இன்றைய தங்கத்தின் விலை 02-11-2020!

by Loganathan, Nov 2, 2020, 11:54 AM IST

கடந்த அக்டோபர் மாதத்தின் தொடக்கம் முதலே இறங்கிய தங்கத்தின் விலை, மாதத்தின் இறுதியில் சற்று உயரத் தொடங்கியது. ஆனால் நவம்பர் மாதத்தின் தொடக்கமான இன்று தங்கத்தின் விலை பங்குச்சந்தையின் நிலையில்லா தன்மையால் இறங்கியுள்ளது. ஆனால் இந்த வாரத்தின் இறுதியில் தங்கத்தின் விலை சற்று உயர வாய்ப்புள்ளது.

இந்த மாதத்தில் விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்கள் உள்ளதால் தங்கத்தின் விலை உயர வாய்ப்புள்ளதாக வல்லுனர்கள் கூறுகின்றனர். நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.4760 க்கு விற்பனையானது. ஆனால் இன்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூபாய் 1 குறைந்து, கிராமானது ரூ‌ 4759 க்கு விற்பனையாகிறது.

ஆபரணத்தங்கம் (22k)

1 கிராம் - 4759
8 கிராம் ( 1 சவரன் ) - 38072

தூய தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கத்திலேயே உள்ளது. நேற்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலையானது ரூபாய் 5140 க்கு விற்பனையானது. எனவே இன்றைய தங்கத்தின் விலையில் கிராமானது ரூபாய் 1 விலை குறைந்து, கிராம் 5139 க்கு விற்பனையாகிறது.

தூய தங்கம் (24k)

1 கிராம் - 5139
8 கிராம் - 41112

வெள்ளியின் விலை

வெள்ளியின் விலையானது நேற்றைய விலையில் 90 பைசா விலை உயர்ந்து, கிராம் 66.20 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூபாய் 66200 க்கு விற்பனையாகிறது.

You'r reading இன்றைய தங்கத்தின் விலை 02-11-2020! Originally posted on The Subeditor Tamil

More Business News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை