15 நிமிடத்தில் PAN CARD பெறுவது எப்படி?

How to get PAN Card Instantly?

by Loganathan, Aug 27, 2020, 15:11 PM IST

இன்றைய கால கட்டத்தில் PAN CARD என்பது இன்றியமையாத ஒன்றாக உள்ளது. வங்கிகளில் கணக்கு தொடங்குவது முதல் அடையாள அட்டை வரை PAN CARD பயன்படுகிறுது.

* மத்திய அரசு அண்மையில் PAN CARD மற்றும் AADHAAR CARD யை இணைப்பதற்கான தேதியை நீட்டித்தும் தவறுபவர்களுக்கு தண்டனை தொகை விதிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

* வங்கிகளில் கணக்கு தொடங்குவதற்கும் PAN CARD பயன்படுகிறுது.

* வங்கிகளில் அதிகமான பண பரிவர்த்தனை நடைபெறும் போது PAN CARD இன்றியமையாததாக உள்ளது .

இந்த PAN CARD யை பெறுவதற்கான வழிமுறைகளை மத்திய அரசின் வருமான வரித்துறை மிகவும் எளிதாக்கியுள்ளது.

புதியதாக PAN CARD பெற விரும்புவோர் மத்திய அரசின் இணையதளமான www.incometaxindiaefiling.gov.in என்பதனை இயக்கி அதில் instant pan through aadhaar என்ற தொடர்பின் மூலம் எளிதாக PAN CARD யை பெறலாம்.

நிபந்தனைகள்

1. நீங்கள் வேறு பான் கார்டு வைத்திருக்க கூடாது.

2. உங்களின் ஆதார் அட்டையுடன் மொபைல் நம்பர் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும்.

3. ஆதார் அட்டையில் உங்களின் பிறந்த தேதி மற்றும் பெயர் சரியாக இருக்க வேண்டும்.

உங்கள் ஆதார் எண்ணுடன் மொபைல் நம்பர் இணைக்கப்படாமல் இருந்தால் இந்த முறையில் நீங்கள் பான் கார்டு பெற முடியாது .

இணையவழி பயனாளர் சரிபார்த்தலுக்காக(e-Kyc ) உங்கள் மொபைல் நம்பர் ஆதாருடன் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும்.


உங்களின் ஆதார் எண்ணை உள்ளீடு செய்துவுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் நம்பருக்கு ஒரு குறியீட்டு எண் குறுஞ்செய்தி மூலம் UIDAI ல் இருந்து பெறப்படும். அதனை உள்ளீடு செய்து பின்னர் விவரங்களை சரிபார்த்து உறுதிபடுத்தியவுடன் உங்களுக்கு ஒரு Reference number அனுப்பப்படும்.

பின்னர் தங்களின் PAN நிலையறிய உங்கள் ஆதார் அல்லது Reference number உள்ளீடு செய்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

More Business News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை