பங்குச்சந்தை கடந்த வாரத்தின் இறுதியில் படு வீழ்ச்சி அடைந்தது. இதனால் தங்கத்தின் விலை படு வீழ்ச்சி அடைந்து 37000 தொட்டது. அதன் தொடர்ச்சியாக பங்குச்சந்தை இந்த வாரத்தின் முதல் நாளிலும் பிரதிபலித்தது. ஆனால் நேற்று பங்குச்சந்தையின் இறுதியில் சற்று ஏற்றத்துடன் முடிந்தது. நான்கு நாட்களின் தொடர் சரிவுக்குப் பின் மீண்டும் உயரத்தொடங்கி உள்ளது தங்கத்தின் விலை. இது முதலீட்டாளர்களுக்குச் சந்தோசத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா பிரதமர் நேற்று இரவு மக்களிடம் மான் கீ பாத் நிகழ்ச்சியின் மூலம் உரையாற்றினார். இதனால் இந்தியப் பங்குச் சந்தை வளர்ச்சி கண்டுள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.இந்த 4 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1544 குறைந்த தங்கம் இன்று ஒரே நாளில் 280 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே ஆபரணத்தங்கத்தின் மதிப்பு நேற்று ஒரு கிராம் விலை ரூ.4683 க்கு விற்பனையானது. ஆனால் இன்று ஆபரணத்தங்கத்தின் விலையானது கிராமிற்கு ரூ.22 விலை உயர்ந்துள்ளது, எனவே ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ரூபாய் 4705 க்கு விற்பனையாகிறது.
ஆபரணத்தங்கம் (22k)
1 கிராம் -4705
8 கிராம் ( 1 சவரன் ) - 37640
தூய தங்கத்தின் விலையும் கடந்த வாரத்தின் முதலே ஏற்ற இறக்கத்துடனே உள்ளது. நேற்று ஒரு கிராம் தூய தங்கம் ரூ.5058 க்கு விற்பனையானது. இன்று ஒரு கிராம் தூய தங்கம் ரூ.22 விலை உயர்ந்து, கிராமானது ரூ.5080 க்கு விற்பனையாகிறது.
தூய தங்கம் (24k)
1 கிராம் - 5080
8 கிராம் - 40640
வெள்ளியின் விலை
ஒருபுறம் தங்கத்தின் விலை வீழ்ச்சி அடையும்போது, மறுபுறம் வெள்ளியின் விலையானது உயரத்தொடங்கியுள்ளது. நேற்றைய விலையில் கிராமிற்கு 1.50 பைசா உயர்ந்து, கிராம் 67.80 ரூபாய்க்கு விற்பனையாகிறது. எனவே ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூபாய் 67800 க்கு விற்பனையாகிறது.