சனம் ஷெட்டி சீக்ரெட் ரூம்க்கு செல்கிறாராம்.. பிக் பாஸில் கசிந்த உண்மை தகவல்..

by Logeswari, Dec 7, 2020, 17:51 PM IST

தனியார் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி மூன்று வருடங்களாக தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு நான்காவது சீசனில் அடிவைத்துள்ள பிக் பாஸ் பல பரபரப்பான எபிசோடுகளை வெளியிட்டு வருகின்றன. இந்த சீசனிலும் பத்மஸ்ரீ கமலஹாசன் தான் சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார். ஆனால் மற்ற சீசனை ஒப்பிடும் பொழுது இந்த சீசன் கொஞ்சம் சுமாராக தான் இருக்கிறது. சிலர் செட் ப்ரொபேர்ட்டியாக பிக் பாஸ் வீட்டில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

மக்களிடம் யார் குறைந்து ஒட்டு பெறுகிறார்களோ அவர்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவர். இந்நிலையில் கடந்த வாரம் குறைந்த ஓட்டின் அடிப்படையில் சனம் ஷெட்டியை வெளியேற்றினர். 'மக்கள் தீர்ப்பு தான் மகேசன் தீர்ப்பு' என்று வாய் வார்த்தைக்கு மட்டும் கூறி உண்மையாக குறைந்த ஓட்டை பெற்ற அனிதாவை விட்டு விட்டு சேவ் செய்து சனமை வெளியே துரத்தினர். மற்றவர்களை ஒப்பிடும்பொழுது சனம் தான் பிக் பாஸ் வீட்டில் இருக்க தகுதியானவர்கள் என்றும் ஏன் அவரை வெளியே அனுப்பினீர்கள் என்று பல சர்ச்சைகளை மக்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக கிளப்பி வருகின்றனர்.

இந்நிலையில் மக்களின் ஆதரவை எடுத்து கொண்டு சனமை வீட்டிற்கு அனுப்பாமல் சீக்ரெட் அறைக்கு செல்லும் படி அறிவுறுத்தியுள்ளனர். சென்ற சீசனில் சேரனை சீக்ரெட் அறைக்கு அனுப்பியது போல இந்த சீசனில் சனம் சீக்ரெட் ரூமுக்கு செல்ல உள்ளார் என்ற தகவல் கசிந்துள்ளது. இந்த தகவலையடுத்து சனமின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். சனமை மீண்டும் திங்கட்கிழமையில் நிகழும் பிக் பாஸில் காணலாம் என்று 100% உறுதியாக கூறிவருகின்றனர்.

More Bigg boss News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை