பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து சிரோமணி அகாலிதளம் வெளியேறி விட்டது என்று அக்கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் அறிவிததுள்ளார்.
ப ஞ்சாப் மாநிலம் முழுக்க விவசாயிகள் சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் சூழ்நிலையில் சிரோமணி அகாலி தளத் தலைவர் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். சிரோமணி அகாலி தளத்தின் உயர்மட்ட கமிட்டியின் ஆலோசனைக் கூட்டம் சண்டிகர் நகரில் நடந்தது. இந்த கூட்டத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறுவது என்று ஏகமனதாக முடிவு செய்யப்பட்டதாக பாதல் அறிவித்தார். வி வசாயிகளின் உணர்வுகளை மத்திய அரசு முழுக்க நிராகரித்துவிட்டது. வேளாண் சீர்திருத்த மசோதாக்களை பலவந்தமாக விவசாயிகள் மீது திணித்து உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
புதுடி ல்லியில் மாநிலங்களவை கூட்டத்தில் என்ன நடந்தது என்பதை நாடே அறியும்.சிரோமணி அகாலி தளத்தின் பிரதிநிதியாக மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார் ஹர்சிம்ரத் கவுர் பாதல். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சீர்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் பதவியை அவர் உதறித் தள்ளினார். ந்தச் சூழ்நிலையில் சிரோமணி அகாலிதளம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து கட்சியின் தலைவர்களுடனும் பொது மக்களுடனும் நான் பல சுற்று ஆலோசனை நடத்தினேன். அதனைத் தொடர்ந்து ஆளும் கூட்டணியிலிருந்து விலகுவது என்று முடிவு செய்யப்பட்டது என பாதல் அறிவித்தார்.
பா ஜக ஆளும் கூட்டணியில் இருந்து வெளியேறுவதை அறிவிக்கும் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். விவசாயிகளின் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் சட்டபூர்வ வாக்குறுதி எதனையும் வழங்க மத்திய அரசு தயாராக இல்லை. ப ஞ்சாபிலுள்ள விவசாயிகளின் உணர்வுகளை மத்திய அரசு புறக்கணித்துள்ளது. ஜ ம்மு-காஷ்மீரில் அலுவல் மொழிகளில் ஒன்றாக பஞ்சாபி சேர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினோம். ஆனால் அந்தக் கோரிக்கையை கூட மத்திய அரசு ஏற்கவில்லை. எனவே இ ந்த சூழ்நிலையில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேற சிரோமணி அகாலிதளம் முடிவு செய்துள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.