ரியோவை ரவுண்டு கட்டி டார்கெட் செய்யும் ஹவுஸ் மேட்ஸ்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??

by Mahadevan CM, Nov 27, 2020, 15:05 PM IST

முந்தைய தினத்தின் தொடர்ச்சியாக நேற்று ஒளிபரப்பானது. ஆஜித்துக்கு கால் ச்ய்கிறார் ரியோ. முதலில் ஒரு பாட்டு பாட சொல்லிட்டு ஆரம்பிக்கலாமா என்றார்.

ரியோவோட மொத்த கான்வர்சேஷனும் பாலாவை நோக்கியே இருந்தது. இந்த வீட்ல அன்பு கிடையாது. இது ஒரு கேம் ஷோ. இங்க வந்து அன்புனு சொல்றவங்க போலியானவங்க. இன்னும் சில பேர் அன்பையே ஸ்ட்ராட்டஜியாக்கி விளையாடறாங்க. இதெல்லாம் பாலாவோட குற்றச்சாட்டு. பாலா சொல்வது அனைத்தும் தவறு என்பதை நிரூபிக்க ஆஜித் கிட்ட பேசறாரு ரியோ.

இசை தரும் சந்தோஷம் எப்படி பொய்யில்லையோ அதே மாதிரி மத்தவங்க அன்பு காட்டும் போது சந்தோஷம் கிடைக்குது. அதை மட்டும் எப்படி பொய்னு சொல்ல முடியும்.

மத்தவங்க காட்டற அன்பை பொய்னு சொல்ற பாலா, ஆஜித்கிட்ட காட்டறதுக்கு பேர் என்ன? சாம் மேல வச்ச அன்புனால தான் சோமை தோக்கடிச்சாரு. ஆனா சோம் யாரையுமே காயப்படுத்தலைனு அவர் கேட்ட கேள்வி எல்லாமே பாலா சம்பந்தபட்டது.

ஆஜித் கிட்ட தம்பினு சொல்லி அன்பா இருக்கலாம். ஆனா எப்பவும் அதை வெளிய சொன்னதில்லையே. நான் உனக்கு அன்பு காட்டறேன்னு பாலா என்னிக்குமே சொன்னதில்லை. கேப்டன்சி டாஸ்க்ல சோமை தோக்கடிச்சுதுக்கு மெயின் காரணம் அவனை ஒரு பப்பட் மாதிரி யூஸ் பண்ணுவாங்கனு தான். ஆனா சாம் மேல அன்புனு மாத்தி போடறாரு ரியோ. அங்க சாம்க்கு பதில் வேற யார் இருந்திருந்தாலும் பாலா அதை தான் பண்ணிருப்பான். அப்புறம் ரொம்ப நேரம் கழிச்சு போனா போகுதுனு ஆஜித் பத்தியும் ரெண்டு கேள்வி கேட்டாரு.

ஆனா நேத்து போனை தொட்டு பேசும் போது ரியோவுக்கு சந்திராஷ்டமம். கூடவே நாக்குல சனி பகவான் வேற வந்துட்டாரு. அதனாலா என்னாச்சு ஆளில்லாத ட்ராக்குனு நினைச்சு புல்லட் ரெயில் வர ட்ராக்ல போய் பர்பாமன்ஸ் பண்ணிருக்காரு. புல்லட் ரயில் வந்து அடிச்சுண்டு போய்டுத்து.

ஆஜித் கூட கான்வோவை ஆரம்பிக்கும் போதே ஒரு விஷயம் சொல்றாரு ரியோ. "இங்க எல்லா விஷயத்தையுமே கேமா பார்க்கக்கூடியவங்க இருக்காங்க உதாரணத்துக்கு அனிதா, சனம். இவங்க வந்து டாஸ்க்கை டாஸ்க்கா பார்ப்பாங்க, வீட்டுக்குள்ள பேசும் போது கூட இது வெளிய எப்படி தெரியும், இதை மக்கள் பார்க்கும் போது தப்பா எடுத்துப்பாங்களானு யோசிச்சு பேசக்கூடியவங்க. அவங்க உக்காந்து பேசினா கூட கேமை பத்தியும், பிக்பாஸ் பத்தியும் பேசுவாங்கனு நம்ம எல்லாருக்குமே தெரியும். ஆனா அவங்க வாய்ல இருந்து நாங்க ரெண்டு பேரும் க்ளோஸ் ஆகிட்டோம்னு சொன்னாங்க. அது பார்க்கவே ரொம்ப அழகா இருந்தது.* இப்ப எனக்கு ஒரு கேள்வி, இந்த வீட்ல எல்லாமே கேம், எல்லாமே ஸ்ட்ராட்டஜினு யார் சார் சொல்றா? என்று கேட்டு முடித்தார் ரியோ. அதற்கு பிறகு மேல சொன்ன படி பேசி முடித்தார் ரியோ.

" பாலா கிட்ட கேக்க வேண்டிய கேள்வி எல்லாம் ஆஜித் கிட்ட கேக்கறாருனு" ரியோ பேசிட்டு இருக்கும் போதே வீட்டுக்குள்ள ரம்யா சொல்றாங்க. அதை சனமும் ஆமோதிக்கறாங்க.

பேசி முடிக்கும் போது ஆஜித் பேசினது ரொம்பவே அழகா இருந்தது. நீங்க நாமினேட் ஆகக்கூடாதுனு அவனே கால் கட் பண்ணிட்டான். பேசி முடிச்சு வெளிய போகறாங்க. எப்பவும் போல ரியோ வெளிய வந்து கட்டிப் பிடிச்சு ஓவர் ரியாக்சன் கொடுத்தாரு. "நான் பாலாவை பத்தி கேட்டதா ஏத்தி விடுவாங்க, என்ன சந்தேகம்னாலும் என்னை வந்து கேளு, நான் பாலாவை பத்தி ரெண்டு கேள்வி தான் கேட்டேன். மத்ததெல்லாம் இந்த வீட்ல நடக்கற பொதுவான விஷயங்கள் தான்னு" தன்னிலை விளக்கம் கொடுத்தாரு. ரியோவும், ரமேஷும் சேர்ந்து ஆஜித்தை வீட்டுக்குள்ள தூக்கிட்டு போனாங்க.

ரியோ தன்னை பத்தி என்ன பேசிருப்பாருனு மைண்ட்ல ப்ராஸஸ் பண்ணிட்டு இருந்தாங்க சனம். டேஞ்சரஸ் சைன் யூ நோ. வெளிய ஒரு நிவர் புயலோட சேர்த்து கஜா புயலும் உருவாகிட்டு இருக்குனு தெரியாம உள்ல ரியோ ஹாப்பியா இருந்தாரு. அனிதா பேரையும் சொன்னதால அவங்களையும் கூட சேர்த்துகிட்டாங்க. ரியோ நம்மளை பத்தி பேசினது நல்லவிதமா இருக்கும்னு எனக்கு தோணலைனு அனிதா கிட்ட சொல்லவும், சாதாரண புயல் அதிதீவிர புயலா மாறிடுச்சு.

சோ முடிஞ்ச வரைக்கும் ரியோ பேசினதை ரீகேப் செஞ்சு அதுக்கான அர்த்தம் எல்லாம் தெரிஞ்சுட்டு ரியோ கிட்ட பேச போனாங்க சனமும் அனிதாவும். தன்னை புயல் நெருங்கிடுச்சுனு தெரியாத ரியோ, ஜாலியா தான் பேச உக்காந்தாரு.

மேலோட்டமா பார்த்தா ரியோ பேசினதுல தப்பே இல்லை. சனம், அனிதாவோட ப்ரெண்ட்ஷிப் ரொம்ப அழகா இருக்குனு சொன்னது பாசிட்டிவ் தான். அதை தான் சனம் கி ட்ட புரியவைக்க முயற்சி செய்யறாரு ரியோ.

ஆனா ரியோ பேசினதை உன்னிப்பா கவனிச்சா, அவர் சொன்னதுல நிறைய ஸ்டேட்மெண்ட் இருக்குனு தெரியும்.

சனம், அனிதா ரெண்டு பேருமே எல்லா நேரத்திலும் கேம் பத்தி யோசிக்கறவங்க.

ரெண்டு பேரும் என்ன பேசினாலும், அது மக்கள் கிட்ட எப்படி போகும், அவங்க என்ன நினைப்பாங்கனு யோசிச்சு பேசக் கூடியவங்க.

அவங்க சாதாரணமா உக்காந்து பேசினா கூட கேம் பத்தியும், பிக்பாஸ் பத்தியும் தான் பேசுவாங்க.

இந்த ஸ்டேட்மெண்ட்ஸ் தான் சனமோட பிரச்சினை.இது போதாதா ரெண்டு பேருக்கும். "என்னை பார்த்து ஏண்டா அந்த கேள்வியை கேட்டேன்னு கவுண்டமணி செந்திலை அடிச்சுட்டே இருப்பாரில்லியா அந்த மாதிரி ஆகிப் போச்சு.

ரியோ எவ்வளவும் விளக்கம் கொடுத்தும் ரெண்டு பேருமே ஒத்துக்கறதா இல்லை. கேம் கான்சியஸ், கேமரா கான்சியஸ் இந்த வீட்ல எங்களுக்கு மட்டும் தான் இருக்கா? அப்ப ஏன் எங்க பேரை மட்டும் சொன்னீங்கனு மாத்தி மாத்தி கேட்டுட்டே இருந்தாங்க. ஒரு வழியா அவங்க ரெண்டு பேர் கிட்டயும் சாரி கேட்டு, கேமரா முன்னாடி நின்னு பிக்பாஸ் கிட்டயும் சாரி கேட்டாரு ரியோ. அப்பவாவது இது முடிஞ்சுரும்னு நினைச்சிருப்பாரு, ஆனா அங்க தான் விதி அவரை பார்த்து சிரிச்சது.

உள்ள இதெல்லாம் நடக்கும் போது டைனிங் டேபிள்ல சாப்ட்டுட்டு இருந்த பாலா ஆனந்தமா சிரிச்சுட்டு இருந்தார். இதுக்கு கமல் சார் கிட்ட விளக்கம் கொடுக்க வேண்டி இருக்கும்.

சரினு வெளிய வந்த போது ரியோவுக்கு அடுத்த பஞ்சாயத்து ஆரம்பிச்சது. அதாகபட்டது இந்த டாஸ்க் ஆரம்பிக்கும் போது காலர்ஸ் குரூப் ஒரு மீட்டிங் போட்ருக்காங்க. யாருக்கு கால் பேசறதுனு முடிவு செய்யறதுக்கும், சில ரூல்ஸை பத்தியும் பேசிருக்காங்க. அதுல முக்கியமான ஒரு ரூல், யாருக்கு கால் பண்றோம்னு சம்பந்தபட்டவங்க கிட்ட சொல்லக்கூடாது. ஆனா ரியோ அந்த வியியை மீறி, ஆஜித் கிட்ட நான் தான் பேசப்போறதா சொல்லிட்டாரு. இதுவும் ஒரு குற்றம்னு சனம், ஆரி ரெண்டு பேருமே சொல்றாங்க. அதுக்கு மன்னிப்பு கேட்டு முடிக்கறாரு ரியோ.

இதுக்கு இடையில் உள்ள வந்த அர்ச்சனா, தான் யாருக்கு கால் பேசப் போறேன்னு ஷிவானி கிட்ட மட்டும் சொன்னதா வாக்குமூலம் கொடுக்கறாங்க. நாளைக்கு பாலா என்னை கேள்வி கேப்பான்னு சொன்னது தேவையில்லாத ஆணி. ஆனா ஷிவானி அதை பாலா கிட்ட சொல்லவே இல்லை.

ஷிவானியை கூப்பிட்ட சனம், உனக்கு ஆரி தான் போன் பண்ணப் போறாருனு சொன்னதும் தேவையில்லாத ஆணி.

ஆரி vs ஷிவானி ஒரு சம்பவம் காத்துட்டு இருக்கு.

இதை முடிச்சுட்டு பெட்ரூம் போன ரியோவை திரும்பவும் ஒரு பஞ்சாயத்துக்கு கூப்டாங்க ரம்யா. முதல்ல அனிதா குக்கிங் டீம்ல இருந்துருக்காங்க. ஆனா அவரை டீம் மாத்திட்டாரு ரியோ. சமையல் தெரியாதவங்க சமையல் கத்துக்கவும், சாப்பாடு ஆன்டைம்ல வரவும் இதை செஞ்சதா சொல்லிருக்காரு ரியோ.

சமையலே தெரியாதவங்க சமைச்சா அதெப்படி ஆன் டைம்ல சாப்பாடு வரும்னு ரம்யா கேக்கறாங்க. அதுக்கும் ஏதோ பதில் சொல்லி சமாளிக்கறாரு ரியோ. அப்பவும் குறுக்க வந்த அர்ச்சனாவை லெப்ட்ல டீல் பண்ணி அனுப்பிட்டாங்க ரம்யா.

அப்படியே காத்தாட வெளிய போலாம்னு போனவரை அடுத்த பஞ்சாயத்துக்கு கூப்டாங்க சாம். வெசல் வாஷிங் டீம்ல நிஷாவை போடும் போது நிறைய பாத்திரம் வரும்னு சொல்லிருக்காரு ரியோ. அனிதா கிச்சன் டீம்ல இருக்கறதால நிறைய பாத்திரம் விழும்னு கன்வே ஆனது சாம் சொல்லவும், அதை மறுத்து பேசறாரு ரியோ.

இதை அங்கிருந்த இரு ஜோடிக் கண்கள் உக்கிரமாக பார்த்துக் கொண்டிருந்தது. செத்தாண்டா சேகரு.

அடுத்த பஞ்சாயத்துக்கு ஷிவானியும் கூப்பிட என்னை விட்ருங்கடானு அழுதுட்டாரு ரியோ. ஆஜித்துக்கு மட்டும் கால் பண்றதை சொன்னதுக்கான காரணம் கேட்டாங்க. ரமேஷ் ப்ரோ தூங்கறதை மட்டும் நீங்க கேக்கறதே இல்லன்னு கொளுத்தி போட்டுச்சு ஷிவானி. அங்க பார்த்தா பெப்பரப்பேனு தூங்கிட்டு இருக்காரு ரமேஷ்.

ரியோ மன்னிப்பு கேட்டும் சனம், அனிதா ரெண்டு பேரும் அவரை விடறதா இல்லை. அந்த பிரச்சினை தொடர்ந்து போய்ட்டே இருந்தது.

யாராவது கேள்வி கேட்டாங்கன்னா கத்தாம பொறுமையா பதில் சொல்லுங்கனு ரியோவுக்கு அட்வைஸ் பண்ணிட்டு இருந்தாரு ஆரி. இந்த விஷயம் பாலாவுக்கும் ரம்யாவுக்கும் தெரியாம பார்த்துக்கோங்க.

அர்ச்சனாவும் நிஷாவும், பாலா ஷிவானி செய்யறதை இமிடேட் செஞ்சுட்டு இருந்தாங்க. இன்னுக்கு என்ன நடக்குதுனு பார்ப்போம்.

More Bigg boss News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை