அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய் கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 16 காசுகள் சரிவைக் கண்டது .வங்கிகள் மற்றும் எண்ணெய் இறக்குமதியாளர்களுக்கிடையே டாலருக்கான தேவை அதிகரித்துக் காணப்பட்டது. இதன் காரணமாகச் செவ்வாய் கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பானது சரிவைக் கண்டது . ரூபாய் மதிப்பு வர்த்தகத்தின் தொடக்கத்தில் 73.33 ஆக வலுப்பெற்றுக் காணப்பட்டது.
இந்நிலையில் சாதகமற்ற காரணங்களால் ரூபாய் மதிப்பு வலுவான நிலையிலிருந்து சரியத் தொடங்கியது . ஒரு கட்டத்தில் ரூபாய் மதிப்பானது 73.72 வரை சென்றது . பின்னர் சந்தையின் இறுதியில் 16 காசுகள் குறைந்து முடிந்தது.