களே பதில் சொல்லிகிட்டாங்க. அடுத்து அங்கிருந்த பாசிபருப்பை எடுத்து சாம்பார் வைக்க ரெடி பண்றாங்க. ஒரு கப் பருப்பு போடறேன்னு சனம் கிட்ட சொல்லவும், அவங்க மதியத்துக்கும் சேர்த்து போடனும்னு சொல்றாங்க. பாசிபருப்பு சாம்பார் மதியம் சாப்பாட்டுக்கு நல்லாருக்காதுய்யானு அனிதா சொல்றாங்க. ரெண்டு வேளைக்கும் சேர்த்து ஒன்னா செஞ்சுடலாம். கேஸ் பத்தாதுனு சனம் சொல்றாங்க. ஆனாலும் அனிதா ஒத்துக்க மாட்டேங்கறாங்க. (சில நிமிடங்களுக்கு முன்னாடி அனிதாவும் ரியோவும் பேசிட்டு இருக்கும் போது, மதியதுக்கு புளி சாதம் பண்ணிக்கலாம்னு சொன்னது சனம் தான்).

அனிதா திரும்பவும் சொல்லவும், நீங்க ஆரி கிட்ட சொல்லிடுங்கனு சனம் சொல்றாங்க. "" ஓ... அப்ப உங்களுக்கு ஆரியோட பிரச்சினையா, அதனால தான் எங்கிட்ட பேசறிங்களானு" லூஸ் டாக் விட்டாங்க அனிதா... அனிதா, சனம் ரெண்டு பேருமே விவாதத்தை முடிக்கவே தெரியாதவங்கனு எல்லாருக்கும் தெரியும். ரெண்டு பேரும் ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப சொல்ல ஆரம்பிச்சாங்க. கேஸ் தீர்ந்து போய்டும்னு சொன்ன போது நான் பிக்பாஸ் கிட்ட பேசிக்கறேன்னு அனிதா சொன்னது இங்க கவனிக்க வேண்டிய பாயிண்ட்.

அனிதாவுக்கு இந்த வாரம் கிடைத்திருப்பது அதிகாரம். ஆரியுடன் சென்ற வாரம் ஒன்றாக நின்றதில் அவர் கேப்டன் ஆனதை, தன்னுடைய அதிகாரமாக பார்க்கிறார் அனிதா. இதை வலுவாக்கும் விதத்தில் ஆரியும், அனிதாவுடன் கலந்து பேசி முடிவெடுக்கிறார். அதற்காக தான் அன்சீனில் இருந்து அந்த நிகழ்ச்சியை இங்கே விவரித்தேன். ஆரியின் புதிய முயற்சி மற்ற ஹவுஸ்மேட்ஸ்க்கு தெரிவதற்கு முன்னரே அனிதாவுக்கு தெரிந்திருக்கது என்பது தான் இங்க குறிப்பிட விரும்பும் விஷயம்.

அந்த அதிகாரம் தான் அனிதாவின் உடல் மொழியில் வெளிப்பட்டது. ரேஷனிங் பார்த்துக் கொள்வது தான் ரியோவின் வேலை. எனக்கு சமையலை பத்தி எதுவும் தெரியாது என்று அணி பிரிக்கும் போதே சொன்னார் ரியோ. சாம்பாருக்கு எந்த பருப்பு தேவை என்பது ரியோவுக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. அனிதாவிற்கு வேறு தகவல்கள் தேவைப்பட்டால் அர்ச்சனா, நிஷா இருவரிடம் சென்று கேட்டிருந்தால் அவர்கள் தெளிவாக சொல்லியிருப்பார்கள். ஆனால் தேவையே இல்லாமல் ரியோவை கேள்வி கேட்டது தவறான செயல்.

ஆரி அங்க வந்த உடனே அதே பல்லவி. இதுல இன்னொரு விஷயம் மதியத்துக்கு புளிசாதம்னு சனம், ரியோ ரெண்டு பேருக்குமே தெரியும். ஆரி கிட்ட பேசிட்டு இருக்கும் போது தான், மதியம் புளி சாதம்னு ரியோ சொல்றாரு. இவ்வளவு நேரம் ஏன் சொல்லலைனு அதூக்கும் கோவப்பட்டு பெட்ரூம்ல போய் உக்காந்துட்டாங்க அனிதா. அதை பார்த்த ரியோவுக்கு இன்னும் கோபம் வந்து, ஆரியை கூப்பிட்டு கிச்சன் டீம்ல அனிதா வேண்டாம்னு சொல்றாரு. அப்ப அனிதாவுக்கு சப்போர்ட்டா ரியோவை சமாதானபடுத்தறது சனம்.. எப்படி பாருங்க. மதியம் புளிசாதம்னு சனம்க்கு நல்லாவே தெரியும். இருந்தாலும் அனிதாகிட்ட மதியத்துக்கும் சேர்ந்து சாம்பார் வைங்கனு சொன்னது சனம். ஆனா ரியோ கிட்ட மட்டும் சண்டை போடறாங்க அனிதா...

திரும்பி வந்த அனிதா, ரியோ, சனம், மூணு பேரும் ஒரே விஷயத்தை மாத்தி மாதி பேசிட்டு இருந்ததை பார்த்து கொஞ்சம் தலை சுத்திப் போச்சு. இதை வேடிக்க பார்த்துட்டு இருந்த அர்ச்சனா, ஒரு துவரம் பருப்பு பாக்கெட்டை எடுத்து கொண்டு வந்து கொடுக்கறாங்க. சரி ஏதோ பேச்சை மாத்தலாம்னு யோசிச்ச ஆரி, இப்ப சாம்பார் எதுல வைக்கப் போற, துவரம் பருப்பா, பாசிப்பருப்பானு கேட்டாரு. "பாசிப்பருப்புல சாம்பார் வைக்க முடியாது, சமைக்க தெரிஞ்சவங்க கிட்ட ஏன் இப்படி பேசறிங்கனு" எறிஞ்சு விழுந்தாங்க. ஆரியோட முகம் அப்படியே மாறிப் போச்சு.

ஆக்சுவலா இந்த வார குக்கிங் டீம்ல ஜித்து பாய் இருந்தாரு. ஆனா சுரேஷ் வெளிய போனதால அவரை மாத்திட்டாங்க. ஜஸ்ட் மிஸ்ஸு. பெட்ரூம்ல அர்ச்சனாவும், நிஷாவும் ஆனந்தமா நடக்கறதை பார்த்துட்டு இருந்தாங்க. ரியோவை கிண்டல் செஞ்சு நிஷா சிரிச்சுட்டு இருக்கும் போது அனிதா அந்த பக்கமா வராங்க. அதுக்கு ஒரு பஞ்சாயத்து வரும்.

கிச்சன் டீம்ல இருந்த அர்ச்சனாவோட அதிகாரத்தை குறைக்கவும், இந்த வீட்ல அவங்க முக்கியத்துவத்தை குறைக்கவும் தான் அர்ச்சனாவை குக்கிங்ல போடாம இருந்தாரோனு சந்தேகம் வருது.

அதுக்கப்புறம் நாமினேஷன் நடந்தது. அனிதா, சனம் தான் அதிக ஓட்டுகள் வாங்கினாங்க. அப்புறம் வெளிய நிக்க வச்சு நாமினேஷன்ல எல்லார் பேரையும் சொல்லி, கடைசில இந்த வாரம் எவிக்‌ஷன் இல்லைனு சொல்லிட்டாரு பிக்பாஸ். டிவிஸ்ட் கொடுத்தாராம்.

அப்புறம் ஹவுஸ்மேட்ஸ் தீபாவளிக்கு யாரை மிஸ் பண்றாங்களோ அவங்களுக்கு ஒரு லெட்டர் எழுதனும்னு டாஸ்க். எல்லாரும் ஆளுக்கு ஒரு மூலைல உக்காந்து சோகத்தை பிழிஞ்சு எழுதிட்டு இருந்தாங்க.

அடுத்து "இப்பவே கண்ணை கட்டுதே" டாஸ்க். பிக்பாஸ் உண்மையை சொல்லுங்க. காலைல அனிதா vs சனம் பிரச்சினையின் போது ஆரி அதை பார்த்து முழிச்சுட்டு நின்னாரே. அப்ப தோணின ஐடியா தானே இது. வீடு ரெண்டு டீமா பிரிஞ்சு விளையாடனும். ஆரி தான் நடுவர். ஒரு சின்ன டாஸ்க் தான் ஜாலியா இருந்தது.

என்னது ஹவுஸ்மேட்ஸ் ஜாலியா இருக்காங்களா? இருக்கக் கூடாதே.. எட்றா அந்த கடிதம் டாஸ்க்கைனு, எழுதின லெட்டரை எல்லாம் படிக்க சொல்லிட்டாரு பிக்பாஸ்.

எல்லாரும் அழுகாச்சியோட லெட்டர் படிச்சாங்க. ஜித்து பாய், ரியோ படிச்ச லெட்டர்ஸ் தான் தரம்.

தீபாவளி கொண்டாட்டங்கள் ஆரம்பம்னு வாய்ஸ் ஓவரோட நேற்றைய நாள் முடிஞ்சுது.

Advertisement
மேலும் செய்திகள்
hindi-bigg-boss-14-new-strategy
எல்லை மீறும் இந்தி பிக் பாஸ்.. ராக்கி மற்றும் அபிநவ்வின் புதிய நெருக்கம்.. திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்..
aari-updates-in-bigg-boss
பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கு அடித்த ஆஃபர்.. 105 நாளில் 1 கோடி சம்பளம்.. வாயைப்பிளக்கும் ரசிகர்கள்..
biggboss-season-4-winner-updates
பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார் தெரியுமா?? இணையதளத்தில் கசிந்த தகவல்..
suresh-chakravarthy-reason-for-not-coming-in-bigg-boss
மொட்டை தாத்தாவை தெரிந்தே ஒதுக்கியதா விஜய் டிவி?? சலசலக்கும் நெட்டிசன்கள்..
what-happened-in-promo3-biggboss
மீண்டும் பிக் பாஸில் அழுகை குரல்.. நடிகை ரேகாவின் உருக்கமான பதிவு.. வெளியான மூன்றாவது ப்ரோமோ..
what-happened-in-bigg-boss-on-98thday
டிக்கட் டூ பினாலே வின்னர் சோமு.. ஆரி சேவ் என அறிவித்த கமல்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
bigg-boss-4-day-93-review
தொடரும் டிக்கட் டூ பைனல் டாஸ்க் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது?நாள் 93
what-happened-in-biggboss4-on-92th-day
கடைசி வார நாமினேஷன்.. டிக்கெட் டூ பைனல் டாஸ்க்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
what-happend-in-biggboss-on-91th-day
ஆண்டவர் வருகை.. ஆஜித் வெளியேற்றம்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
bigg-boss-4-day-90-review
ஆண்டவர் வருகை ,பாலா -ஆரி மோதல் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது ?நாள் 90

READ MORE ABOUT :

/body>