ரோபோ டாஸ்க் தொடர்ந்தது.. நிஷாவை டார்கெட் செய்த அர்ச்சனா.. பிக் பாஸில் நேற்று என்ன நடந்தது??

by Mahadevan CM, Dec 10, 2020, 11:33 AM IST

அர்ச்சனாவின் ஆக்ரோஷம் தணிந்து அழுகை மட்டும் தொடர்ந்தது. முதலில் கேப்பி சமாதானப் படுத்திக் கொண்டிருந்தார். பிறகு ரியோ வந்து விளக்கமளித்தார். நிஷா எதைப் பற்றி பேசிக் கொந்டிருந்தார் என்பது அவருக்கு தெரியாது என்பது ரியோவின் வாக்குமூலம். அர்ச்சனாவிடம் பேசிய பிறகு தப்பு செய்துட்டோமோ என்ற எண்ணத்தில் நிஷா தனியாக அழுது கொண்டிருந்தார். அப்போது ரியோ தான் அவரை சமாதானப்படுத்தினார். அதை பற்றி அர்ச்சனாவிடம் சொல்லிருக்கலாம். தன் மீது தவறில்லை என்று மட்டும் சொல்லிச் சென்றார் ரியோ. பாலாவும் வந்து சாரி சொன்னார்.

பெட்ரூமிலிருந்து வெளியே வந்த அர்ச்சனா சோமிடம் சென்று மீண்டும் அழுதார். ரியோவிடம் அனுமதி பெற்று அர்ச்சனாவிடம் பேசினார் சோம். கேம் என்பதற்காக எது வேண்டுமானாலும் பேசலாமா என்று அழுத அர்ச்சனாவிடம் தன்னிடம் ஆரி பேசியதை பய்ரிச் சொன்னார். சோம் செல்லப் பிராணி வளர்ப்பது பற்றி ஏதோ பேசியிருப்பார் போல.

இவையெல்லாம் நடந்து கொண்டிருந்த போது நிஷா ஒரு பக்கம் அழுது கொண்டே இருந்தார். பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா நடப்பதை போல், நிஷாவும் எந்த இடத்தில் இருந்தாலும் அழுது கொண்டே இருந்தார். இந்த பிரச்சினையை மட்டும் இவ்வளவு விலாவாரியாக காண்பித்திருக்க வேண்டுமா என்ன? நிஷாவின் விளக்கங்களை, அவரது மன்னிப்பை ஏற்றுக் கொண்டதாக, அர்ச்சனா சொல்லவில்லை. அதனால் மேலும் மேலும் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகி அழுது கொண்டே இருந்தார் நிஷா.

தவறு செய்வது மனித இயல்பு. அந்த தவறின் பின்னால் ஏதேனும் உள்நோக்கம் இருக்கிறதா என்று பார்த்தால் போதும். இங்கு அர்ச்சனாவை காயப்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு நிஷா இந்த தவறை செய்ய வில்லை. நிஷா மட்டுமில்லை, இந்த வீட்டில் பல சந்தர்ப்பங்களில் நடந்த பெரும்பாலான தவறுகள் உள்நோக்கத்தோடு செய்யப்பட்டவை அல்ல. ஆனாலும் இந்த வீட்டில் உள்ளவர்கள் எந்த ஒரு சிறிய தவறையும் மன்னிக்கவோ, மறக்கவோ தயாராக இல்லை. இது அனைவருக்குமே பொருந்தும். ஆனால் அப்படியான தவறுகளை வைத்து தன்னை முன்னிறுத்திக் கொள்வதை தொடர்ச்சியாக அனைவருமே செய்கிறார்கள். பேக்கேஜ் வைத்துக் கொள்ளாதீர்கள் என்று கமல் சார் சொல்வதும் இதைத்தான்.

ஒரு வழியாக முந்தைய நாள் முடிவடைந்தது.

நாள் 66

எந்திரன் படப்பாட்டு தான் போட்டாங்க. இந்த டாஸ்க் இன்றும் தொடரும் என்று குறியீடாம்.

லக்சரி பட்ஜெட் டாஸ்க் தொடர்ந்தது. செயலிழந்த ரோபோக்கள் என்ன செய்ய வேண்டும் என்று அறிவிப்பு வந்தது. ஆனா கடைசி வரைக்கும் அந்த மாதிரி யாருமே செய்யலை. என்ன டாஸ்க்கோ.

நேத்து கொஞ்சம் ஓவரா போனதால இன்னிக்கு அடக்கி வாசிச்சாங்க. கேப்பியை சிரிக்க வைக்கற பொறுப்பை ரியோவும், ஆஜித்தும் எடுத்துக்கிட்டாங்க. ஒரு கட்டத்துல கேப்பி லைட்டா சிரிச்சாலும் அவங்க ஒத்துக்கலை. ஒரு வழியா சிரிச்சுட்டாங்கனு சொல்லி ஒரு ஹார்ட்டை எடுத்துட்டு ஆரி கிட்ட அனுப்பி வச்சாங்க.

கோபப்படுத்தற வேலையை ஆரி எடுத்துருக்கார் போல. நேத்து ரமேஷ் இன்னிக்கு கேப்பி. இதை ப்ளான் பண்ணி வேற வச்சுருந்தார். இந்த வீட்ல இருக்க உனக்கு என்ன தகுதி இருக்கு? டைட்டில் ஜெயிக்க உனக்கு என்ன தகுதி இருக்கு? னு மாத்தி மாத்தி கேட்டுட்டு இருந்தார். கடைசில இந்த வீட்ல இருக்க உனக்கு தகுதியே இல்லைனு சொல்லிட்டாரு. அன்பிட், தகுதி வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்தறாரு, மத்தவங்களோட தகுதியை கேள்வி கேட்கக் கூடிய அதிகாரம் இந்த வீட்ல ஆரிக்கு மட்டும் தான் இருக்கு போல. சம்யுக்தா, நிஷா, கேப்பினு வரிசையா பெண்களுக்கு மட்டும் தகுதியில்லாம போகுது. எதுவுமே செய்யாத ஆண்களை பார்த்து இந்த கேள்வி கேட்கப்படுவதில்லை.
என்ன தான் டாஸ்க்கா இருந்தாலும் வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசனும். இதுவும் கமல் சார் சொன்னது தான்.

கேப்பியை டார்கெட் பண்ணி அவங்களை செயலிழக்க வச்சுட்டாங்க. பிக்பாஸ் கிட்ட சொல்லும் போது கேப்பி ஒத்துக்கலை. சோம், ரம்யா, ரமேஷ் 3 பேருமே இந்த டாஸ்க்கை சிறப்பா விளையாடினாங்க.

இந்த டாஸ்கோட அடுத்த கட்டமா ரோபோக்கள் மனிதர்களாகவும், மனிதர்கள் ரோபோக்களாகவும் மாறனும். ட்ரெஸ்லாம் செஞ்சு ரூல்ஸ் பத்தி பேசிட்டு இருக்கும் போதே பஸ்ஸர் அடிக்க, முதல் நிமிஷத்துல பாலா சிரிச்சு அவுட் ஆகிட்டாரு.

அதுக்கு முன்னாடி டீம் கேப்டனா, ஆரி, பாலா ரெண்டு பேர்சியும் விட்டுட்டு மத்தவங்களை டார்கெட் செய்வோம்னு முடிவெடுத்திருந்தாங்க அர்ச்சனா. இப்ப பாலா முதல் டார்கெட்டா மாறிட்டாரு. பாலா, நிஷா, ஆஜித் 3 பேரும் அவுட் ஆனாங்க.

நிஷா கிட்ட நேத்து பேசின விஷயத்தை திரும்ப திரும்ப கேட்டுட்டே இருந்தாங்க அர்ச்சனா. ரெண்டாவது ஹார்ட் போனதை பாலா ஒத்துக்கலை.

பாலாவுக்கும் ஷிவானிக்கும் சின்னதா ஒரு மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் வந்துருக்கு. அதை முழுசா காமிக்கலை. ஷிவானி கிட்ட போய் சாரி சொல்றாரு பாலா. இது முந்தின நாள் நடந்தது. பாலா செயலிழந்த ரோபோவா மாறினதுக்கு அப்புறம் அதுக்கான வேலையை செய்ய சொன்னாங்க ஷிவானி. ஆனா ரெண்டாவது ஹார்ட் எடுத்ததை ஏத்துக்க முடியாதுனு மறுத்துட்டார் பாலா.

நேத்து நடந்த முக்கியமான ஒரு சம்பவம் நடந்தது. கடைசி பஸ்ஸர் அடிச்சு டாஸ்க் முடிஞ்ச உடனே அர்ச்சனா, நிஷா, ரமேஷ், ரியோ, கேப்பி ஒரு மீட்டிங் போட்டாங்க. கடைசியா ஆரிகூட தான் பேசிட்டு இருந்தாங்க கேப்பி. அதை பத்தி அர்ச்சனா விசாரிக்கறாங்க. தன்னை அன்பிட், அன்பிட், அன்பிட்னு சொன்னதா கேப்பி சொல்லிட்டு இருக்காங்க. அப்ப "உன்னை காத்தாத்தான் ட்ரை பண்ணிட்டு இருக்கோம்னு உனக்கு தெரியலையா, உள்ள சிரிச்ச போதே ஒரு ஹார்ட் விட்டு கொடுத்திருந்தா உள்ள அனுப்பிருப்போம், தப்பிச்சுருக்கலாம்ல"னு ரியோ சொல்றாரு. " கேப்பி ஒரு ஹார்ட் விட்ருந்தாலும் ஆரி கிட்ட அனுப்பி வச்சுருப்பாங்க, உங்க கேப்டன் பாலா, அதை மறந்துட்டு விளையாட்டுத்தனமா பேசாதீங்கனு" சொன்னது அர்ச்சனா.

அதுக்கு கொஞ்சம் முன்னாடி தான் பாலா, ஆரி, அனிதா, ஆஜித் தனியா பேசறாங்க. ரியோ தன்னோட டீமை காப்பாத்தறா மாதிரி விளையாடறாருனு நேரடியா குற்றம் சொல்றாரு பாலா. கேப்பி சிரிச்ச போது ஹார்ட் எடுக்காம விட்டது உண்மை. அதுக்கு ஆஜித்தும் சாட்சி. கேப்பி ஒத்துக்கலைனு காரணம் சொல்றாரு ரியோ. இது ஒரு பஞ்சாயத்தாக வாய்ப்பிருக்கு. அதனால ஞாபகம் வச்சுக்கோங்க.

இன்னிக்கும் அதே டாஸ்க் தான் கண்டினியூ ஆகும் போல. பொறுத்திருந்து பார்ப்போம்.

More Bigg boss News


அண்மைய செய்திகள்