இந்த மாதத்தின் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை பங்குச்சந்தையின் நிலையில்லாத் தன்மையால் ஏற்ற இறக்கங்கள் உடன் இருந்தது. இந்நிலையில் இந்த வாரம் சந்தை ஒரு அளவு நிலைத்தன்மையை அடைவதற்கான வாய்ப்பு இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தங்கத்தின் விலையானது கடந்த வாரத்தை விட உயர்ந்திருந்தாலும் , நேற்றைய விலையை விடச் சற்று குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூபாய் 4947 க்கு விற்பனையானது . ஆனால் இன்று கிராமிற்கு 38 ரூபாய் குறைந்து , கிராமானது 4909 க்கு விற்பனையாகிறது.
ஆபரணத்தங்கம் (22k)
1 கிராம் -4909
8 கிராம் ( 1 சவரன் ) - 39272
தூய தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கத்துடனே உள்ளது.நேற்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலையானது ரூபாய் 5194க்கு விற்பனையானது. ஆனால் இன்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலை ரூபாய் 38 குறைந்து , கிராமானது ரூபாய் 5156க்கு விற்பனையாகிறது.
தூய தங்கம் (24k)
1 கிராம் - 5156
8 கிராம் - 41248
வெள்ளியின் விலை
வெள்ளியின் விலையானது இன்று கிராமிற்கு 1.20 பைசா குறைந்து , கிராம் 69.80 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூபாய் 69800 விற்பனையாகிறது.