இம்ரான் கான் தீபாவளி வாழ்த்து

by SAM ASIR, Nov 14, 2020, 14:47 PM IST

பாகிஸ்தான் பிரதமரான இம்ரான் கான், அங்கு வாழும் இந்து சமயத்தவருக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். "எங்களது அனைத்து இந்து குடிமக்களுக்கும் மகிழ்ச்சியான தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கோவிட்-19 பாதிப்பின் மத்தியிலும் பாகிஸ்தானிலுள்ள இந்து மக்கள் உற்சாகத்துடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். வீடுகளையும் கோயில்களையும் வண்ணமயமான விளக்குகளால் அலங்கரித்துள்ளனர்.

கராச்சி, லாகூர் போன்ற பெருநகரங்களுடன் மாடியாரி, டேண்டோ அல்லஹ்யார், டேண்டோ முகம்மத் கான், ஜாம்சோரா, பாடின், சான்ஹார், ஹாலா, டேண்டோ ஆதாம் மற்றும் ஷாஹ்தாத்பூர் ஆகிய இடங்களிலும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

More World News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அதிகம் படித்தவை