பங்குச் சந்தை : 8 நிறுவனங்கள் இழந்தது ரூ 1.5 லட்சம் கோடி

Share market : 8 companies lost 1.5 lac crores rupees

by Balaji, Sep 27, 2020, 17:14 PM IST

பங்கு சந்தையில் கடந்த வாரம் எட்டு முன்னணி நிறுவனங்கள் ஒன்றரை லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளன.
மும்பை பங்குச் சந்தையில் இந்த வாரம் 10 உயர் மதிப்புள்ள நிறுவனங்களின் பட்டியலில் ரிலையன்ஸ் .டிசிஎஸ், எச்டிஎப்சி பேங்க். ஹிந்துஸ்தான் யுனி லீவர் லிமிடெட்., இன்போசிஸ், எச்டிஎஃப்சி, கோடக் மகேந்திரா பேங்க், ஐ சி ஐ சி ஐ பாங்க், ஏர்டெல், எச்சிஎல் டெக்னாலஜிஸ். ஆகியவி இடம் பெற்றுள்ளது. இந்த 10 நிறுவனங்களில் 8 நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக தங்கள் பங்குச் சந்தை மதிப்பில் 1.5 லட்சம் கோடியை கடந்த வாரம் இழந்துள்ளன .


பெரும் தொகை இழந்த நிறுவனங்களில் முதலில் இருப்பது ரிலையன்ஸ் நிறுவனம் தான். அது இழந்த பங்கு மதிப்பு ரூ. 70,189. 95 கோடி ஆகும். ஏர்டெல் நிறுவனத்தின் இழப்பு ரூ. 31,096.67 கோடி. ஐ சி ஐ சி ஐ வங்கி அதன் பங்கு சந்தை மதிப்பில் ரூ.14,752.95 கோடியை இழந்தது. எச்டிஎஃப்சி வங்கி அதன் பங்கு மதிப்பில் ரூ. 12,737.66 கோடியை இழந்தது. டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் இழப்பு ரூ. 10,675.53 கோடியாகும். நுகர்வு பொருள் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமான இந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் அதன் பங்குகளின் மதிப்பில் ரூ 4,828.34 கோடியை இழந்து விட்டது.
இந்த சரவில் இருந்து தப்பியவை எச்.சி.எல் டெக்னாலஜிஸ் மற்றும் இன்ஃபோசிஸ் ஆகும். எச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் பங்கு சந்தை மதிப்பு ரூ. 4,450.79 கோடி அதிகரித்துள்ளது. இன்போசிஸ் நிறுவனத்தின் பங்குச் சந்தை மதிப்பு ரூ. 3,622.14 கோடி உயர்ந்துள்ளது.

You'r reading பங்குச் சந்தை : 8 நிறுவனங்கள் இழந்தது ரூ 1.5 லட்சம் கோடி Originally posted on The Subeditor Tamil

More Business News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை