எஸ்.ஏ.சந்திரசேகர் துவக்கிய கட்சி பணால்

by Balaji, Nov 22, 2020, 15:13 PM IST

ஆரம்பித்த வேகத்திலேயே கட்சியை கைகளில் இருக்கிறார் எஸ்ஏ சந்திரசேகர். நடிகர் விஜய்யின் தந்தையும் நடிகருமான எஸ்ஏ சந்திரசேகர் சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தினார். தனது நிர்வாகத்தின் கீழ் இருக்கும் அகில இந்திய விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்ற இருப்பதாக அறிவித்தார். அதை தேசியக் கட்சியாக டெல்லி தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்ய விண்ணப்பித்து இருந்தார். ஆனால் இதற்கு விஜய் ஒப்புக் கொள்ளவில்லை. மேலும் தனது பெயரில் கட்சி துவங்குவதை கடுமையாக ஆட்சேபித்ததாக தகவல்கள் வெளியாகின. தமக்கும் அந்தக் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் விஜய் ரசிகர்கள் யாரும் அந்தக் கட்சியில் எந்த பொறுப்பும் ஏற்க கூடாது என்றும் விஜய் பெயரில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து புதிய கட்சியின் பொருளாளராக அறிவிக்கப்பட்டிருந்த விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் அந்த பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். கட்சியின் மாநில தலைவராக அறிவிக்கப்பட்டிருந்த திருச்சி சேர்ந்த விஜய் ரசிகர் பத்மநாபன் திடீரென தலைமறைவானார். சில நாட்கள் கழித்து அவரும் பொறுப்பில் இருந்து விலகுவதாக வீடு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு அறிவித்தார். இப்படி அடுத்தடுத்த சிக்கல்களால் கட்சியே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தார் சந்திரசேகர். இதைத்தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிய வேண்டாம் என தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி இருக்கிறார் அவர்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அதிகம் படித்தவை