கொரானா தொற்று எதிரொலியால் நெருக்கடியில் உள்ள இந்திய
பொருளாதாரத்தின் வளா்ச்சி நிகழிண்டில் (-) 5.9 சதவீதமாக இருக்கும்
என்றும், அடுத்த ஆண்டு இது உயரும் என்றும் ஐ.நா. தெரிவித்துள்ளது.
சுமார் 300 மில்லியின் மக்கள் உணவு தட்டுப்பாட்டால் பாதிக்கப்படுவார்கள்
என்றும் ஐ.நா. எச்சரித்துள்ளது.
இது தொடா்பான தகவலை ஐ.நா.வின் வா்த்தகம் மற்றும் மேம்பாட்டு
அமைப்பு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
உலக பொருளாதார வளா்ச்சி நிகழாண்டில் (-) 4.3 சதவீதமாக இருக்கும்.
இதனால் உலக அளவில் ரூ.441 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும்
என கொரானா பரவலுக்கு முன்பே பொருளாதார நிபுணர்கள் கணித்தனர்.
மேலும், இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி நிகழாண்டில் (-) 5.9 சதவீதமாக
இருக்கும். அடுத்த ஆண்டு 3.9 சதவீதம் வளா்ச்சி பெற வாய்ப்புள்ளது என்றும் அறிவித்துள்ளது.இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட தீவிர பொதுமுடக்கத்தால் நாடு
முழுவதும் உற்பத்தி நிறுத்தப்பட்டதன் காரணமாக ஏற்பட்ட
பொருளாதார நஷ்டம் என்பது நிரந்தர வருவாய் இழப்பாகும். 2021-ஆம்
ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி அதிகரிக்கும் என்றும் ஐநா தெரிவித்துள்ளது.