ஆந்திராவில் மர்ம நோய் : ஆய்வு நடத்த மத்திய குழு நாளை வருகை

ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டம் ஏலூரில் மர்ம நோய் தொடர்பாக ஆய்வு நடத்த மத்திய அரசு நிபுணர் குழு நாளை வர உள்ளது .

by Balaji, Dec 7, 2020, 17:38 PM IST

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஏலூர் நகரில் கிழக்குவீதி, கொத்த பேட்டா, கொள்ளக்கூடா, மேற்கு வீதி, சனி வாரம் பேட்டா போன்ற பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் வலிப்பு நோய் மற்றும் நுரை நுரையாக வாந்தி ஏற்பட்டு பகுதி மக்கள் ஏலூர் அரசு மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 150க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 350 பேர் மருத்துவமனையில் அனுமதி அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் பலியான நிலையில் 150 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்.

மேலும் 9 பேர் தீவிர சிகிச்சைக்காக விஜயவாடா, குண்டூர் நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று ஏலூரு மருத்துவமனைக்கு வந்து நோயாளிகளுக்கு ஆறுதல் கூறினார்.

இதனிடையே இந்த வினோத நோய் குறித்து ஆய்வு நடத்த மத்திய அரசு 3 நிபுணர் குழுவை அமைத்துள்ளது.டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அவசர சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜாம்ஷெட் நாயர், புனேயை சேர்ந்த வைரஸ் சிகிச்சை நிபுணர் டாக்டர் தியோஷ்தவார், டாக்டர் சங்கர் குல்கர்னி ஆகிய மூவர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். இந்த மூவர் குழு நாளை கோதாவரி மாவட்டம் வந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர் ஆய்வு குறித்த அறிக்கையை நாளை மாலையே மத்திய அரசுக்கு அளிக்க உள்ளனர்.

You'r reading ஆந்திராவில் மர்ம நோய் : ஆய்வு நடத்த மத்திய குழு நாளை வருகை Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை