செல்போன் நெட்வொர்க்களுக்கு புதிய சிக்கல்

டிராய் அறிவிப்பு

Oct 1, 2017, 00:17 AM IST

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ‘டிராய்’ ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை கடந்த வாரம் வெளியிட்டது...

ஒரு மொபைல் நெட்வொர்க் வாடிக்கையாளர் பிற நெட்வொர்க் வாடிக்கையாளருக்கு அழைப்பு விடுக்கும் போது, அதற்கான இணைப்பு சேவைக்காக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்த அழைப்பு கட்டணங்களில் தற்போது மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அக்டோபர் 1ஆம் தேதி முதல் இந்த கட்டண விதிமுறைகள் வழக்கத்திற்கு வருகிறது.

இதற்கு முன்னதாக நிமிடத்திற்கு 14 பைசா கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது, இந்த நிலையில் இக்கட்டணம் தற்போது 6 பைசாவாக குறைக்கப்பட்டுள்ளது.

இதனால், ஏர்டெல், வோடபோன், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5,000 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும் என தெரிகிறது.

மேலும், 2020ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முதல் இந்த கட்டணமும் ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் அழைப்புக்கான இணைப்பு கட்டணம் முழுவதும் ரத்து செய்யப்பட்டால் இந்த நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 கோடி வரையில் இழப்பு ஏற்படும்.

ஆனால், இதன் மூலம் லாபம் சம்பாதிக்க போவது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்தான். மேலும், ஏர்செல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், பிஎஸ்என்எல் உள்ளிட்ட நிறுவனங்கள் ரூ.2,000 - ரூ.3,000 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

டிராய்-யின் இந்த புதிய அறிவிப்பால் மொபைல்போன் அழைப்பு கட்டணமும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், டிராய்-யின் இந்த புதிய விதிமுறைகளால் நிதி இழப்பு ஏற்படும் என தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதனால், இந்த விதிமுறைகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் முறையிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

More Business News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை