இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் பிரபலம் இவர்தானாம்..

by Logeswari, Nov 22, 2020, 14:56 PM IST

தனியார் தொலைக்காட்சியில் மக்களை கவரும் விதமாக நான்கு வருடமாக பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதனை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்குகிறார். ஒவ்வொரு வருடமும் இறுதியில் தொடங்கும் இந்நிகழ்ச்சியானது பல போட்டியாளர்களுடன் கொண்டு 100 நாட்கள் நடைபெறும். வெளிநடப்பு எதுவும் அறியாமல் சிறப்பாக விளையாடி யாரு மக்களின் மனதை கவர்கிறார்களோ அவர்கள் தான் பிக் பாஸின் வெற்றியாளர்கள். இந்த வருடமும் பிக் பாஸ் 4 மிக பிரம்மாண்டமாக தொடங்க பெற்றது. முதல் இரண்டு வாரம் எதிர் பார்த்த அளவுக்கு சுவாரசியம் இல்லாமல் இருந்தது. ஆனால் நாள் ஆக ஒவ்வொருவரின் சாயம் வெளுக்க ஆரம்பித்தது. ஒரு சின்ன விஷயத்தை கூட எப்படி ஊதி ஊதி பெரிதாக்குவதை அனிதா மற்றும் சனமை பார்த்து தான் கற்றுக்கொள்ள வேண்டும்.

பாலாஜியின் திமிர் பிடித்த பேச்சு அனைவரையும் முகம் சுளிக்க வைக்கிறது. அதுவும் அண்ணன் தங்கச்சி டாஸ்கில் பாலாஜியும் ஷிவானியும் அடித்த லூட்டிக்கு அளவே இல்லாமல் போனது. ஆரியின் சமத்துவ பேச்சு மக்கள் அனைவரையும் கவர்ந்தது. சோமு இப்பதான் வாயை திறந்து சத்தமாக பேச ஆரம்பித்துள்ளார். இப்படிப்பட்ட சூழலில் நேற்று தான் பிக் பாஸ் அனைவருக்கும் உருப்படியான டாஸ்க் கொடுத்துள்ளார் என்று கூறலாம். இது நாள் வரைக்கும் போட்டியாளர்கள் சாப்பிட்டு, தூங்கி, சண்டை போட்டு.. இந்த மூன்று வேலைகளை மட்டுமே செய்து வந்தனர். அவர்களுக்கு சலித்ததோ தெரியவில்லை ஆனால் பார்க்கும் ரசிகர்களுக்கு மிகவும் வெறுத்துவிட்டது. இதைக்கிடையில் தான் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு நேரத்தை மையமாக கொண்டு ஒரு டாஸ்க் வைத்தார். இந்த டாஸ்கில் முக்கியமானது அனைவரும் நேரத்தை சரியாக பின்பற்றுகிறார்களா என்பது தான்..

இந்நிலையில் இந்த வாரம் ரியோ, பாலா, ஆரி, அனிதா, சம்யுக்தா மற்றும் சுசி எலிமேஷனுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். நேற்று சனி கிழமை என்பதால் ஆண்டவரான கமலஹாசன் காட்சி தந்தார். கடந்த ஒரு வாரம் நிகழ்ந்ததை பற்றி போட்டியாளர்களிடம் கேள்விகளை எழுப்பி பல சுவாரசியமான தகவல்ககளை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது ஏற்றினார். மற்றும் 2 டாஸ்க்கை வைத்து கடைசியில் ஆரி மற்றும் ரியோவை சேவ் செய்து நிகழ்ச்சியை முடித்தார். இன்று மக்களால் குறைந்த வாக்குகளை பெற்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் நபர் சுஜி என்று செய்திகள் வெளியாகியுள்ளது. அது மட்டும் இல்லாமல் பிக் பாஸ் வீட்டிற்கு ஒரு புதிய வரவு காத்திருக்கிறது.

More Bigg boss News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை