நெறஞ்ச மனசுஅண்ணன் விஜயகாந்த்.. தமிழிசையின் வைரல் வாழ்த்து!

neranja-manasu-brother-vijayakanth-tamil-music-s-viral-greeting

by Sasitharan, Aug 25, 2020, 13:40 PM IST

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்தின் 68-வது பிறந்தநாளை அவரது தொண்டர்கள் வெகு சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். விஜயகாந்த்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். ஓபிஎஸ் நேற்று பிறந்தநாள் வாழ்த்து சொல்லினார். இதற்கிடையே, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர ராஜன் விஜயகாந்த்துக்கு வித்தியாசமான முறையில் வாழ்த்து சொல்லியுள்ளார். விஜயகாந்த் நடிப்பில் வெளியான படங்களின் பெயர்களைக் கொண்டு கவிதைத் தொகுப்பு போல் வாழ்த்து சொல்லி இருக்கிறார்.

``வானத்தைப் போல" பரந்த மனதுடன் இருப்பதால் அனைவரின் அன்பையும், "மரியாதை"யையும் பெற்று "புலன் விசாரணை" செய்தாலும் எந்த குறையும் கண்டுபிடிக்க முடியாத அன்பின் "சகாப்தமாக" "கேப்டனாக" "மரியாதை"யுடன் "நெறஞ்ச மனசுடன் வலம் வந்து கொண்டிருக்கும் அண்ணன் திரு.விஜயகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். பூரண உடல் ஆரோக்கியத்தோடு நீண்ட ஆயுளுடன் மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்" என்று கூறியுள்ளார்.

மேலும் தொலைப்பேசியிலும் தொடர்புகொண்டு விஜயகாந்த்துக்குத் தனது வாழ்த்துக்களைச் சொல்லியுள்ளார். எனினும் தமிழிசையின் பேஸ்புக் வாழ்த்து இப்போது வைரலாகி வருகிறது.

You'r reading நெறஞ்ச மனசுஅண்ணன் விஜயகாந்த்.. தமிழிசையின் வைரல் வாழ்த்து! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை