பள்ளி கல்லூரிகள் மூடலால் இந்தியாவுக்கு 400 பில்லியன் டாலர் இழப்பு: உலக வங்கி ஆய்வில் தகவல்..!

400 billion loss to India due to closure of school colleges: World Bank study

by Balaji, Oct 21, 2020, 11:17 AM IST

பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் சுமார் 400 பில்லியன் டாலர் வருமானத்தை இந்தியா இழக்கும் என உலக வங்கி ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.கொரோனா காரணமாக நாடு முழுவதும் கல்வி நிலையங்கள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் மூலம் கல்வி பயின்று வருகின்றனர். ஆனால் இந்த ஆன்லைன் கல்வி மாணவ மாணவிகளுக்கு முழுமையான கல்வியை அளிப்பதில்லை என்கிறார்கள் கல்வியாளர்கள்.

இந்த நிலையில் உலக வங்கி இது குறித்து ஒரு ஆய்வு மேற்கொண்டது . இந்த ஆய்வில் இந்தியாவில் தற்போது பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் சுமார் 400 பில்லியன் டாலர் வருமானத்தை நாடு இழக்கும். இதுவே தென் ஆசியப் பகுதியைக் கணக்கிட்டால் 622 பில்லியன் டாலர் அளவில் இருந்து 880 பில்லியன் டாலர் அளவிலான வருமானத்தை இழக்க நேரிடும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கொரோனா காரணமாகப் மற்ற நாடுகளைக் காட்டிலும் தெற்காசிய நாடுகள்தான் அதிகளவிலான பொருளாதாரம் மற்றும் வர்த்தகப் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது. வரலாறு காணாத வகையில் எல்லா துறைகளிலும் பணிநீக்கம், சம்பள குறைப்பு, நிதிப் பற்றாக்குறை, நிறுவனங்கள் திவாலாகும் நிலை, வங்கிகளில் அதீத வராக்கடன் என அடுக்கிக்கொண்டு போகும் அளவிற்குத் தென் ஆசிய நாடுகளில் தற்போது பிரச்சனைகள் அதிகமாக உள்ளது.

இதேவேளையில் கொரோனா பாதிப்பு காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டதால் சுமார் 391 மில்லியன் மாணவ மாணவிகள், பள்ளிக்குச் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதனால் பிற நாடுகளில் காட்டிலும் தென் ஆசிய நாடுகளில் கல்வியில் மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது எனவும் இதிலிருந்து மீண்டு வரப் பள்ளி மற்றும் அரசு நிர்வாகம் போதிய நடவடிக்கைகள் எடுத்தாலும், மாணவ மாணவிகளுக்கு முழுமையான கல்வியைக் கொண்டு சேர்க்க முடியவில்லை என உலக வங்கி தெரிவித்துள்ளது.

தென் ஆசிய நாடுகளில் பள்ளிகள் மார்ச் மாதம் மூடப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட அரை வருடம் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் learning-adjusted years of schooling (LAYS) அளவீடு 0.5 புள்ளிகள் குறைந்து. தற்போது அளவீடான 6.5 LAYS அளவீடு, 6.0 LAYS அளவீடாகக் குறைந்துள்ளது. LAYS அளவீடு என்பது கல்வி கிடைத்தலும், அதைப் பயன்படுத்தலுக்குமான அளவீடு. இதை உலக வங்கி அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது. இதில் கல்வியின் தரம் மற்றும் பயிலும் கால அளவீடும் ஆய்வு செய்யப்படுகிறது.

4,400 டாலர் இந்தப் பாதிப்பால் 6 மாதம் பள்ளிக் கல்வியை இழந்த மாணவர்கள் வேலைக்கும் வரும் போதும் அவர்களின் வருமானத்தில் 4,400 டாலர் குறையும் என்றும், இது தென் ஆசிய நாடுகளின் சராசரி வாழ்நாள் வருமானத்தில் 5 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது என உலக வங்கி தெரிவித்துள்ளது. 880 பில்லியன் டாலர் தெற்காசிய நாடுகள் தனது மக்கள் மூலம் இத்தகைய பாதிப்பால் சுமார் 622 பில்லியன் டாலர் வருமானத்தை இழக்க நேரிடும், கல்வி இடைவெளி மிகவும் மோசமாகவும் பாதிப்பு அதிகமாக இருக்கக் கூடியதாகவும் இருப்பின் இதன் அளவீடு 880 பில்லியன் டாலர் அளவில் உயரக்கூடும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.

தெற்காசிய நாடுகளில் அதிகப் பள்ளி, கல்வி நிறுவனங்கள் இருக்கும் நாடான இந்தியாவில் இந்தக் கல்வி இடைவெளி மூலம் இந்தியா சுமார் 400 பில்லியன் டாலர் வருமானத்தை இழக்க நேரிடும் என்றும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You'r reading பள்ளி கல்லூரிகள் மூடலால் இந்தியாவுக்கு 400 பில்லியன் டாலர் இழப்பு: உலக வங்கி ஆய்வில் தகவல்..! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை