உங்கள் பொருளாதார நலனையும் காக்க வேண்டும்! நம்மால் முடியும்-பாகம் 3

by Rahini A, Mar 23, 2018, 21:15 PM IST

என்னை 'முதலீடுகளின் முதல்வன்' என்றே சொல்லலாம். நான் முனைவர் பட்டம் பெற்றது என்னவோ உயிரியல் அறிவியலில்தான். ஆனால், பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னர் கனடாவுக்கு வந்து சேர்ந்த போது ஒரு முக்கியமான வாழ்க்கைப் பாலிஸி ஒன்றை உணர்ந்தேன். அதாவது, பொருளாதார சுதந்திரம் என்பது சம்பளம் பெற்றுத்தரும் 9-5 மணி வரையிலான ஒரு அன்றாட வேலை இல்லை. உண்மையில் வருங்கால பொருளாதார நெருக்கடி குறித்த எந்தவொரு மனக்கவலையும் இன்றி வாழ்வதற்கான வழியை அறிவதே பொருளாதார சுதந்திரம்.

நம்மில் அநேகர் பணம் கூரையைக் கிழித்துக்கொண்டு விழுமா என்று மேலே நிமிர்ந்து பார்த்துக்கொண்டு மட்டுமே காலம் தள்ளுவோம். இப்படி அதிர்ஷ்டக் காற்று வீசும் எனக் காத்துக்கொண்டு மட்டுமிருந்தால் முன்னேற்றத்துக்கும் காத்துக்கொண்டுதான் இருக்க வேண்டும். நாம் எப்போது எங்கு எப்படி நிலைப்பெற்று நிற்க வேண்டும் என்று குறிக்கோள் வைத்துக்கொள்கிறோமோ அப்போதுதான் நாம் நினைத்த இடத்தை அடைய முடியும்.

உங்கள் பொருளாதார நலனுக்காக ஒரு 10 டிப்ஸ்

1. உங்களுக்காக ஒரு சம்பளம் கொடுங்கள்:

சம்பளம் வாங்கியக் கையோடு உங்களுக்கே உங்களுக்கென ஒரு குறிப்பிட்ட தொகையை சம்பளமாக எடுத்துக்கொள்ளுங்கள். அதுதான் உங்கள் சேமிப்பு, உங்கள் எஇர்காலத்துக்கான முதலீடு. உங்கள் கனவு எதுவானாலும், அது கல்வி, திருமணம், சொந்த வீடு என எதுவாக இருந்தாலும் சரி, பின்னாளில் அந்தக் கனவை அடைய இந்த சேமிப்பு சம்பளம் உதவும்.

2. தானா சேர்க்கணும்:

சேமிப்பு என்பது ஒவ்வொரு மாதமும் எந்தவித அலாரமும் ரிமைண்டரும் இல்லாமல் அதுவாகவே சம்பளத்தில் ஒரு பகுதி சேமிப்புக்குச் செல்ல வேண்டும். இது உங்களை வீண் செலவு செய்யவிடாமல் பார்த்துக்கொள்ளும். முடிந்தவரையில் நினைத்ததும் எடுக்க முடியாத வகையில் ஒரு சேமிப்புக் கணக்கில் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் செலவு செய்ய முடியாத பணம் உங்கள் சேமிப்பாக சேரும்.

3.  சேமிப்புக்கும் சில தியாகங்கள் வேண்டுமே:

அநாவசிய செலவுகளைக் குறைத்தாலே சேமிக்கலாம். ஒவ்வொரு நாளும் ஒரு அத்தியாவசியம் இருக்கும். அதற்கு செலவு செய்வது வேறு. ஆனால், தினமும் 'கஃபே காஃபி டே' சென்றுதான் காபி குடிக்க வேண்டும் என்ற அவசியம் இருக்காதுதானே. அதை குறைத்துக்கொள்ளலாம்.

4. முதலில் கடனை தீர்த்துக்கட்டுங்கள்!

க்ரெடிட் கார்டு, ஈ.எம்.ஐ, ஜெட் வட்டிக் கடன், கந்துவட்டி எனக் கடனை ஊரைச்சுற்றி எல்லா தெருவிலும் அந்தத் தெருவில் உள்ள எல்லா வங்கியிலும் வாங்கி வைக்காமல் இருந்தாலே கூடுதலாகவே சேமிக்கலாம்.

5. பொருளாதார குறிக்கோள் வேண்டும்!

சின்னதோ பெரியதோ, பொருளாதார ரீதியான குறிக்கோள்களை அவசியம் வைத்துக்கொள்ளுங்கள். ஒரு விடுமுறை பயணம் செல்ல நினைத்தால் ஒரு மூன்று மாதமாவது சேமிக்கலாம். சொந்த வீட்டுக்கு ஒரு மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்குள் சேமிக்க வேண்டும் என உங்களுக்கு நீங்களே ஒரு குறிக்கோள் வைத்துக்கொள்ளுங்கள். பொருளாதார குறிக்கோள் என்பது உங்களை பண ரீதியாக சரியான பாதையில் மட்டுமே வழிநடத்தும்.

6. உடனடித் தேவைக்காக ஒரு சேமிப்பு

ஒரு மூன்று மாதங்களுக்கு குடும்பத்தை வழிநடத்திச் செல்வதற்கான பணம் எப்போதும் உங்கள் சேமிப்பு இருப்பில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் பணியிடத்தில் இக்கட்டான சூழல் ஏற்பட்டாலோ, மருத்துவ ரீதியிலான உதவிகள் தேவைப்பட்டாலோ இந்தப் பணம் உங்களுக்கு உதவும்.

7. வரி வருவாயைக் குறைக்கலாமே..!

நீங்கள் கையாளும் இன்சூரன்ஸ் வகைகள், நன்கொடைகள், நிரந்தர வைப்பு நிதிகள், பிஎஃப் பணம் வரலாறு என அனைத்தையும் தொடர்ச்சியாக கவனத்தில் கொள்ளுங்கள். வருவாய்க்கு ஏற்ற வரி கட்ட வேண்டிய சூழலில் இது உதவும்.

8. எதிர்காலத்தில் முதலீடு செய்யுங்கள்

உங்களது குடும்ப உறுப்பினர்களின் எதிர்காலத் தேவைகளுக்காக கூடுதலாக ஒரு புதிய வேலையைக் கூட நீங்கள் உங்களுக்காகத் தேடிக்கொள்ளலாம். உங்கள்து ஓய்வு காலத்தேவை மிகவும் முக்கியம் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

9. முதலீடு திட்டம் தேவை

மியூச்சுவல் ஃபண்டு, ஷேர் மார்க்கெட், என பொருளாதார ரீதியாந முதலீடு திட்டங்களை தெரிந்துகொண்டு தகுந்ததில் முதலீடு செய்து உங்கள் எதிர்காலத்தை வளமாக்கிக்கொள்ளுங்கள்.

10. வளர்ச்சியில் கவனம் வேண்டும்

உங்கள் பொருளாதார வளர்ச்சியையும் உலக நிதர்சனத்தையும் மனதில் வைத்து நடந்தாலே போதும்!

தொடரும்...                                                                -முனைவர் கோகுல் ஜெயபால்

இந்தத் தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்....

****************************************************************************

 

 

கோகுல் ஜெயபால் ஒரு கனடாவாழ் இந்தியர் ஆவார். மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் டொரன்டோ நகரில் வசித்து வருகிறார். உயிரியல் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ள கோகுல், பயிற்சியாளர், எழுத்தாளர், மனித நேய ஆர்வலர், முதலீட்டாளர் எனப் பன்முகம் கொண்டவர். தனது விடாமுயற்சி மற்றும் சரியான திட்டமிட்ட முதலீடுகள் மூலம் பொருளாதாரச் சுதந்திரம் அடைந்துள்ளார். தான் விரும்பும் பங்கு வர்த்தகத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading உங்கள் பொருளாதார நலனையும் காக்க வேண்டும்! நம்மால் முடியும்-பாகம் 3 Originally posted on The Subeditor Tamil

More Business News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை