சசிகலா பெயரில் படம் இயக்கும் சர்ச்சை இயக்குனர்.. தலைவிக்கு நடந்தது என்ன?

by Chandru, Nov 22, 2020, 11:50 AM IST

இயக்குனர் ராம் கோபால் வர்மா சர்ச்சைக்கு பெயர் பெற்றவர். ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், நடிகர் பவன் கல்யாண் என தொடங்கி அனுஷ்கா வரை வர்மா வம்பிழுக்காதவர்களே இல்லை. திரைப்படங்களையும் சர்ச்சை பிரச்னைகளை மையமாக வைத்து இயக்குகிறார். சமீபகாலமாக இவர் ஒடிடி தளங்களில் அடல்ட் படங்கள் இயக்கி ரிலீஸ் செய்து வருகிறார். வழக்கமாக தெலுங்கு பிரபலங்கள், ஆந்திர அரசியல் பற்றி கடுமையாக விமர்சிக்கும் வர்மாவின் பார்வை இம்முறை தமிழ்நாட்டு அரசியல் பக்கம் திரும்பி இருக்கிறது. இவர் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள மெசேஜில் சசிகலா பெயரில் படம் இயக்க உள்ளதாக அறிவித்திருப்பதுடன் டிசம்பர் மாதம் திரைக்கு ட்ரெய்லர் என்றும் அறிவித்துள்ளார்.

மேலும் ஒரு தலைவருக்கு என்ன நடந்தது என்பது பற்றி ரகசியத்தை இப்படம் வெளிப்படுத்தும் ஜெ, எஸ், டி, ஐ, ஒ ஆகிய எழுத்துக்களில் தொடங்கும் கதாபாத்திரங்கள் இதில் முக்கிய கதாபாத்திரங்களாக இருக்கும். இதன் ட்ரெய்லர் டிசம்பர் முதல் வாரத்தில் வெளிவரும் என்று அறிவித்திருக்கிறார். அத்துடன் ஜெயலலிதா சசிகலா படத்தையும் பதிவிட்டிருக்கிறார். மற்றொரு டிவிட்டில் தி E உண்மை சகிகலாவின் பின்னால் (The E TRUTH will be BEHIND the BEHIND in SASIKALA) என் குறிப்பிட்டிருக்கிறார். இன்னொரு டிவிட்டரில் தலைவி ரிலீஸ் ஆன் அண்றே எஸ் ரிலீஸ் ஆனது ஏண். அதற்கு பின்னால் இருந்த E என்ற நபர் யார் என்பது பற்றியும் காதல் மிகவும் ஆபத்தான அரசியல் என்றும், மன்னார்குடி கேங் பற்றியும் இப்படத்தில் இடம் பெறும் என மெசேஜ் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் ராம் கோபால் வர்மா.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை