Sunday, Dec 5, 2021

பிக்பாஸ் 4 நாள் 41

by Mahadevan CM Nov 14, 2020, 16:44 PM IST

முந்தின நாளின் தொடர்ச்சியில் சுச்சியும் அனிதாவும் தீவிர டிஸ்கஷன்ல இருக்காங்க. பாலோவோட ரொம்ப க்ளோசா இருக்கனும்னு சுச்சிக்கு ஆசை. அது ஏன்னு தெரியல. ஆனா ஷிவானியும் பாலாவும் தான் எப்பவும் ஒன்னா இருக்காங்க. அதை சுச்சி எப்படி பார்க்கறாங்கனு தெரியல. நேத்து அவங்க பேசினதுல கூட நிறைய குழப்பம். ரொம்ப சிம்பிளா சொல்லனும்னா பாலாவுக்காக கேப்பியும், ஷிவானியும் சண்டை போடலாம். ஆனா கேப்பி இடத்துல சுச்சி வர நினைக்கறாங்களோனு தோணுது.

சுச்சிக்கும் பாலாவுக்கும் 13 வயசு டிபரன்ஸ் இருக்கு. பாலா ஷிவானி, கேப்பி, ஆஜித் எல்லாரும் ஒரே ஏஜ் குரூப். அதனால அவங்க ஒன்னா இருக்காங்க. அந்த இடத்துல சுச்சி இருக்க முடியாது. இருக்கவும் கூடாது. க்ளோஸ் ப்ரெண்டா இருக்கறதுன்னா எப்பவும் ஒன்னா ஒட்டிட்டு இருக்கறது நினைச்சுட்டாங்க போலருக்கு. அதுக்காக அனித கிட்ட புலம்பிட்டு இருக்காங்க. "பாலாவுக்கும், ஷிவானிக்கும் நடுவுல ஏதாவது இருந்தா நான் அவன் பக்கம் திரும்பவே மாட்டேன்னு" இப்படி ஒரு ஸ்டேட்மெண்டுக்கு என்ன மீனிங்னு தான் தெரியல. "அவன் பின்னாடி லைன்ல நிக்கறேன்னு நினைச்சுட்டானா" இப்படி ஒரு வார்த்தையை சொல்ல வேண்டிய அவசியம் என்ன.?

நாங்க வியந்து பார்த்த ஒரு ஆளுமையான சுச்சி நீங்க இல்லங்க. தயவுசெய்து இந்த சுழல்ல இருந்து வெளிய வாங்க.

இது தொடர்பா அனிதாவும் பாலாவும் டிஸ்கஸ் பண்றாங்க. இந்த வீட்டுக்கு வந்த ரெண்டாவது நாளே, அனிதாவும் பாலாவும் தான் என் ப்ரெண்ட்ஸ்னு முடிவு பண்ணிட்டாங்க சுச்சி. வேற யார்கிட்டேயும் பழகாம இன்னும் அதை மெயிண்டெயின் பண்றாங்க. இதை பாலா சரியா சுட்டிகாட்டறாரு.

நாள் 41

பேட்ட பராக் பாடலோடு துவங்கியது நாள்.

காலையிலேயும் சுச்சி தான். தனியா உக்காந்துட்டு இருந்த சுச்சி மழைல விளையாட வந்த ஷிவானியை பேச கூப்பிடறாங்க. "எங்கூட யாருமே பேச மாட்டேங்கறாங்க, நீயாவது வந்து பேசுனு" சொல்றாங்க. அதுக்கு கொஞ்ச நேரம் முன்னாடி தான் பாலா, ரமேஷ், ஆஜித் எல்லாரும் சுச்சியோட உக்காந்து பேசிட்டு இருந்தது அன்சீன்ல இருக்கு.

வைல்ட் கார்ட் கண்டஸ்டண்டா வந்த சுச்சி, வெளிய மக்கள் என்ன நினைக்கறாங்கனு ஹவுஸ்மேட்ஸ் கிட்ட நிறைய சொன்னாங்க. ஆனா அதை யாரும் பெருசா எடுத்துக்கலை. சுச்சிக்குனு எந்த முக்கியத்துவமும் கொடுக்கல. இதெல்லாம் தான் சுச்சியோட பிரச்சினைனு நினைக்கிறேன்.

பாலா, சிவானி பத்தி மட்டுமே பேசிட்டு இருக்காங்க சுச்சி. இது எங்க போய் முடியப் போகுதோ.

புது கேப்டன் தேர்ந்தெடுக்கும் நேரம். ஆஜித், நிஷா, கேப்பி மூணு பேரும் நாமினேஷன் ஆகி, ஆஜித் கேப்டன் ஆனாரு.

மறுபடியும் ஒரு எலும்பிச்சம்பழம் பஞ்சாயத்து. இந்த முறை சாம் கொண்டு வந்துருக்காங்க. சாம் கேட்டப்போ இல்லேன்னு பதில் வந்துருக்கு. ஆனா நிஷா ஒரு பழத்தை எடுத்துட்டு போய் ஜித்து பாய்க்கு ஜூஸ் போட்டு கொடுத்துருக்காங்க. இதை பத்தி குக்கிங் டீம். ஆரி மூணு பேர் கிட்டயும் சொல்றாங்க.

அதுக்கு முன்னாடியே இந்த பிரச்சினை பத்தி அர்ச்சனா, நிஷா, ரியோ, சோம் டிஸ்கஸ் பண்றாங்க. இந்த வாரத்துல முதல் நாளே நாலு லெமனை எடுத்து தனியா வச்சாச்சு. அதுல இருந்து தான் எடுத்தேன்னு நிஷா சொல்றாங்க.

சாம் சொல்லிட்டு இருக்கும் போது சனம், அனிதா ரெண்டு பேரும் பேசிட்டு இருந்தாங்க. அதனால ஆரிக்கு சரியா புரியல. சாம் அனிதா கிட்ட கேட்ருக்காங்க. நிஷா எடுத்துட்டு போனதை சனம் பார்த்துருக்காங்க. அனிதாவுக்கு பிரச்சினை வரும்போதெல்லாம் சனம் கூடவே நிக்கறாங்க.

இப்ப என்ன செய்யலாம்னு ஆரி கிட்ட கேக்கவும், அவரு எதுக்கு என்ன செய்யனும்னு யதார்த்தமா கேக்க, அனிதா பொங்கிருச்சு. இவ்வளவு நேரம் உங்க முன்னாடி தானே பேசினோம், எத்சியுமே கண்டுக்க மாட்டேங்கறிங்கனு சொன்ன உடனே ஆரி வெடிச்சுட்டாரு. இந்த வாரம் முழுவதும் தேக்கி வச்சுருந்த கோபம். கேப்டன் பதவில கடைசி நாளா வேற போச்சு. லெமன் பிரச்சினை மறந்து போய் இவங்க ரெண்டு பேரும் சண்டை போட ஆரம்பிச்சுட்டாங்க.

இவங்க எதை பத்தி பேசறாங்கனு பெட்ரூம்ல இருந்து அர்ச்சனா & கோ பார்த்துட்டு இருந்தாங்க. சாம் பெட்ரூம் போக, லெமன் மேட்டர் தான் பஞ்சாயத்துனு அர்ச்சனா & கோ கிட்ட சொல்றாங்க.

அடுத்து நடந்ததெல்லாம்ஸ்பான்சர் டாஸ்க் தான். வசந்த் & கோ டாஸ்க் நடந்தது. அத்தனை பேருக்கும் கிப்ட் வந்தது.

அடுத்து ஸ்பின்னிங் வீல் வச்சு ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கிப்ட் கொடுத்தாங்க. தீபாவளி விருந்து, மத்தாப்பு, டிஜெ மியூசிக் னு விதவிதமா வந்தது. நம்ம சனம்க்கு எலுமிச்சம்பழம் வந்துது. பிக்பாஸே டென்சன் ஆகிட்டாரு.

தீபாவளி கொண்டாட்டங்கள் தொடர்ந்தது.

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்

You'r reading பிக்பாஸ் 4 நாள் 41 Originally posted on The Subeditor Tamil

READ MORE ABOUT :

More Bigg boss News