வெளிநாடு சென்றதால் தீ விபத்திலிருந்து தப்பிய உலக நாயகன் நடிகை..

Fire at Actress Radhi Appartment,

by Chandru, Aug 27, 2020, 15:18 PM IST

ரஜினிகாந்த் நடித்த முரட்டுக்காளை, கமல்ஹாசன் நடித்த உல்லாச பறவைகள் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை ரதி. ஒரு காலகட்டத்துக்குப் பிறகு பாலிவுட்டில் நடிக்கச் சென்றவர் அதன்பிறகு தமிழ் பக்கம் அதிகம் தலை காட்டவில்லை. இந்தியில் கமலுடன் நடித்த 'ஏக் துஜே கே லியே' படத்தில் நடித்து அப்படம் வரவேற்பைப் பெற்றது. மேலும் அமிதாப்பச்சன் நடித்த கூலி, அனில் கபூர் நடித்த, ஆப் கே சாத், தர்மேந்திரா நடித்த ஹுகுமத் போன்ற பல படங்களில் நடித்தார்.

தொழில் அதிபர் அனில் விர்வான் என்பவரை மணந்த ரதிக்கு தனுஜ் விர்வானி என்ற மகன் இருக்கிறார். சமீபத்தில் கணவரிடம் விவாகரத்து பெற்றுப் பிரிந்தார். நடிகை ரதியும் அவர் மகனும் மும்பை ஒர்லி பகுதியில் உள்ள 15 அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.இந்த குடியிருப்பில் நேற்று இரவு திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்க போராடினர். 8வது மாடி வரை மட்டுமே செல்ல முடிந்தது. 10வது மாடியில் சுமார் 10 பேர் சிக்கி இருந்தனர். இதையடுத்து 8வது மாடியில் உள்ள ரதி வீட்டு ஜன்னலை உடைத்துச் சென்று அங்குச் சிக்கியிருந்தவர்களை மீட்டனர்.நடிகை ரதி, போலந்து நாட்டில் இருக்கிறார். அவர் மகன் தனுஜ் பண்ணை வீட்டில் இருந்துள்ளார். இதனால் விபத்திலிருந்து அவர்கள் தப்பினர்.

You'r reading வெளிநாடு சென்றதால் தீ விபத்திலிருந்து தப்பிய உலக நாயகன் நடிகை.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை