குறைந்த வட்டியில் நிறைந்த தொகை ! தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு அரசாங்கத்தின் UYEGP திட்டம் !

How to apply UYEGP a scheme of MSME

by Loganathan, Aug 25, 2020, 13:16 PM IST

உலகமே தொழில்மயமாதலை நோக்கி மிக வேகமாக நகர்ந்து கொண்டிருக்கும் போது நாமும் அதனூடே பயணப்பட வேண்டும். பயணம் பார்வையில் எளிதாக தோன்றினாலும் செயல் முறையில் தகுந்த வாய்ப்பும் , அனுபவமும் இல்லையென்றால் கடினம் . அதனை சரிசெய்து அனைத்து நிலையிலும் பயனாளிகளை உருவாக்க அரசு பல நடவடிக்கைகளையும் , திட்டங்களையும் நடைமுறை படுத்துகிறது அதில் இன்று நாம் பார்க்கவிருப்பது UYEGP . தமிழக அரசு MSME உடன் இணைந்து UYEGP ( Unemployed youth employment Generation Program ) மூலம் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது.

UYEGP திட்டம் என்றால் என்ன ?

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை தொழில் தொடங்க வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் திட்டம் தான் UYEGP . இது தமிழ்நாட்டில் 2010-2011 ல் தொடங்கப்பட்டது . பின்னர் 2014-2015 ல் திட்டமதிப்பீட்டு தொகையின் மானியத்தை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டது. பின்னர் 2016 ல் உற்பத்தி துறைக்கான திட்டமதிப்பீடு உயர்த்தப்பட்டது. அதன்பின் 2019 ல் சேவை மற்றும் வணிகம் சார்ந்த திட்டமதிப்பீடு தொகை உயர்த்தப்பட்டது.

தொழில்களுக்கு 1 இலட்சமாகவும் திட்டமதிப்பீடு

2010-2011 ம் நிதியாண்டில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது . அப்போது உற்பத்தி துறைக்கான அதிகபட்ச திட்டமதிப்பீடு 5 இலட்சமாகவும் , சேவை துறை சார்ந்த தொழில்களுக்கு 3 இலட்சமாகவும் மற்றும் வணிகம் சார்ந்த தொழில்களுக்கு 1 இலட்சமாகவும் திட்டமதிப்பீடு நிர்ணயம் செய்யப்பட்டது. குடும்ப ஆண்டு வருமானம் 1.50 இலட்சத்திற்கு மிகாமல் இருக்கவும் நிர்ணயிக்கப்பட்டது. மானியம் திட்ட மதிப்பீட்டில் 15% அதிகபட்சமாக 75000 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

திட்ட மதிப்பீட்டில் 25%

நான்காண்டு நடைமுறைக்கு பின்னர் 2014-2015 ல் மானியத்தொகை மறுபரிசீலனை செய்யப்பட்டு திட்ட மதிப்பீட்டில் 25% அதிகபட்சமாக 1,25,000 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

திட்ட மதிப்பீடு 5 இலட்சத்தில் இருந்து 10 இலட்சம்

பின்னர் 2016 ல் திட்ட மதிப்பீட்டு தொகை மறு வரையறை செய்யப்பட்டு உற்பத்தி துறை சார்ந்த தொழில்களுக்கான திட்ட மதிப்பீடு 5 இலட்சத்தில் இருந்து 10 இலட்சமாக உயர்த்தப்பட்டது. ஆனாலும் மானியத்தொகையின் அளவு 1,25,000 என்ற வரம்பிலேயே நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் 2019 ஏப்ரல் 25ல் சேவை மற்றும் வணிகம் சார்ந்த தொழில்களுக்கு திட்ட மதிப்பீடு தொகை 3 மற்றும் 1 இலட்சத்தில் இருந்து 5 இலட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது .

மானியத்தொகையில் எந்தவொரு வரம்பும் இல்லாமல் திட்ட மதிப்பீட்டில் 25% ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது ..

தகுதி

1. 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் ( குறைந்தபட்சம் )

2.18 வயது முடிந்து 45 வயதிற்குள் இருக்க வேண்டும். பொது பிரிவு ஆண் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

3. குடும்ப ஆண்டு வருமானம் 5 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் ( Rc.no1901/DIC3/18)
4. விண்ணப்பதாரர் அவர் விண்ணப்பிக்கும் இடத்தில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும்.

இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள்.

1.மாற்று சான்றிதழ் ( TC ) -2 copies
2. குடும்ப அட்டை -2 பிரதிகள்
3. ஆதார் அட்டை -2 நகல்
4.திட்ட அறிக்கை
5. விலை பட்டியல்
6. சாதி சான்றிதழ்
7. நோட்டரி பப்ளிக் இடமிருந்து பெற்ற affidavit
8. வாடகை ஒப்பந்தம்

விண்ணப்பிக்க வேண்டிய முறை

1. msmeonline.tn.gov.in/uyegp மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

2. இ- சேவை மையம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்

You'r reading குறைந்த வட்டியில் நிறைந்த தொகை ! தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு அரசாங்கத்தின் UYEGP திட்டம் ! Originally posted on The Subeditor Tamil

More Business News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை