ஜிபிஎஸ் கருவி இனி கட்டாயம் : ஒரே நிறுவனத்தில்தான் வாங்க அதிகாரிகள் நிர்ப்பந்தம்.. லாரி உரிமையாளர்கள் வேதனை

by Balaji, Nov 22, 2020, 15:06 PM IST

தமிழகத்தில் இனி லாரிகளுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது இருப்பினும் குறிப்பிட்ட ஒரே ஒரு நிறுவனத்தில் மட்டுமே இந்த கருவிகளை வாங்க வேண்டுமென்ற போக்குவரத்து துறை அதிகாரிகள் நிர்ப்பந்திப்பது லாரி உரிமையாளர்கள் வேதனை அடைந்துள்ளனர். இது குறித்து நாமக்கல் லாரி உரிமையாளர் சங்கத்தினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது. டீசல் விலை உயர்வு. வழிப்பறி கொள்ளை, டோல் கட்டண உயர்வு போன்ற பல்வேறு சிரமங்களுக்கு இடையில் வாரி தொழில் செய்து வருகிறோம் . இந்த நிலையில், தமிழக அரசு மென்மேலும் தொழில் செய்பவர்களுக்கு சிரமத்தை கொடுக்கும் வகையில் நாள்தோறும் ஒரு சட்டத்தை அமுல்படுத்துகிறது. மத்திய அரசின் மோட்டார் போக்குவரத்து சட்டத்தில் பல்வேறு பிரிவுகள் இருந்தாலும், அதனை மாநில அரசுகள் தொழிலின் அன்றாட சிக்கல்கள், நடைமுறைக்கு ஒவ்வாத செயல்பாடுகள், ஆகியவற்றை பரிசீலித்து அந்தந்த மாநிலத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வரப்படுகிறது.

குறிப்பாக அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா ஆந்திரா போன்ற மாநிலங்களில் உள்ள வாகனங்களுக்கு வேக கட்டுப்பாட்டு கருவி ஸ்டிக்கர் போன்றவை குறிப்பிட்ட நிறுவனங்களில் தான் வாங்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஆனால், தமிழகத்தில் மட்டும் குறிப்பிட்ட நிறுவனங்களில் மட்டும்தான் வாங்க வேண்டும் என்று நிர்பந்திக்கிறார்கள், ஒரு கருவியை விற்பனை செய்ய 41 கம்பெனிகள் இருக்கும் பொழுது குறிப்பிட்ட கம்பெனிகளில் மட்டும் வாங்க வேண்டும் என்று போக்குவரத்து துறை நிர்பந்திக்கிறது. அப்படியெனில், போக்குவரத்து துறை உயர் அதிகாரிகளுக்கும், அந்த நிறுவனங்களுக்கும் என்ன தொடர்பு? இந்த விஷயம் சம்பந்தப்பட்ட துறை அமைச்சருக்கோ முதலமைச்சருக்கோ தெரியுமா? தெரியாதா? என்பது எங்களுக்கு தெரியவில்லை.

மத்திய அரசும், மாநில அரசும் அளிக்கின்ற சலுகைகளை அமுல்படுத்துவதை விட நெருக்கடி கொடுக்கின்ற சட்டத்திட்டங்களை அமுல்படுத்துவதில்தான் மோட்டார் போக்குவரத்து துறை அதிகாரிகளின் மும்முரமாக வேகம் காட்டுகின்றனர். ஏற்கனவே, ஸ்பீடு கவர்னர், ஸ்டிக்கர் போன்றவை குறிப்பிட்ட நிறுவனங்களில் வாங்க வேண்டும் என்ற நெருக்கடி கொடுத்துவிட்டு புதிதாக GPS கருவியும் இனி பொருத்த வேண்டும் அதுவும் குறிப்பிட்ட நிறுவனங்களில்தான் வாங்க வேண்டும் என் நிர்பந்தத்தை ஏற்படுத்துகின்றனர், இச்செயலுக்கு எங்களது சங்கம் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.

More Tamilnadu News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை