அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவன் நான்:சிம்பு ஓபன் டாக்

by Isaivaani, Mar 23, 2018, 21:24 PM IST

அதிக சம்பளம் வாங்கும் பத்து நடிகர்களில் நானும் ஒருவன் என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் கடந்த சில நாட்களாக வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்.

மேலும், இந்த கூட்டத்தில், இயக்குனர்கள் சங்கத்தின் உறுப்பினர் சிம்பு கலந்துக் கொண்டார். அப்போது, கூட்டத்தில் பேசிய சிம்பு, “நடிகர்கள் அதிக சம்பளம் வாங்குவதால் பெரிதாக எதுவும் ஆகிவிடப்போவதில்லை. ஆனால், தமிழ் சினிமாவில் 10 நடிகர்கள் மட்டுமே அதிக சம்பளம் வாங்குகின்றனர். கடவுள் புண்ணியத்தில் நானும் அதில் ஒருவன்” எனத் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவன் நான்:சிம்பு ஓபன் டாக் Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை