தேன்நிலவு தம்பதிகளுக்காக ஸ்பெஷல் பீடா திண்டுக்கல் நிறுவனம் அறிமுகம் செய்தது

Special Beeda for honey moon dindigul special

by Balaji, Sep 27, 2020, 17:07 PM IST

திருமணம் முதல் திருவிழாக்கள் வரை பீடா பயன்படுத்தாத நபர்களே காணமுடியாது, குறிப்பாக பீடாவுக்கென்றே ரசிகர்கள் இருக்கிறார்கள். ஒட்டன்சத்திரத்தில் இருந்து திண்டுக்கல் செல்லும் பிரதான சாலையில் உள்ள அபூர்வா உணவகம் வளாகத்தில் அமைந்துள்ளது கிங் பீடா ஸ்டால்.
இந்த ஸ்டாலில் எண்ணற்ற விதமான பீடா வகைகளை தயாரித்து வழங்கி வருகின்றனர், அதில் மிகவும் சிறப்பானதாக கருதப்படுவது புதுமணத் தம்பதிகளுக்கு என பிரத்யேகமாக தயாரிக்கப்படும் ஹனிமூன் கப்புல் பீடா என்பதுதான்.


இந்த பீடா மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து எடுக்கப்பட்ட சுத்தமான தேன், குங்குமப்பூ, மகரந்தபூ, வாசனை திரவியம், புதினா, கொல்கத்தா வெற்றிலை, பாதாம், பிஸ்தா, முந்திரி, உள்ளிட்ட இயற்கை மூலிகைகளைக் கொண்டு புதுமண தம்பதிகளுக்காகவே சிறப்பாக தயாராகிறது. இது தவிர .ஸ்வீட் பீடா, சாக்லேட் பீடா, சில்வர் பீடா,என பல வகைகளிஇரண்டாயிரம் 2000 ரூபாய் வரை பீடாக்களின் விலை உள்ளது.
இயற்கையான மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பீடாக்களை உட்கொள்வதால் உடலில் உள்ள கொழுப்புகளை குறைக்கவும், உடல் சூடு, வாயு பிரச்னை நீங்குவதுடன் ஜீரண சக்தியும் அதிகரிக்கிறது.


மருத்துவ குணம் வாய்ந்த இந்த பீடாவிற்கு ஒட்டன்சத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பழனி, வேடசந்தூர், திண்டுக்கல், கொடைக்கானல் என சுற்றுவிட்டாரா பகுதியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. சினிமா பிரபலங்ககளும் நேரடியாக இங்கு வந்து பீடாவை மொத்தமாக வாங்கி செல்வதுண்டாம்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More Special article News

அதிகம் படித்தவை