கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.. மீண்டும் பாலாவால் லக்ஸரி பட்ஜெட் பறிபோய் விடுமோ.. அச்சத்தில் ஹவுஸ்மேட்ஸ்..!

Advertisement

தனியார் தொலைக்காட்சியில் மக்களைக் கவரும் விதமாக நான்கு வருடமாக பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதனை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்குகிறார். ஒவ்வொரு வருடமும் இறுதியில் தொடங்கும் இந்நிகழ்ச்சியானது பல போட்டியாளர்களுடன் கொண்டு 100 நாட்கள் நடைபெறும். வெளிநடப்பு எதுவும் அறியாமல் சிறப்பாக விளையாடி யாரு மக்களின் மனதைக் கவர்கிறார்களோ அவர்கள் தான் பிக் பாஸின் வெற்றியாளர்கள். இந்த வருடமும் பிக் பாஸ் 4 மிக பிரம்மாண்டமாகத் தொடங்கப் பெற்றது. முதல் இரண்டு வாரம் எதிர் பார்த்த அளவுக்குச் சுவாரசியம் இல்லாமல் இருந்தது. ஆனால் நாள் ஆக ஒவ்வொருவரின் சாயம் வெளுக்க ஆரம்பித்தது.

ஒரு சின்ன விஷயத்தைக் கூட எப்படி ஊதி ஊதி பெரிதாக்குவதை அனிதா மற்றும் சனத்தைப் பார்த்துத் தான் கற்றுக்கொள்ள வேண்டும். பாலாஜியின் திமிர் பிடித்த பேச்சு அனைவரையும் முகம் சுளிக்க வைக்கிறது. அதுவும் அண்ணன் தங்கச்சி டாஸ்கில் பாலாஜியும் ஷிவானியும் அடித்த லூட்டிக்கு அளவே இல்லாமல் போனது. ஆரியின் சமத்துவ பேச்சு மக்கள் அனைவரையும் கவர்ந்தது.

சோமு இப்பதான் வாயைத் திறந்து சத்தமாகப் பேச ஆரம்பித்துள்ளார். இப்படிப்பட்ட சூழலில் நேற்று தான் பிக் பாஸ் அனைவருக்கும் உருப்படியான டாஸ்க் கொடுத்துள்ளார் என்று கூறலாம். இது நாள் வரைக்கும் போட்டியாளர்கள் சாப்பிட்டு, தூங்கி, சண்டை போட்டு.. இந்த மூன்று வேலைகளை மட்டுமே செய்து வந்தனர். அவர்களுக்குச் சலித்ததோ தெரியவில்லை. ஆனால் பார்க்கும் ரசிகர்களுக்கு மிகவும் வெறுத்துவிட்டது. இந்த டாஸ்கில் முக்கியமானது அனைவரும் நேரத்தைச் சரியாகப் பின்பற்றுகிறார்களா என்பது தான்.

நேற்று கொஞ்சம் காமெடி கலந்து டாஸ்க் இனிதே முடிவு பெற்றது. இன்று வெளியான ப்ரோமோவில் பாலாஜிக்கு கொடுத்த டாஸ்க்கை செய்யாமல் தூங்கிக் கொண்டு இருக்க மற்ற போட்டியாளர்கள் பாலாஜியை எழுப்பியும் பாலாஜி டாஸ்க்கில் கலந்து கொள்ளவில்லை. இதனால் இந்த வாரமும் லக்ஸரி பட்ஜெட் நம்மை விட்டுப் போய்விடுமோ என்று போட்டியாளர்கள் பயத்தில் உள்ளனர்.

Advertisement
மேலும் செய்திகள்
hindi-bigg-boss-14-new-strategy
எல்லை மீறும் இந்தி பிக் பாஸ்.. ராக்கி மற்றும் அபிநவ்வின் புதிய நெருக்கம்.. திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்..
aari-updates-in-bigg-boss
பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கு அடித்த ஆஃபர்.. 105 நாளில் 1 கோடி சம்பளம்.. வாயைப்பிளக்கும் ரசிகர்கள்..
biggboss-season-4-winner-updates
பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார் தெரியுமா?? இணையதளத்தில் கசிந்த தகவல்..
suresh-chakravarthy-reason-for-not-coming-in-bigg-boss
மொட்டை தாத்தாவை தெரிந்தே ஒதுக்கியதா விஜய் டிவி?? சலசலக்கும் நெட்டிசன்கள்..
what-happened-in-promo3-biggboss
மீண்டும் பிக் பாஸில் அழுகை குரல்.. நடிகை ரேகாவின் உருக்கமான பதிவு.. வெளியான மூன்றாவது ப்ரோமோ..
what-happened-in-bigg-boss-on-98thday
டிக்கட் டூ பினாலே வின்னர் சோமு.. ஆரி சேவ் என அறிவித்த கமல்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
bigg-boss-4-day-93-review
தொடரும் டிக்கட் டூ பைனல் டாஸ்க் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது?நாள் 93
what-happened-in-biggboss4-on-92th-day
கடைசி வார நாமினேஷன்.. டிக்கெட் டூ பைனல் டாஸ்க்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
what-happend-in-biggboss-on-91th-day
ஆண்டவர் வருகை.. ஆஜித் வெளியேற்றம்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
bigg-boss-4-day-90-review
ஆண்டவர் வருகை ,பாலா -ஆரி மோதல் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது ?நாள் 90

READ MORE ABOUT :

/body>