பிக் பாஸில் பஞ்சாயத்து.. தன்னை தானே செருப்பால் அடித்து கொண்ட பயில்வான்..!

by Logeswari, Dec 4, 2020, 18:08 PM IST

தனியார் தொலைக்காட்சியில் நான்கு வருடமாக தொடர்ந்து வெற்றி வாகையை சூடி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இதனை பத்மஸ்ரீ கமலஹாசன் சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார். வெற்றிகரமாக மூன்று சீசன்களை கடந்த நிலையில் தற்போது நான்காவது சீசனில் அடி வைத்து 60 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் இன்றுவரை பிக் பாஸ் வீடு சண்டை, சச்சரவுகளால் தான் நிரம்பியுள்ளது. எதிர்பார்த்த அளவுக்கு இந்த சீசன் மக்களை கவரவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ஆரி, பாலா, சனம், அனிதா போன்றவர்கள் இல்லை என்றால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுவாரசியம் என்பது சிறு துளி கூட இல்லாமல் போயிருக்கும். சென்ற வாரத்தில் போட்டியாளர்களுக்கு கால் சென்டர் டாஸ்க் வழங்கப்பட்டது. அந்த டாஸ்க் இந்த வாரம் வரை தொடர்ந்தது. இதில் போட்டியாளர்களுக்கு இடையே பல வித சண்டை உருவானது. டாஸ்க்ல தான் பிரச்சனை பார்த்தா டாஸ்க் முடிஞ்ச பிறகும் சண்டை. டாஸ்கில் போட்டியாளர்கள் பங்கேற்ற விதத்திற்கு ஒன்றிலிருந்து பதின்மூன்று வரை வரிசை படுத்த வேண்டும் என்பது பிக் பாஸின் ஆர்டர்.

நம்பர் 1 இடத்திற்கு சனம், அனிதா, அர்ச்சனா என்று பலரும் மல்லுக்கட்டி நின்றனர். யாரும் விட்டு கொடுக்க தயாராக இல்லை. இதலில் சனம் மற்றும் பாலாஜிக்கு பேச்சு வார்த்தை முத்தியது. இந்நிலையில் பாலாஜி காலில் கிடந்த செருப்பை எடுத்து 'உன்கிட்ட பேசுறதுக்கு என்ன நான் செருப்பாலே அடிச்சிக்கலாம்' என்று சொல்லி அவர் அவரே செருப்பால் அடித்து கொண்டார். இதனை பார்த்த ரசிகர்கள் என்னதான் நடந்தாலும் பாலாஜி இப்படி செய்திருக்க கூடாது என்று பலரும் பாலாஜிக்கு எதிராக தங்கள் பதிவுகளை தெரிவித்து வருகின்றனர்.

More Bigg boss News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்