இந்தியன் வங்கி வழங்கும் கிராமப்புற பெண்களுக்கான தையல் பயிற்சி !

Tailoring training for rural women by Bank of India

by Loganathan, Sep 29, 2020, 13:20 PM IST

கிருஷ்ணகிரி : பெண்களுக்கு , 30 நாட்கள் வழங்கப்படும் இலவச தையல் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என, இந்தியன் வங்கி பயிற்சி நிறுவன இயக்குனர் சங்கர் கணேஷ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர், வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி, கே.ஆர்.பி., அணையிலுள்ள இந்தியன் வங்கி பயிற்சி நிறுவனத்தில், அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வழங்கப்படுகிறது.

தமிழில் எழுதப்படிக்க தெரிந்த பெண்கள் பயிற்சியில் சேரலாம். பயிற்சிக்கான வயது, 18 முதல், 45 வரையுள்ள சுய உதவிக்குழுக்கள், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

பயிற்சி காலங்களில் காலை, மதிய உணவு, தேநீர் ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது. தற்போது இந்நிறுவனம் வழங்கும், 30 நாட்களுக்கான இலவச தையல் பயிற்சியில் பங்குபெற வரும் அக்., 10க்குள் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பயிற்சியிலும், 35 பயிற்சியாளர்கள் மட்டும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

மேலும் விபரங்களுக்கு, இயக்குனர், இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், டிரைசெம் கட்டடம், கே.ஆர்.பி., அணை, கிருஷ்ணகிரி என்ற முகவரியிலோ, அல்லது, 04343 - 240500 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது, 70922 25363, 78688 65346, 94422 47921 என்ற மொபைல்போன் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

You'r reading இந்தியன் வங்கி வழங்கும் கிராமப்புற பெண்களுக்கான தையல் பயிற்சி ! Originally posted on The Subeditor Tamil

More Business News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை