மேக்னா ராஜ்க்கு இரட்டை குழந்தையா??ரசிகர்களிடையே பரபரப்பு

meghna raj delivers twins

by Logeswari, Sep 27, 2020, 16:41 PM IST

கன்னட திரையுலகில் மிகவும் புகழ் பெற்ற ஜோடிகள் என்றால் சிரஞ்சீவி சார்ஜா மற்றும் மேக்னா ராஜ் மட்டுமே..இவர்களுக்கு ரசிகர்களின் பட்டாளம் மிகவும் அதிகமாக உள்ளது.இருவரும் சேர்ந்து அதிக படங்களில் நடித்தது மட்டும் இல்லாமல் ரீல் ஜோடிகளாக இருந்த இவர்கள் காதலித்து ரியல் ஜோடிகளாக மாறி 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.கடந்த ஜூன் மாதம் சிரஞ்சீவி சார்ஜா திடிரென்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதனால் ரசிகர்களிடையே பெரும் துக்கத்தை ஏற்படுத்தியது.அப்பொழுது மேக்னா ராஜ் 3 மாதம் கர்ப்பமாக இருந்தார் என்று தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் மேக்னா ராஜ்க்கு குழந்தை பிறந்ததாகவும் அதுவும் இரட்டை குழந்தை என்று சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் வெளியாகி வருகிறது.ஆனால் மேக்னா ராஜ் இதனை மறுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது தவறான செய்தி எனவும்..வெளியான புகைப்படங்கள் யாவும் போட்டோஷாப் செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.ஆதலால் என்னை பற்றியும் அல்லது எனது குடும்பத்தை பற்றியும் நான் சொல்லும் தகவல் மட்டுமே உண்மையானது என்பதையும் தெரிவித்து இருந்தார்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More Cinema News

அதிகம் படித்தவை