பிசாசு பட நடிகை வாய்ப்பை பறித்த ஹீரோயின்..

by Chandru, Nov 10, 2020, 14:24 PM IST

சீனியர் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க முன்னணி ஹீரோயின்கள் மறுக்கின்றனர். அவர்கள் தன்னைவிட வயதில் குறைந்த ஹீரோக்களுடன் நடிக்க சம்மதிக்கின்றனர். நம்மூரிலேயே சீனியர் ஹீரோக்களுக்கு ஜோடி சேர முன்னணி நடிகர்கள் மறுக்கின்றனர். இதேநிலைதான் தெலுங்கு ஹீரோக்களுக்கும். சிரஞ்சீவி, என்.டி. பால கிருஷ்ணா ஆகியோருடன் நடிக்க முன்னணி நடிகைகள் மறுத்துவிடுகின்றனர்.

போயோபதி ஸ்ரீனு இயக்கத்தில் என்.டி.பால கிருஷ்ணா ஜோடியாக நடிக்க முன்னணி நடிகைகளுக்கு வலை வீசிய போது வேறு படங்களில் பிஸியாக இருப்பதாகக் கூறி கால்ஷீட் மறுத்துவிட்டனர். இதையடுத்து வாய்ப்புக்காகக் காத்திருக்கும் இளம் நடிகைகளுக்கு அந்த வாய்ப்பு சென்றது.மிஷ்கின் இயக்கிய பிசாசு படத்தில் நடித்தவர் பிரயாகா மார்ட்டின்.

இப்படத்தில் பிசாசாக நடித்ததால் அவரது முகமே பெரிதாகக் காட்டப்படவில்லை. படம் வெற்றி பெற்றும் பிரயாகாவுக்கு பட வாய்ப்பு எதுவும் வரவில்லை. மலையாள படங்களில் நடித்த வந்த பிரயாகா மீண்டும் மலையாள படங்களிலேயே நடிக்கச் சென்றார். திலீப் நடித்த ராம்லீலா, முரளி கோபியுடன் பாவா, தியான் ஶ்ரீனிவாசனுடன் ஒரே முகம், ரோஷன் மாத்யூவுடன் விஸ்வாசபூர்வம் மன்சூர் போன்ற படங்களில் நடித்தார். நீண்ட நாள் கழித்து 'போடா ஆண்டவனே என் பக்கம்' என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த படம் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் தான் என்.டி.பாலகிருஷ்ணாவுக்கு ஜோடி போட வாய்ப்பு வந்தது. மகிழ்ச்சியுடன் நடிக்க ஒப்புக்கொண்டார்.

சமீபத்தில் இப்படத்தின் டெஸ்ட் ஷூட் நடந்தது. பிறகு காட்சிகளைப் பார்த்தபோது பாலகிருஷ்ணாவுக்கும் பிரயாகாவுக்கும் வயது வித்தியாசம் அதிக இருப்பது தெரிந்தது. இருவரும் தந்தை மகள் போல் தோன்றவே பிரயாகாவை படத்திலிருந்து நீக்கினர் இயக்குனர். இதில் பிரயாகா மனம் நொந்துப்போனார். என்ன செய்வதென்று தெரியாமல் படத்திலிருந்து விலகி மீண்டும் மலையாளம் பக்கம் கவனத்தைத் திருப்பினார். அவருக்குப் பதிலாக தற்போது அந்த வாய்ப்பு நடிகை சாயிஷாவுக்கு சென்றிருக்கிறது.

சாயிஷா தமிழில் வனமகன், கடைக்குட்டி சிங்கம், கஜினி காந்த் போன்ற படங்களில் நடித்தவர். இவர் நடிகர் ஆர்யாவை காதலித்து மணந்துகொண்டவர். திருமணம் முடிந்தாலும் தொடர்ந்து நடித்து வருகிறார். டெடி என்ற படத்தில் கணவர் ஆர்யாவுடன் நடித்திருக்கிறார். பிரயாகா வாய்ப்புதான் தற்போது சாயிஷாவுக்கு கிடைத்திருக்கிறது. இவர் ஏற்கனவே தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் சாயிஷா தனது உடற்கட்டைக் கட்டுக் கோப்பாக வைத்திருக்கத் தினமும் கடுமையான நடனம் மற்றும் உடற்பயிற்சி செய்து வருகிறார்.

சினிமாவில் இதெல்லாம் சாதாரணமப்பா என்பதுபோல் கடந்த மாதம் புதிய படமொன்றில் நடிக்க நிவேதா பெத்துராஜ் ஒப்பந்ததம் ஆகி இருந்தார்.கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவரை நீக்கிவிட்டு ஐஸ்வர்யா ராஜேஷை நடிக்க ஒப்பந்தம் செய்தனர்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை