ஆண்டவர் வருகை.. கமல் கொடுத்த வித்தியாசமான டாஸ்க்..ஆரியும் ரியோவும் சேவ்.. பிக் பாஸில் நேற்று என்ன நடந்தது??

Advertisement

ஆண்டவர் தினம். எப்பவும் போல ஸ்பெஷல் ட்ரஸ்ல கலக்கலா வந்தாரு. ஆனா நேத்து முழுவதுமே வழக்கமான உற்சாகம் இல்லை. ரொம்பவும் சோர்வா இருந்தா மாதிரி தெரிஞ்சுது. ஒருவேளை கண்டண்ட்டே இல்லாத ப்ரொகிராம்ல என்ன தான் செய்யறதுனு டயர்ட் ஆகிருக்கலாம்.

காலத்தை பற்றிய அறிமுகம் கொடுத்துட்டு நேரடியா வெள்ளிக்கிழமை நிகழ்வுக்கு போய்ட்டாரு.

டங்கா மாரி ஊதாரி பாடலோடு துவங்கியது நாள். பாதி பேர் வெளிய ஆட, இன்னும் சில பேர் பெட்ரூம்லேயே ஆடி முடிச்சுட்டாங்க.

டைனிங் டேபிள். முந்தின நாள் எக்ஸ்ட்ராவா வந்து உணவை காலை டிபனுக்கு ரெடி பண்ணிட்டாங்க போலருக்கு. சாப்பிடும் போது அர்ச்சனாவுக்கும், சோம்க்கும் சின்னதா மனஸ்தாபம்.

வெள்ளிக்கிழமை ஒன்னுமே செய்யாம தூங்கிட்டாங்க போலருக்கு. நேரடியா நைட் வந்துருச்சு.

நைட் ஆரியும் அனிதாவும் பேச்சுவார்த்தை நடத்தறாங்க. அதாவது ஆரி கேப்டனா இருந்த போது நடந்த ஒரு சின்ன பிரச்சினைக்கு பேச்சு வார்த்தை. ஆரிக்கு அப்புறம் ஆஜித் கேப்டனாகி, அடுத்து ரியோ கூட கேப்டன் ஆகிட்டாரு. இவங்க இன்னும் அதை மறக்காம பேசிட்டு இருக்காங்க. இந்த புளிச்ச தயிர்சாதம் தொல்லை தாங்க முடியலடா மொமண்ட்.

சரி ரெண்டு பெருந்தலைகள் பேசறாங்களே, ஏதாவது கண்டண்ட் கிடைக்கும்னு காதை தீட்டிட்டு உக்காந்தேன். ஆனா நடந்தது.......

ஆக்சுவலா அனிதாவுக்கும் ஆரிக்கும் என்ன பிரச்சினைனு அவங்க ரெண்டு பேருக்குமே மறந்து போச்சு. ஆரியை பொறுத்தவரைக்கும் அடுத்தவங்களோட தவறை சுட்டி காட்டறது இந்த வீட்ல தன்னோட வேலைனு உறுதியா நம்பறாரு. ஒவ்வொரு தடவை அனிதா கிட்ச பேசும் போது, இதை சொல்லிட்டே இருக்காரு. ஆனா அவர் செய்யற தப்பை சுட்டி காட்டினா அதை ஏத்துக்கறதே கிடையாது.

எலுமிச்சம்பழம் மேட்டர் தான் பிரச்சினைக்கு ஆதாரம். அதுல ரெண்டு பிரிவு இருக்கு.
அ. சாம் வந்து லெமன் கேட்ட போது அனிதா இல்லைனு சொன்னது.

ஆ. நிஷா வந்து யார்கிட்டயும் கேக்காம லெமன் எடுத்துட்டு போனது.

இந்த ரெண்டு பஞ்சாயத்தும் ஒரே டைம்ல ஆரி முன்னாடி வருது. இந்த விஷயத்தை சாம், அனிதா, சனம் சொல்லும்போது மலங்க மலங்க முழிச்சுட்டு நின்னாரு ஆரி. அதுக்கப்புறம் கொஞ்சம் சுயநினைவுக்கு வந்து, என்ன பிரச்சினைனு கேக்கும் போது தான், "நீங்க எதையுமே கண்டுக்கறதில்லைனு" அனிதா சொன்னதை பர்சனலா எடுத்துக்கறாரு ஆரி. லெமன் பஞ்சாயத்து மறைஞ்சு போய், அனிதா சொன்னது பஞ்சாயத்து ஆகிடுச்சு.

தன்னை பத்தி யாராவது ஏதாவது சொன்னா உடனே பொங்கி எழுந்து அதுக்கு விளக்கம் கொடுக்கறாங்க அனிதா. தன்னை பத்தி தவறா போட்ரே ஆகக் கூடாதுனு ரொம்ப கவனமா இருக்காங்க. அந்த கவனம் அவங்க பேசும் போதும் இருக்கனும்ங்கறது ஆரியோட பாயிண்ட். அடுத்தவங்களை பத்தி யோசிக்காம வார்த்தையை விடறதை தப்புனு அனிதாவுக்கு புரிய வைக்க முயற்சி செய்யறாரு ஆரி. அந்த ஒரு காரணத்துக்காக தான் ஒன்னுமே இல்லாத பிரச்சினையை இன்னும் இழுத்துகிட்டு இருக்காரு ஆரி. அனிதாகிட்ட இதெல்லாம் செல்லுபடி ஆகுமா. அனிதா யாருடைய அறிவுரையையும் ஏத்துக்கக்கூடியவங்க கிடையாது. அதே மாதிரி அவங்க தவறை சுட்டி காட்டினாலும் ஒத்துக்கிட்டதே இல்லை. கமல் சார் சொல்லும்போதே மறுத்து பேசும் அனிதா, ஆரி சொல்றதையா கேக்க போறாங்க.

மேல சொன்னா மாதிரி அடுத்தவர்களுடைய தவறை எடுத்துசொல்லி அட்வைஸ் கொடுக்கறதை தான் ஆரி இங்க முதல்ல் இருந்தே பண்ணிட்டு இருக்காரு. நேத்தும் அதுதான் நடந்தது. ஆரி பேசும் போது அனிதா குறுக்கிட்டு நோஸ்கட் செஞ்சாங்க. அதே மாதிரி அனிதா பேசும் போது ஆரி குறுக்க புகுந்து அதே மாதிரி நோஸ்கட் செய்யறாரு. ஆனா மூக்குடைஞ்சது என்னமோ நமக்கு தான்.

ஆரி பேசிட்டு இருக்கும்போதே எந்திரிச்ச அனிதா சாரினு பனித்துளில எழுதி காட்டிட்டு போய்ட்டாங்க. ஏம்மா இதை முதல்லேயே செஞ்சுருந்தா, நான் இவ்வளவு தூரம் எழுதிருக்க வேண்டாம்ல.

மீண்டும் ஆண்டவர்...

காலத்தை கணித்த டாஸ்க் பத்தி பாராட்டி பேசினாரு. ஒரு நிமிஷம் இடைவெளில கணிச்ச ஆரி, ரியோ, கேப்பி டீமுக்கு ஸ்பெஷல் பாராட்டு. குழாயடி சண்டை போட்ட அர்ச்சனா, நிஷாவுக்கு பாராட்டு. குழாயடி சண்டைல இருந்து மெசேஜ் சொன்னாரு. கேப்பியும், ஆஜித்தும் குழந்தை மாதிரி நடிச்சு ரிவர்ஸ்ல போனதை பார்த்து தானும் ப்ளாஷ்பேக் போய்டாரு. ரியோ ப்ளாக் & ஒயிட்ல எம்ஜிஆர் மாதிரி நடிச்சதை பத்தி சொன்னவரு, எம்ஜிஆரோட தனக்கு இருந்த உறவை பத்தி சொன்னது நெகிழ்ச்சி. ரியோ கோபமா கண்ணாடியை உடைச்சதுக்கும், தன்னோட வாழ்க்கைல இருந்து உதாரணம் சொன்னாரு. சகலகலா வல்லவன் படத்துல அவருக்கு அடிபட்ட போது எம்ஜிஆர் கூப்பிடு பேசினதை சொன்னாரு. ஆனா இதெல்லாம் கண்டண்ட் இல்லாத குறையை போக்கறதுக்கு கமல் சார் எடுத்த முயற்சிகள்.

பாலாவை பத்தி நாம இங்க பதிவு செஞ்சுருந்த விஷயத்தை நேத்து கமல் சாரும் பினாரு. பாலா கொஞ்சம் அடங்காபிடாரி தான். ஆனா அவர் மேல தவறுனு சிட்டிகாட்டும் போது, அதை ஏத்துக்கறார். அதுக்கப்புறம் அதை பத்தி யோசிச்சு தன்னை மாத்திக்க முயற்சி செய்யறாரு. அந்த முயற்சிகளை தான் கமல் சார் நேத்து பாராட்டினார். கூடவே ரூல்ஸை பாலோ பண்ண சொல்லி அன்பா கேட்டுகிட்டாரு.

போன வாரம் எந்த பஞ்சாயத்துல் இல்லாததால நேத்து எபிசோட்ல கேம் விளையாட ஆரம்பிச்சுட்டாரு. இப்பவாவது சுரேஷ், சனம், அனிதாவோட மகிமையை புரிஞ்சுக்கங்கய்யா... இந்த வாரம் சனம், அனிதா ரெண்டு பேரும் அமையா இருந்ததால ஏற்பட்ட விளைவு.

ஒவ்வொருத்தரும் ஒரு ஹவுஸ்மேட்ஸ் பத்தி ஒரு ரகசியம் சொல்லனும். எல்லாரும் சேஃபா விளையாடினதா கமல் சாரே சொல்லிட்டாரு.

அடுத்து ஒரு குத்துசண்டை க்ளவுஸ், ஒரு அட்டக்கத்தி. க்ளவுஸ் ஸ்ட்ராங்கான போட்டியாளருக்கு. அடடக்கத்தி வீக் கண்டஸ்டண்ட்.

இந்த மாதிரி டாஸ்க்ல நம்ம ஹவுஸ்மேட்ஸோட மந்தை மனநிலை வெளியே வந்துடும். பாலா, ரமேஷ், நிஷா 3 பேருக்கும் தான் எல்லாமே. பாலா ஸ்ட்ராங்கான கண்டஸ்டண்ட், நிஷாவுக்கு ஏகப்பட்ட காரணம் சொன்னாங்க.

அட்டகத்தி யார் அதிகமா வாங்கினாங்கனு கேட்ட அதை பத்தி பேசின கமல் சார், க்ளவுஸ் பத்தி பேசவே இல்லையே, ஏன்னு தெரியல.

ஆரியும், ரியோவும் சேவ் ஆனதோட நாள் முடியுது.

Advertisement
மேலும் செய்திகள்
hindi-bigg-boss-14-new-strategy
எல்லை மீறும் இந்தி பிக் பாஸ்.. ராக்கி மற்றும் அபிநவ்வின் புதிய நெருக்கம்.. திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்..
aari-updates-in-bigg-boss
பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கு அடித்த ஆஃபர்.. 105 நாளில் 1 கோடி சம்பளம்.. வாயைப்பிளக்கும் ரசிகர்கள்..
biggboss-season-4-winner-updates
பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார் தெரியுமா?? இணையதளத்தில் கசிந்த தகவல்..
suresh-chakravarthy-reason-for-not-coming-in-bigg-boss
மொட்டை தாத்தாவை தெரிந்தே ஒதுக்கியதா விஜய் டிவி?? சலசலக்கும் நெட்டிசன்கள்..
what-happened-in-promo3-biggboss
மீண்டும் பிக் பாஸில் அழுகை குரல்.. நடிகை ரேகாவின் உருக்கமான பதிவு.. வெளியான மூன்றாவது ப்ரோமோ..
what-happened-in-bigg-boss-on-98thday
டிக்கட் டூ பினாலே வின்னர் சோமு.. ஆரி சேவ் என அறிவித்த கமல்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
bigg-boss-4-day-93-review
தொடரும் டிக்கட் டூ பைனல் டாஸ்க் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது?நாள் 93
what-happened-in-biggboss4-on-92th-day
கடைசி வார நாமினேஷன்.. டிக்கெட் டூ பைனல் டாஸ்க்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
what-happend-in-biggboss-on-91th-day
ஆண்டவர் வருகை.. ஆஜித் வெளியேற்றம்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
bigg-boss-4-day-90-review
ஆண்டவர் வருகை ,பாலா -ஆரி மோதல் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது ?நாள் 90

READ MORE ABOUT :

/body>