இந்தியன் வங்கி வழங்கும் சுயதொழில் வேலைவாய்ப்பு பயிற்சி!

job vaccancy on indian bank

by Loganathan, Oct 14, 2020, 19:25 PM IST

மத்திய அரசின் ஊரக வளர்ச்சி துறை வழிகாட்டுதலுடன், இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் புதுவையில் 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

இங்கு ஏ.சி., பிரிட்ஜ் ரிப்பேரிங் பயிற்சி மற்றும் மேலும் பல பயிற்சிகள் வரும் நவம்பர் 4 ம் தேதி முதல் தொடங்கப்பட இருக்கிறது. இதில் பங்கேற்க ஆர்வமுள்ள 10ம் வகுப்பு முடித்த ஆண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

இப்பயிற்சியில் சேர வருகிற 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சிகள் அனைத்தும் காலை 9.30 மணி முதல் 6.30 மணி வரை முழுநேரம் 30 நாட்கள் நடத்தப்படும்.

கிராமப்புறத்தில் இருந்து வரும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் விபரங்களுக்கு இந்தியன் வங்கி, வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், லெனின் வீதி, குயவர் பாளையம், புதுச்சேரி என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

You'r reading இந்தியன் வங்கி வழங்கும் சுயதொழில் வேலைவாய்ப்பு பயிற்சி! Originally posted on The Subeditor Tamil

More Business News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை