திமுகவில் சேருகிறாரா பரோட்டா சூரி.. முக்கியப் புள்ளியுடன் திடீர் சந்திப்பு..

Comedy actor soori mets anpil makesh MLA

by Balaji, Sep 27, 2020, 16:50 PM IST

கொரோனா பேரிடர் காலத்திலும் அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி பணிகளில் எதிர்கால தேர்தல் களத்திற்கு தயாராகி வருகிறது. இதன் பொருட்டு தொண்டர்கள் முதல் மூத்த நிர்வாகிகள் வரை சுறுசுறுப்புடன் செயலாற்ற பல்வேறு யுக்திகளை கையாண்டு அவரவர் தொகுதியை தக்கவைத்துக்கொள்ள பொதுமக்களை சந்தித்து வருகின்றனர். அதேபோல் திரைப்பட நடிகர்களையும், பல்வேறு துறைகளில் பிரபலமாக இருப்பவர்களையும் இழுக்கும் முயற்சியும் வேகமெடுத்துள்ளன.


இந்தநிலையில் திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழியை மரியாதை நிமிர்த்தமாக நடிகர்கள் விமல், சூரி ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்துக்கொண்டனர்.
ஏற்கனவே சில நாட்களுக்கு முன் நடிகர் விமலுக்கு குழந்தை பிறந்ததை அடுத்து அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவரது வீட்டிற்கு சென்று குழந்தைக்கு ஆசி வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது. எணவே இவர்கள் இருவரும் விரைவில் திமுகவில் இணையலாம் என்று கூறப்படுகிறது. வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் இவர்களைப் போன்ற பிரபலங்கள் பிரசாரத்திற்கு பக்கபலமாக இருப்பார்கள் என்று திமுக தொண்டர்கள் நம்புகின்றனர்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More Cinema News

அதிகம் படித்தவை